குழந்தையை கடத்தி கொன்றுவிடுவேன்! ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்த பள்ளித் தாளாளர் கைது
சென்னை: தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பள்ளித் தாளாளர் அருண்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் குழந்தையை கடத்தி குடும்பத்தை கொலை செய்துவிடுவதாக பொற்கொடிக்கு மிரட்டல் கடிதம் வந்த நிலையில் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு சதீஷ் என்ற பெயரில் கடந்த வாரம் கொலை மிரட்டல் கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் குழந்தையை கடத்தி குடும்பத்தை கொலை செய்வோம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பொற்கொடி, போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து பெரம்பூரில் உள்ள ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சதீஷ் என்பவர் யார் என போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பள்ளித் தாளாளர் அருண்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் தனது பள்ளியில் பணிபுரிந்து வாகன ஓட்டுநர் சதீஷ் என்பவர் பெயரில் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
கடலூர் முதன்மை கல்வி அலுவலருக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் ஏற்கெனவே பள்ளித் தாளாளர் அருண்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக டிரைவர் சதீஷ் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் சதீஷை பழிவாங்க நினைத்து அருண்ராஜ், அவரது பெயரில் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
நடந்தது என்ன?:பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி பெரம்பூர் செம்பியம் பகுதியில் அவர் புதிதாக கட்டி வரும் வீட்டருகே படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பொன்னை பாலு, அருள், கஞ்சா அஞ்சலை உள்ளிட்ட 21 பேரை போலீஸார் கைது செய்தனர். கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் கொலையில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு தொடர்பு இருப்பதாக அவருடைய குடும்பத்தினர் கருதியதால் பழிக்கு பழியாக இந்த கொலை நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது.
5 பேர் வழக்கறிஞர்கள்: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம், மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை அடையாளம் காட்ட சென்ற போது போலீஸாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற போது ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் வழக்கறிஞர்கள்.
ரவுடி சீசிங் ராஜா மீது மேலும் ஒரு வழக்கு: கைதாகியுள்ள 20 பேரின் சொத்துகளை முடக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ரவுடி சீசிங் ராஜா, சம்போ செந்தில் ஆகியோரை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சம்போ செந்தில் தாய்லாந்து நாட்டிறகு தப்பிச் சென்றதாக சொல்லப்படுகிறது. சீசிங் ராஜா மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மிரட்டல்: பெரம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அவருடைய குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு சதீஷ் என்பவர் பெயரில் ஒரு மர்ம கடிதம் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி வந்துள்ளது. அதில் ஆம்ஸ்ட்ராங்கின் குழந்தையை கடத்தி, அவருடைய குடும்பத்தை கொலை செய்துவிடுவதாக மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி, குழந்தை இருக்கும் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கில்தான் தற்போது பள்ளித் தாளாளர் அருண்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதிய பொறுப்பு: ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும் வழக்கறிஞர் ஆவார். இவர்களுக்கு 2 வயது ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆம்ஸ்ட்ராங் மறைந்ததும் பொற்கொடிக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவரும் தன்னை இனி திருமதி ஆம்ஸ்ட்ராங் என்றே அழைக்குமாறும், பொற்கொடி என்ற பெயரை பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications