கிட்ட கிட்ட நெருங்கி டார்ச்சர்.. கதறிய பெண்கள்.. வாய்க்குள் கொசுமருந்து ஸ்பிரே.. தாளாளர் லைவ் வீடியோ
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த தாளாளர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்
சென்னை: பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியர், திடீரென வீடியோ வெளியிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஆவடியை அடுத்த திருநின்றவூர் இபி காலனியில் தனியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.. இங்கு சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்த பள்ளியின் தாளாளர் பெயர் வினோத்.. 34 வயதாகிறது.. இவர் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு, பாலியல் தொல்லை தந்ததாக தெரிகிறது.

கவுன்சிலிங்
குறிப்பாக, பிளஸ்-2 மாணவிகளுக்கு கவுன்சிலிங் என்ற பெயரிலும், ஸ்பெஷல் கிளாஸ் தொடர்பாக பேச வேண்டும் என்றும், அழைத்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்தாராம்.. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் இதுகுறித்து தங்கள் பெற்றோரிடம் சொல்லி உள்ளார்.. பெற்றோரும் பள்ளி நிர்வாகத்திடம் இதை பற்றி புகார் கூறியுள்ளனர்.. ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார்கள்.. இது வினோத்துக்கு இன்னும் சாதகமாகிவிட்டது.

டார்ச்சர்
அதனால், பாலியல் தொல்லையை அளவுக்கு மீறி தர ஆரம்பித்துவிட்டார்.. ஒருகட்டத்தில் எரிச்சலும், ஆத்திரமும் அடைந்த பெற்றோர்கள், மாணவ - மாணவிகள் 500க்கும் மேற்பட்டோருடன், நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்... அந்த பள்ளி முன்பு மறியலிலும் ஈடுபட முயன்றனர்... வினோத்தை உடனே கைது செய்ய வேண்டும் என்று சொல்லி, பள்ளிக்குள்ளேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.. இந்த தகவலறிந்து தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன், தாசில்தார் வெங்கடேசன், போன்றோர் திரண்டு வந்தனர்.

லீவு 3 நாள்
பெற்றோர்கள், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்... வினோத் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி தரவும், அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்... உடனடியாக பள்ளிக்கு 3 நாட்கள் லீவும் அறிவிக்கப்பட்டது... பின்னர், வினோத் மீது திருநின்றவூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.. ஆனால், இவ்வளவு விஷயம் நடந்து முடிவதற்குள், வினோத்தை காணவில்லை.. தலைமறைவாகிவிட்டார். எனவே, அவரை கைது தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது..

ரகசிய தகவல்
இப்போது வினோத் கோவாவில் பதுங்கி இருப்பதாக ஒரு ரகசிய தகவல் வெளியாகி உள்ளது... அதனால் போலீசாரும் அவரை பிடிக்க விரைந்துள்ளனர்... இப்படிப்பட்ட சூழலில், திடீரென வினோத் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.. அதில் கதறி கதறி அழுகிறார்.. மனமுடைந்து பேசுகிறார்... அழுதுக்கொண்டே வினோத் பேசும்போது, சில மாணவிகளின் பெயர்களை வெளிப்படையாக குறிப்பிட்டே பேசுகிறார்.. வினோத் சொல்லும்போது, "இந்த மாணவிகள் நன்றாக வர வேண்டும் என்றுதான் நினைத்தேன்.. மற்றவர்களின் பெயர்களை சொல்லவில்லையே என்று கவலைப்படாதீங்க.. யாரையும் நான் தப்பாக நினைச்சதில்லை..

கைப்பாவை
எல்லார் மீதும் எனக்கு அன்பு உண்டு... ஆனால் என் மேல போய் இப்படியெல்லாம் சொல்லுவீங்க என்று நினைச்சுகூட பார்க்கல.. நான் அழ மாட்டேன் என்று நினைக்காதீங்க.. உடைஞ்சே போயிட்டேன்.. இன்னும் சாகல.. (கதறி கதறி அழுகிறார்)... அப்பா, நீங்க ஒன்னும், என்னை தப்பா நினைக்க வேண்டாம். நான் ஒரு தவறும் செய்யல.. ஆசிரியர்கள், கணக்கு டீச்சர் (பெயர்களை குறிப்பிட்டு) நீங்கள் எனக்கு கிடைத்தது வரம்... எல்லோரும் முக்கிய மாணவர்கள்... எதுவும் ஆகாது... என்னுடைய மாணவர்களை நான் நம்புகிறேன். அதற்கு பிறகு என்னேவோ... உங்களுக்காகதான் நான் உள்ளேயே வந்தேன்...

ஸ்பிரே
நீங்க எல்லாரும் அனைவரும் நல்ல மாணவர்கள். யாரோ ஒருவர் கைப்பாவைக்காக உங்களுடைய வாழ்க்கையை கெடுத்துக்காதீங்க.. வாழ்க்கை போனால் வராது தம்பி... இதை புரிஞ்சுக்குங்க.. கூடவே இருப்பவர்கள் அப்படித்தான் பேசுவாங்க.. ஆசிரியர்கள் தூண்டி விடுவாங்க.. இது நமக்கு வேண்டாம்... அப்பா, அம்மாதான் முக்கியம்... அவர்கள் தான் கடைசி வரைக்கும் நமக்காக வருவாங்க.. அவங்க சொல்றதை கேளுங்க.. வேற எதுவும் பேசுவதற்கில்லை (திடீரென கொசு மருந்து ஸ்பிரேவை எடுத்து வாய்க்குள் அடித்து கொள்கிறார்) சரி, நான் போகிறேன். கண்டிப்பா பிழைக்க மாட்டேன். அனுதாபம் எல்லாம் கிடையாது...

கொசு ஸ்பிரே
நான் நிறைய பேசணும்னு நினைப்பவன்... அடுத்த தலைமுறைக்கு சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்... நாம் வாழும் பூமியில் சக மனிதனை மனிதாக நேசிக்கணும்.. அவர்களுக்கு காசு, கார் வாங்கி கொடுக்க போகிறோமோ? நேசித்து தான் போவோமே... அவர்கள் சொல்வது எல்லாம் நம்பும்படி இல்லை.. நான் தப்பு செய்யல.. எனக்கும் தெரியும்.. என்னுடைய குழந்தைக்கும் தெரியும்' என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார்.. இந்த வீடியோவை தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார்.. இதை வைத்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்... மேலும், வினோத் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண்களிடமும் போலீசார் தனியாக விசாரித்து வருகிறார்கள்.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications