நேரடி வகுப்புகள் தொடங்காத நிலையில்... தனியார் பள்ளிகளில் 40% கட்டணம் செலுத்தினால் போதும்..!
சென்னை: நேரடி வகுப்புகள் தொடங்காத நிலையில் தனியார் பள்ளிகள் 40% மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
நடப்பு கல்வி ஆண்டிற்கான கட்டணங்களை முழுமையாக செலுத்தக்கோரி தனியார் பள்ளிகள் நிர்பந்தம் செய்வதாக, பெற்றோர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களிடம் இருந்து தொடர்ந்து வந்த புகாரின் அடிப்படையில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனுப்பியுள்ள கடிதத்தில்,
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டிற்கான நேரடி வகுப்புகள் இன்னும் தொடங்கவில்லை. ஆனால் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகளில் கட்டணங்கள் வசூல் செய்யப்படுகின்றன என்ற புகார்கள் வருகின்றன.
தற்போது நிலவும் கொரோனா பெருந்தொற்றை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 75% மட்டும் கல்வி கட்டணம் வசூல் செய்ய வேண்டும். முதல் தவணையில் 40% கட்டணத்தை மட்டும் ஆகஸ்ட் 31-ம் தேதி அவகாசம் அளித்து வசூல் செய்யலாம்.
மீதமுள்ள 35% கட்டணத்தை நேரடி வகுப்புகள் தொடங்கிய பின்னர் இரண்டு மாத காலம் அவகாசம் அளித்து வசூல் செய்யலாம். மீதமுள்ள 25% கட்டணத்தை வசூல் செய்வது குறித்து கொரோனா பெருந்தொற்றின் நிலையை அறிந்து பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் ஒரே தவணையில் 75% கட்டணத்தை கட்டக்கோரி பெற்றோருக்கு தர்மசங்கடத்தை கொடுத்த தனியார் பள்ளிகளுக்கு கடிவாளம் போட்டுள்ளது தமிழக அரசு.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications