கன மழை.. சென்னை உட்பட 23 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கனமழை காரணமாக சென்னை உட்பட 23 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது.

Recommended Video

    School Leave | Tamilnadu Rain Update | Tamilnadu Weatherman | Chennai Rain | Oneindia Tamil

    தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியது.

    தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது.

    தென் மாவட்டங்கள்

    தென் மாவட்டங்கள்

    தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகாலை தொடங்கிய மழை பிற்பகலில் கனமழையாகவும், அதன் பின்னர் அதிகன மழையாகவும் கொட்டி தீர்த்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சென்னை உள்பட பல மாவட்டங்களில் நேற்று முதல் கன மழை பெய்து வருகிறது.

    23 மாவட்டங்கள்

    23 மாவட்டங்கள்

    கனமழை காரணமாக தூத்துக்குடி, திருவாரூர், புதுக்கோட்டை, நெல்லை, நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர், தஞ்சை, திருச்சி, சென்னை, செங்கல்பட்டு, கடலூர், ராமநாதபுரம், விழுப்புரம், சேலம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, வேலூர், திண்டுக்கல், மயிலாடுதுறை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 23 மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    விடுமுறை ஏன்

    விடுமுறை ஏன்

    வரும் 29ம் தேதி வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளதால், விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. எனவே மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    மழை தொடரும்

    மழை தொடரும்

    இன்று, சென்னை உட்பட 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+