பூமியில் வேகமாக குறையும் நீர்.. செவ்வாய் போல மாறும் உலகம்! விஞ்ஞானிகள் கொடுக்கும் பகீர் அலர்ட்
சென்னை: பூமி அடிப்படையில் நீர் கோளமாகும். நிலப்பரப்பில் உள்ள உயிர்களை விட நீர் நிலையில் உள்ள உயிர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் பூமியில் உள்ள நீரில் ஆக்சிஜனின் அளவு குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
சூரிய குடும்பத்தில் பயன்படுத்தும் விதத்தில் நீர் அமைந்துள்ள ஒரே கிரகம் பூமிதான். இங்கு 71 சதவிதம் நீர் இருக்கிறது. மீதமுள்ள 29 நிலப்பரப்பில்தான் மற்ற உயிர்களோடு நாம் வாழ்ந்து வருகிறோம். பூமியில் உள்ள நீரில் 96.5% கடலில்தான் இருக்கிறது. உலகத்திற்கு நீர் எப்படி வந்து சேர்ந்தது என்பது இப்போது வரையிலும் புரியாத புதிராக இருக்கிறது. ஆனால், நீரிலிருந்துதான் முதல் உயிர் உருவானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஒரு செல் உயிர் தொடங்கி மனிதர்கள் வரை நீரிலிருந்துதான் உருவாகியுள்ளோம். இன்னமும் நாம் கண்டுபிடிக்காத பல உயிர்கள் ஆழ்கடலில் இருக்கிறது. விண்வெளி ஆய்வில் முதலீடு செய்ததை விட, ஆழ்கடலில் ஆய்வு செய்ய முதலீடுகள் குறைவாகத்தான் போடப்பட்டு வருகின்றன. இப்படி இருக்கையில்தான் விஞ்ஞானிகள் அதிர்ச்சியான தகவலை கூறியுள்ளனர். அதாவது, நீர் நிலைகளில் உள்ள ஆக்சிஜனின் அளவு வேகமாக குறைந்து வருகிறது என்று கூறியுள்ளனர்.
பருவ நிலை மாற்றம் காரணமாக இது ஏற்பட்டிருக்கிறது என்று சயின்ஸ் அலர்ட் ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு ஆக்சிஜன் குறைவதால் நீர் நிலைகளில் வாழும் உயிர்கள் அழிந்துபோக வாய்ப்பிருக்கிறது. இது பூமியின் சமநிலையை பாதிக்கும். யோசித்து பாருங்கள் கடல்வாழ் உயிர்கள் அனைத்தும் அழிந்துவிட்டால் அதை நம்பியிருக்கும் உணவு சங்கி முற்றிலுமாக அழிந்துவிடும். இன்றைய தேதியில் இந்தியாவில் 72.1% பேர் கடல் உணவை சாப்பிட்டு வருகிறார்கள்.
மனிதர்களின் வளர்ச்சிக்கு கடல் உணவு பிரதானமாக இருக்கிறது. இன்னும் குறிப்பாக சொல்வதெனில் உலகில் 17% பேர் கடல் உணவை நம்பி இருக்கிறார்கள். இறைச்சி நுகர்வில் குறிப்பிட்ட அளவை கடல் உணவுகள் நிரவர்த்தி செய்கிறது.
இதையெல்லாம் தவிர, ஆக்சிஜன் உற்பத்தியில் கடல் பாசிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. அமேசான் காடுகள்தான் உலகத்தின் நுரையீரல் என்று பலரும் கூறுகிறார்கள். ஆனால், அந்த காடுகளை விட, அதிகமான அளவில் கடற்பாசிகள் ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றன. உலகத்திற்கு தேவையான 70% ஆக்சிஜன் கடலிலிருந்துதான் உற்பத்தியாகிறது. இப்படி இருக்கையில், கடலில் ஆக்சிஜன் அளவு குறைவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
வெறும் கடல்வாழ் உயிர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகத்திற்கே இது பெரும் ஆபத்தை ஏற்படுத்திவிடும். எனவே இதனை தடுக்க வேண்டியது உடனடி தேவை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கழிவுநீர் கடலில் கலப்பது, வேளாண் உரத்தின் கழிவுகள், கரிம பொருட்கள் போன்றவை கடலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. ஏற்கெனவே பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பக்கம் பக்கமாக ஆய்வுகள் வெளிவந்துக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது அதைவிட பெரும் பிரச்னையாக ஆக்சிஜன் குறைதல் ஏற்பட்டிருக்கிறது.
H20 சேர்ந்ததுதான் நீர். தற்போது இதில் ஆக்சிஜன் குறைகிறது என்றால், உலகம் முழுவதும் நீர் குறைந்து வருகிறது என்றுதான் அர்த்தம். இப்படியே போனால் பூமியும் செவ்வாய் கிரகத்தை போல வறண்ட பாலைவனமாகிவிடும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications