"லாஸ்ட் டைம்" மாதிரி ஆகக்கூடாது.. "குறி" வைத்த துரை.. மோப்பம் பிடித்த அதிமுக.. இப்பவே கண்ணை கட்டுதே
கோவில்பட்டி தொகுதியை குறி வைத்து இப்போதே காய்நகர்த்தல்கள் ஆரம்பமாகி உள்ளன
சென்னை: எம்பி தேர்தல் விரைவில் வரப்போகிறது.. இதற்கு தமிழகத்தில் சில தொகுதிகளில் முக்கிய பணிகளும் ஆரம்பமாகி உள்ளன.. ஆனால் அதற்கு பிறகு வரப்போகும் சட்டசபை தேர்தலுக்கும் இப்போதே சில தலைவர்கள் ரெடியாகி வருவதுதான் ஹைலைட்..
அந்த வகையில், குறிப்பிடத்தகுந்த தொகுதி கோவில்பட்டி.. எப்போதுமே நட்சத்திர தொகுதியாக கோவில்பட்டி பார்க்கப்பட்டு வருகிறது.. கடந்த சட்டசபை தேர்தலின்போது, இங்கு பலத்த போட்டி எழுந்தது.
காரணம், இங்குதான் டிடிவி தினகரன் போட்டியிட்டார்.. தமிழகம் முழுக்க இருக்கும் தொகுதிகளை விட்டுவிட்டு, தினகரன் ஏன் இங்கே வந்து போட்டியிட வேண்டும்? என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்தது.

சிட்டிங் MINISTER
தன்னுடைய செல்வாக்கை அதிமுகவுக்கு நிகராக தென்மாவட்டங்களில் நிரூபிக்க வேண்டிய கட்டாயமும், திமுகவுக்கும் ஒரு செக் வைக்க வேண்டிய சூழலும் அப்போது தினகரனுக்கு இருந்தது.. இதுபோன்றதொரு நெருக்கடி, கடம்பூர் ராஜுவுக்கும் அன்று ஏற்பட்டது.. காரணம், இதே கயத்தாறு ஒன்றியத்தில்தான் கடம்பூர் ராஜுவின் சொந்தஊர் உள்ளது.. இதற்கு முன்பு நடந்த வார்டு தேர்தலில், சொந்த கிராமத்திலேயே, சிட்டிங் அமைச்சர் மண்ணை கவ்வியது, பெருத்த இழுக்காக பார்க்கப்பட்டது. அதனால்தான் கடம்பூர் ராஜு பம்பரமாக சுழன்றார்.

மாணிக்கராஜா
டிடிவி தினகரனுக்கு கோவில்பட்டியில் மிகவும் உதவியாக இருந்தவர் மாணிக்கராஜா என்பவர்தான்.. டிடிவி தளபதிகளில் முக்கியமானவர்.. கடம்பூர் இளைய ஜமீன்தார் என்று இவரை சொல்லுவார்கள்.. கயத்தாறு என்றாலே மாணிக்கராஜாதான்.. செம செல்வாக்கு உடையவர்.. பசை உள்ள பார்ட்டி.. இவர் சொந்த ஊரும் கயத்தாறு ஒன்றியம்தான்.. இந்த ஒன்றியத்தின் சேர்மன் என்பதாலும் டிடிவி-க்கு அவ்வளவு நெருக்கம்... கடந்த 2016 தேர்தலில், கடம்பூர் ராஜுவை வெற்றி பெற வைத்து அமைச்சராக்கியதில் மாணிக்கராஜாவுக்கு முக்கிய பங்கு உள்ளது.

நாயக்கர்கள்
எனினும், கடந்த சட்டசபை தேர்தலில், வைகோவின் சமூகமான நாயக்கர் வாக்குகளும், டிடிவி தினகரனின் முக்குலத்தோர் வாக்குகளும் கணிசமாக இருந்தும்கூட, கடம்பூர் ராஜுவே வெற்றிபெற்றார். இத்தனைக்கும் திமுக கூட்டணியில் நின்ற மார்க்சிஸ்ட் வேட்பாளர் சீனிவாசனும் நாயக்கர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது, அதிமுகவில் நிலைமையே மாறி உள்ளது.. இரண்டாக அணி பிரிந்துள்ளது.. ஓபிஎஸ், டிடிவி ஒன்று சேரும் சூழலும் ஏற்பட்டுள்ளது..

என்ட்ரி
அந்தவகையில், வரப்போகும் எம்பிதேர்தலில், தூத்துக்குடியில் அதிமுக, அமமுக மோதிக் கொள்வார்களா? அல்லது கூட்டணி வைத்து களம் காண போகிறார்களா? என்பது சஸ்பென்ஸ்தான்.. இதற்கு நடுவில், திமுக என்ட்ரி தந்துள்ளது. நடந்து முடிந்த நகராட்சி தேர்தலில், கோவில்பட்டியை அசரடித்துவிட்டது.. அபார வெற்றியையும் பெற்றுவிட்ட நிலையில், இப்போதே களப்பணி தீவிரமாகி உள்ளதாம்.

துரை வைகோ
எனினும், மதிமுகவின் வைகோ வேறு ஒரு ரூட்டை இங்கு எடுத்துள்ளதாக தெரிகிறது.. அதாவது, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில், தன்னுடைய மகனை களமிறக்க இப்போதே யோசித்து வருகிறாராம்.. தொகுதி மேம்பாட்டு நிதியில் பெரும்பகுதி கோவில்பட்டி தொகுதிக்கே செலவிடப்படுகிறதாம்.. அந்த திட்டங்களை துரை வைகோவே நேரில் வந்து தொகுதி மக்களுக்கு செய்து தருவதாகவும் சொல்கிறார்கள். அதேபோல, கோவில்பட்டி தொகுதியைச் சேர்ந்த மதிமுகவினர் இல்ல நிகழ்ச்சிகளுக்கு, கட்டாயம் கலந்து கொண்டும் வருகிறாராம். தொகுதி மக்களையும் அடிக்கடி சந்தித்து பேசி வருகிறாராம்.

டிக் அடித்த வைகோ
மக்கள் நலக்கூட்டணியில் இருந்தபோது, அதாவது 2016-ல் தேர்தலில் கோவில்பட்டியைதான் வைகோ தேர்ந்தெடுத்தார்.. ஆனால் திடீரென விலகிக்கொண்டு, வேறு நபரை நிறுத்தி போட்டியிட செய்தார்.. அதனால் இந்த முறை, மகனுக்கு அந்த தொகுதியை டிக் அடித்து வைத்துள்ளாராம்.. இந்த விஷயம் தெரிந்த, கடம்பூர் ராஜூ இப்பவே உஷார் ஆகி வருகிறாராம்.. வைகோ மகன் ஒருபக்கம், கடம்பூர் ராஜு மறுபக்கம் என நாயக்கர் சமூகத்தினரை அரவணைத்து செல்கிறார்களாம்.. இன்னும் எம்பி தேர்தலே வரவில்லை.. அதுக்குள்ளேயா.. இப்பவே கண்ணை கட்டுதே..!
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications