"வார்த்தைய" விட்ட பிடிஆர்.. லட்சம் லட்சமாக சம்பளம்.. வெடித்த "அவுட்சோர்சிங்" மேட்டர்.. என்ன காரணம்?
சென்னை: சட்டப்பேரவையில் அரசு ஊழியர்கள் குறித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பேச்சுக்கு தலைமைச் செயலக சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.. அதேபோல, சமீபகாலமாகவே, ஆசிரியர் சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன..
ஆனால், எவ்வளவுதான் போராட்டத்தை நடத்தினாலும், தமிழக அரசு அவைகளை பெரிதாக கண்டுகொள்வதில்லை என்ற குறை இருந்து கொண்டே வருகிறது.

Outsourcing
காரணம், மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலத்தில், அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தியபோது 4 ஆயிரம் ரூபாய் தொகுப்பு ஊதியத்திற்கு எடுக்கப்பட்ட தற்காலிக ஊழியர்களை வைத்தே, நிலைமையை அப்போது சமாளிக்க முடிந்தது... அதுவும் இல்லாமல், "அவுட்சோர்சிங்" முறையை நடைமுறைப்படுத்தினால் சிக்கல்கள் எழலாம் என்றும் கருதப்பட்டது. இந்நிலையில், நீண்ட காலம் கழித்து மறுபடியும் அவுட்சோர்சிங் முறை தமிழகத்தில் பேசுபொருளாகி உருவெடுத்துள்ளது.. தமிழக நிதி அமைச்சர் பிடிஆர், சட்டப் பேரவையில் அரசுப் பணிகளில் அவுட் சோர்சிங் மூலம் ஆட்களை நியமிப்பதன் அவசியம் குறித்து விரிவாக விளக்கியிருந்தார்..

PFI ESI
குறிப்பாக, ''அரசு வேலைகளில் தற்காலிகமாக பணியாற்றுபவர்கள் மிகக் குறைவாக 5 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால், அதே வேலையில் நிரந்தர பணியாளர்கள் லட்சங்களில் சம்பளம் வாங்குகின்றனர். இது நியாயம் அல்ல. அதனால்தான், அவுட் சோர்சிங் மூலம் ஊழியர்களை நியமித்து அவர்களுக்கு முறையான ஊதியம் வழங்கி இபிஎஃப், இஎஸ்ஐ ஆகியவற்றில் சேர்க்க வேண்டும் என்று கூறி அரசாணை கொண்டு வந்தோம். ஆனால் எதிர்கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. எல்லோரும் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்'' என்றார்.. அமைச்சரின் இந்த பேச்சுக்கு அரசு அமைப்புகள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் கு.வெங்கடேசன், செயலர் சு.ஹரிசங்கர் ஆகியோர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

அவுட்சோர்சிங்
அந்த அறிக்கையில், "சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 27-ம் தேதி, மனிதவள மேலாண்மைத் துறையின் அரசாணை எண்.115 குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிடும்போது, "அரசில் தற்காலிக பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என கூறினோம். தற்காலிகமாக இருப்போர் ரூ.5,000 முதல் ரூ.10 ஆயிரம் வரை ஊதியம் பெறுகின்றனர். ஆனால், முழு நேர பணியாளர்களோ பல லட்சம் ஊதியம் பெறுகின்றனர். இது நியாயமல்ல. அதனால், அடிப்படை அவுட்சோர்சிங்கிற்கு ஒரு தரத்தை நிர்ணயித்து, பிஎப், இஎஸ்ஐயில் சேர்க்க வேண்டும் என்பதற்காக அரசாணையை கொண்டு வந்தோம். அதைஎதிர்க்கிறார்கள்" என தெரிவித்தார்.

லட்சம் லட்சமாய்
அந்த அரசாணை, ஒப்பந்த முறையில் நியமனம் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டு, 69 சதவீத இடஒதுக்கீடு என்ற சமூக நீதிக்கு எதிராக இருப்பதாலேயே முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், அரசு ஊழியர் மீதான தனதுவெறுப்பை அமைச்சர் வெளிக்காட்டியுள்ளார். போட்டித் தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெற்று, 25 ஆண்டுகள் கழித்தே லட்சத்தில் சம்பளம் வழங்கப்படுகிறது. அதிலும், 12 லட்சம் அரசு ஊழியர்களில் சில ஆயிரம் பேர் மட்டுமே லட்சத்தில் சம்பளம் பெறுகின்றனர்.

சுகபோகிகள்
ஏதோஅனைத்து பணியாளர்களும் சுகபோகிகளாக இருப்பதுபோல் அமைச்சர் உருவகப்படுத்துகிறார். 3.5 லட்சம் காலிப்பணியிடம் நிரப்பப்படும் என்ற திமுக வாக்குறுதிக்கு மாறாக, அவற்றை தனியார் மூலம் நிரப்புவதுதான் அமைச்சரின் நோக்கமா? இந்த விஷயத்தில் முதல்வர் தலையிட்டு 69 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் பணியாளர்களை நியமனம் செய்வதோடு, அரசுக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்குமான நல்லுறவை காக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

கொச்சைப்படுத்திட்டாங்களே
அதேபோல, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி, பொதுச்செயலாளர் ஜெ.லட்சுமி நாராயணன் ஆகியோர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.. அந்த அறிக்கையில், அரசின் அங்கமான ஊழியர்களின் உணர்வுகளையும், உழைக்கும் மக்களின் வாழ்நிலையையும் கொச்சைப்படுத்தும் வகையிலான மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சரின் உரைக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். ஜனநாயகத்துக்கும், அரசமைப்பு சட்டகோட்பாடுகளுக்கும் எதிரான அந்த உரையை உடனடியாக திரும்ப பெறுவதோடு, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுகிறோம்' என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

5000, 8000, 10,000
தமிழக தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசிற்கும் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கும் மன நல்லுறவினை சிதைக்கும் அமைச்சர் பி.டி.ஆர் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வெளியிடப்பட்ட குரூப்-4(Group 4) தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்து கவனயீர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்த அமைச்சர் பி.டி.ஆர், அந்த அரசாணை வரும் பொழுது பலர் எதிர்த்தார்கள், சில பேர் தற்காலிகமாக இருந்து கொண்டு 5000, 8000, 10,000 எல்லாம் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

இஎஸ்ஐ
ஆனால் முழு நேர பணியாளர்கள் பல லட்சம் ரூபாய் வாங்குகிறார்கள், இது நியாயம் அல்ல, அதனால் அடிப்படை அவுட்டோர் சிங் முறையில் இவர்களை எல்லாம் ஈபிஎப், இஎஸ்ஐ சேர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் அரசாணையை கொண்டு வந்தோம், அதனை எதிர்த்தார்கள் எனவும் சமூக நீதி நிலைநாட்ட இந்த அரசாணைக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என தெரிவித்திருந்தார். நிதி அமைச்சரின் பதிலறையில் குறிப்பிட்டுள்ள அரசாணை என்பது அரசு பணிக்கு ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி தொடர்பாக ஒரு வல்லுநர் குழு அமைத்து அதற்கான ஆய்வு வரம்புகளை குறிப்பிட்டது.

அரசாணை
இந்த ஆய்வு வரம்புகள் என்பது தமிழக அரசால் பின்பற்றப்பட்டு வரும் 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிரானதாகவும், இளைஞர்களின் வேலைவாய்ப்பினை தகர்க்கும் விதமாகவும் இருந்ததால் தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் தமிழ்நாடு அமைச்சருக்கு இந்த அரசாணையை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்தது. முதலமைச்சர் அரசாணை 115 கீழ் அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவிற்கான ஆய்வு வரம்புகளை ரத்து செய்து உத்தரவிட்டார். முதலமைச்சர் ரத்து செய்து உத்தரவிட்ட அரசாணையை மீண்டும் குறிப்பிட்டு அது சரியான ஆய்வு வரம்புகளோடு வெளியிடப்பட்டது தான் என்கிற தொனியில் அமைச்சர் சட்டமன்றத்திலேயே பேசி இருப்பது என்பது உள்ளபடியே மனித வள மேலாண்மை துறை என்பது முழுக்க முழுக்க கார்ப்பரேட் பாதையில் பயணித்துக் கொண்டு இருக்கிறது என்பதை தெளிவுபடுத்தி உள்ளது.

இடஒதுக்கீடு
தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பில் யார் இருந்தாலும் தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டினை இந்திய அரசியல் சாசனத்தில் பாதுகாப்பு பெற்று நடைமுறைக்கு கொண்டு வந்து சமூகநீதியானது பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இந்த சூழலில் சட்டமன்றத்தில் நிதி அமைச்சரின் கூற்று என்பது முற்றிலும் எதிரானதாக அமைந்துள்ளது. வெளி முகமை மூலமாக பணியாளர்களை பணி அமர்த்தும் போது அந்த விதிமுறைகள் 69 சதவீத இட ஒதுக்கீட்டினை எந்த வகையில் நடைமுறைப்படுத்தும். முழு நேர பணியாளர்கள் பல லட்சம் ரூபாய் வாங்குகிறார்கள் என்று குறிப்பிட்டு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீதான தனது வெறுப்பினை வெளிக்காட்டி உள்ளார்.

115 ஆய்வு வரம்புகள்
அரசு பணியாளர்கள் பணியில் சேரும்போது யாரும் பல லட்சம் ரூபாயில் வாங்குவதில்லை. 25 ஆண்டுகள் கடந்து பின்னர் தான் அதிலும் பதவி உயர்வு கிடைக்கும் பொழுது தான், 12 லட்சம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களில் சில ஆயிரம் பணியாளர்கள் தான் லட்சம் என்ற மாதாந்திர சம்பளத்தினை அடைந்துள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நடத்தப்பட்ட போட்டி தேர்வில் தகுதி பெற்றவர்களை தற்காலிக பணியாளர்களோடு ஒப்பிடுவது எந்த விதத்தில் நியாயம்?. திமுகவின் தேர்தல் அறிக்கையில் அரசு பணியில் 3.5 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற வாக்குறுதிக்கு மாறாக அவற்றை தனியார் முகமை மூலம் நிரப்புவது தான் நிதி அமைச்சரின் நோக்கமா?. அதற்காகத்தான் ரத்து செய்யப்பட்ட அரசாணை 115 ஆய்வு வரம்புகளை மீண்டும் கொண்டுவர அமைச்சர் முயற்சிக்கிறாரா?

கார்ப்பொரேட்
தற்பொழுது பணியில் உள்ள பணியாளர்களை முழு நேர பணியாளர்கள் என குறிப்பிடுவதன் மூலம் வரும் காலத்தில் எந்த ஒரு பணியிடத்திலும் நிரந்தர பணியிடமாக கொள்ளாமல் அத்தக்கூலியாக பணி பாதுகாப்பு என்பதே இல்லாமல் குறைந்த ஊதியத்தில் கார்ப்பரேட் மாடலில் செயல்படுத்த முழு முயற்சி செய்து கொண்டுள்ளதை வெளிப்படையாகவே சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இதன் வெளிப்பாடு தான் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டிற்கான போட்டித் தேர்வுக்கான திட்டத்தில் 2000-த்துக்கு குறைவான பணியிடங்களை நிரப்புவதற்கான திட்டமிடல் வெளியிடப்பட்டுள்ளது.

சக போகிகள்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட மூன்று தவணை அகவிலைப்படி எப்படி ஆறு மாத காலம் கடந்த நிலுவை தொகையினை மறுத்து வழங்கிய பிறகும் நிதி அமைச்சர் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீது வன்மான முறையில், ஒரு விழுக்காட்டிற்கு கீழ் குறைவான பணியாளர்கள் பெரும் லட்ச ரூபாய் மாத சம்பளத்தை பெரிதாக்கி ஏதோ அனைத்து பணியாளர்களும் சக போகிகளாக உலா வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை போல் உருவகப்படுத்துகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பினை காற்று 69 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அடிப்படை பணியாளர் நியமனம் செய்து சமூக நீதியினை காத்திட வேண்டும்'' என அவர் தெரிவித்துள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications