யாருக்காவது ஓட்டு போடுங்கள்; நோட்டாவுக்கு மட்டும் போடாதீர்கள்.. வேண்டுகோள் வைக்கும் சீமான்!
சென்னை: அ.தி.மு.க அல்லது தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் என்னை கரைத்து விடுவார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்தார்.
அரசியல் என்பதை மக்களுக்கு சேவையாற்றும் ஒரு தொண்டு என்பதனை மறந்து பணம் சம்பாதிக்கும் கம்பெனியாக மாற்றிவிட்டார்கள் என்று சீமான் குற்றம்சாட்டினார்.

தலைவர்கள் தீவிர பிரசாரம்
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொதிக்கும் வெயிலுக்கு மத்தியிலும் அரசியல் கட்சி தலைவர்கள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சி வேட்பாளர்களுக்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தன்மானம் காப்பேன்
இந்த நிலையில் ஆவடியில் பிரசாரத்தில் ஈடுபட்ட சீமான் கூறியதாவது:- பெரிய கட்சிக்காரர்கள் 56 கட்சியோடு கூட்டணி வைத்திருக்கிறார்கள். நான் காட்டுக்குள் திரியும் புலி போன்று சிங்கிளாக வருவேன். என்னை கூட்டணி வைக்க சொல்கிறார்கள். 10 சீட்டு, 20 சீட்டுகளுக்கான என் தம்பி தங்கைகளை அடமானம் வைக்க மாட்டேன். கொள்கைக்காக தன்மானம் காப்பேன்.

பணம் சம்பாதிக்கும் கம்பெனி
அ.தி.மு.க அல்லது தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் என்னை கரைத்து விடுவார்கள். வைகோ, திருமாவளவன், விஜயகாந்த் ஆகியோரின் நிலையை பாருங்கள். அவர்களை கரைத்தது போல் என்னையும் கரைத்து விடுவார்கள். நான் மெதுவாக வருவேன். ஆனால் பொதுவாக வருவேன் அரசியல் என்பதை மக்களுக்கு சேவையாற்றும் ஒரு தொண்டு என்பதனை மறந்து பணம் சம்பாதிக்கும் கம்பெனியாக மாற்றிவிட்டார்கள்.

நோட்டாவுக்கு ஓட்டு போடாதீர்கள்
அ.தி.மு.க, தி.மு.க.வினர் ஒரு கோடி, இரண்டு கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்கிறார்கள். பிறகு அவர்கள் ஏன் ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள். அனைவரும் ஓட்டுப்போட வேண்டும். ஒட்டு போடவில்லையென்றால் தேசத் துரோகம். யாருக்காவது ஓட்டு போடுங்கள். பெரிய புரட்சிக்கர சிந்தனையாளர் மாதிரி, நாங்க தான் சமூக மாற்றத்தை கொண்டு வருகிறோம் என்று கூறி நோட்டாவிற்கு ஓட்டுப்போட்டு கேவலப்படுத்தக்கூடாது என்று சீமான் கூறினார்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications