கதிர் ஆனந்தை எம்.பி.யாக்கிய வேலூர் மக்களுக்கு வெட்கமில்லையா.. விளாசும் சீமான்
Recommended Video
சென்னை: வேலூர் தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தை மக்கள் தேர்ந்தெடுத்திருப்பது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக சாடியுள்ளார்.
சீமானின் அரசியல் புதிராக இருந்தாலும் சில நேரங்களில் ஆச்சரியப்படுத்தவும் செய்கிறது. 'மாற்று அரசியல்! மாற்று அரசியல்!' என்று சில தலைவர்கள் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்களே தவிர செயலில் எந்த மாறுபாட்டையும் காட்டுவதில்லை. ஆனால் சீமானோ கூட்டணி வைக்கும் கட்சிகளின் தரம், தேர்தல் அறிக்கை, பிரசார யுக்தி, பிரசாரத்தில் பேசும் பொருள் ஆகியவற்றில் மிகப்பெரிய மாற்றத்தை காட்டுகிறார்.
ஆனால் அவர் தி.மு.க. அளவுக்கு அ.தி.மு.க.வை திட்டாமல் இருப்பதும் சந்தேகத்தை தருகிறது. அதே சூழலில் எவ்வளவு மோசமாக தோல்வியை தழுவினாலும் கூட கொஞ்சமும் கலங்காமல் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், இடைத்தேர்தல் என எல்லா தேர்தல்களையும் விடாமல் சந்திப்பதும், களமிறங்குவதுமாகவே இருக்கிறார்.

தில்லான போட்டி
பணம் மற்றும் செல்வாக்கில் ஆனானப்பட்டவர்களான விஜயகாந்த், தினகரன் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரே சில தேர்தல்களை புறக்கணிக்கும் வேளையில் சீமான் புறம் காட்டாமல், நெஞ்சு நிமிர்த்தி போட்டியிடுவது ஆச்சரியப்படுத்துகிறது. இப்போது கூட வேலூர் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவியுள்ளார். இந்த சூழலில் அங்கே வென்றிருக்கும் தி.மு.க.வையும், தோற்றிருக்கும் அ.தி.மு.க.வையும் தன் வெந்நீர் வார்த்தைகளால் வைத்து விளாசியுள்ளார். அவரது கருத்துக்களில் சாட்டையடியான வரிகளின் அணிவகுப்பு இதோ....

வெற்றி பெறலை.. வாங்கினார்
ஐயா துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார்! என அத்தனை ஊடகங்களும் அறிவிக்கின்றன. உண்மையில் அவர் வெற்றி பெற்றார்! என்பது தவறு. வெற்றியை வாங்கினார் என்பதே சரி.
அண்ணாவின் பெயரைச் சொல்லி கட்சி நடத்தும் தி.மு.க., மற்று அ.தி.மு.க. இரண்டும் தவிட்டை காட்டித் தங்கத்தை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பணக் கத்தை
மற்ற லோக்சபா தொகுதிகளோடு சேர்த்து வேலூரில் ஏன் தேர்தல் நடைபெறவில்லை? கத்தை கத்தையாக கதிர் ஆனந்தின் பணம் சிக்கியது, வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்தார்! என்றெல்லாம் குற்றம் சாட்டி காணொலி காட்டினார்கள்.
யாரால் தேர்தல் ரத்தானதோ இன்று அவர்தான் நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார். பின் ஏன் அந்த நடவடிக்கை? இங்கு மட்டுமல்ல ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலிலும் இதே நிலைதான்.

பண விநியோக போதனையா இது
பணத்தை ரகசியமாக விநியோகிக்கும் முறையை வேட்பாளர்களுக்கு கற்றுக் கொடுக்கத்தான் தேர்தலை ரத்து செய்கிறதா ஆணையம்? கதிர் ஆனந்த், தினகரன், செந்தில்பாலாஜி என இவர்களின் கதைகளில் இதுதான் நடந்திருக்கிறது.
பணம் விநியோகித்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட நபர்கள்தான் மீண்டும் போட்டியிட்டு வென்றுள்ளார்கள். இவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

மக்களுக்கு எங்க போச்சு
அட ஆணையத்தை விட்டுத் தள்ளுங்கள். மக்களும் மீண்டும் மீண்டும் இவர்களுக்குத்தானே வாக்களித்து வெற்றி பெற வைக்கிறார்கள். இப்படிப்பட்ட நபர்களை தங்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுப்பது மக்களுக்கு அவமானமாக இல்லையா?
இந்த தேசத்திலேயே தேர்தல் ரத்தான தொகுதியாக வேலூர் அறிவிக்கப்பட்டதே! யாரால் அந்த அவமானம் ஏற்பட்டதோ அதே மனிதரையே நாம் தேர்ந்தெடுக்கிறோமே எனும் வெட்கமும், வேதனையும் வேலூர் மக்களுக்கு கொஞ்சங்கூட இல்லையா?

புரட்சி செய்திருக்க வேண்டாமா
நாங்கள் பணத்துக்கு விலை போகாத மக்கள்! என்று சொல்லி, வேட்பாளர்களில் எளிய பிள்ளை ஒருவரை தங்களின் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக தேர்வுசெய்து ஒரு புரட்சியை செய்திருக்க வேண்டாமா வேலூர் மக்கள்?!
கோடி கோடியாய் பணத்தைக் கொட்டிய ஏ.சி.சண்முகத்துக்கும், அவருக்கு நிகராக கொட்டிய கதிர் ஆனந்துக்கும் அள்ளியள்ளி வாக்குகளை போட்டுள்ளனர். வெற்றி வித்தியாசம் பத்தாயிரத்துக்கும் குறைவே. அப்படியானால் இந்த இரண்டு நல்லவர்களில் யாரை தேர்ந்தெடுப்பது? என திக்கித் திணறி முடிவை தந்திருக்கிறார்கள் மக்கள், இல்லையா!" என்று வார்த்தைக்கு வார்த்தை கொதித்துக் கொண்டே போயிருக்கிறார்.
வாஸ்தமான கேள்விகள்தான்.. பதில்தான் கிடைக்க மாட்டேங்குது.
- ஜி.தாமிரா
-
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
சொந்த தொகுதியில் டெபாசிட் வாங்க முடியல! எங்களை விமர்சிப்பதா? ஒரே காமெடி! சீமானுக்கு காங்கிரஸ் பதிலடி -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
சீமான் குழந்தைக்கு சீர் செய்ய என்ன காரணம்? தாக்கூருக்கு அருகதை இல்லை! அனிதா ராதாகிருஷ்ணன் அட்டாக்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications