Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புட்டுப் புட்டு வைத்த விஜயலட்சுமி.. மேட்டர் சீரியஸ்! வளசரவாக்கம் வெயிட்டிங்.. சீமான் திடீர் முடிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பெங்களூரில் விஜயலட்சுமியிடம் போலீசார் இன்று விசாரணை நடத்தியுள்ளனர். நாளை சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டிருக்கும் நிலையில் அவர் ஆஜராக மாட்டார் என கூறப்படுகிறது.

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய சீமான் தாக்கல் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

Seeman Actress Vijayalakshmi police

நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த அந்த உத்தரவில், வழக்கை ஆராய்ந்த போது நடிகை விஜயலட்சுமிக்கு, சீமான் மீது எந்த காதலும் இல்லை, குடும்ப பிரச்சினை திரைத்துறை பிரச்சனை காரணமாக சீமானை விஜயலட்சுமி குடும்பத்தினர் அணுகி உள்ளனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக கூறி நடிகை விஜயலட்சுமி உடன் சீமான் உறவு வைத்துள்ளது தெரிய வருவதாக உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

சீமான்: மேலும் சட்டப்படி அனைவரும் அறியும் வகையில் திருமணம் செய்து கொள்வதாக சீமான் கூறியிருந்தார் என்றும் அவரின் வற்புறுத்தலுக்கு இணங்க ஆறு ஏழு முறை கருக்கலைப்பு செய்துள்ளதாகவும், விஜய லட்சுமியிடம் பெருந்தொகையை பெற்றிருப்பதாகவும் விஜயலட்சுமி புகாரில் தெரிவித்துள்ளதாக உத்தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை: நடிகை விஜயலட்சுமி: அரசியல் அழுத்தம் காரணமாக சீமான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, மன உளைச்சல் காரணமாகவே புகாரை திரும்ப பெற கடிதம் அனுப்பியதாகவும் விஜயலட்சுமி கூறியுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி, இதிலிருந்து மிரட்டல் காரணமாக தான், புகாரை விஜயலட்சுமி திரும்ப பெற்றுள்ளார் என்பது தெளிவாகிறது எனத் தெரிவித்துள்ளார்.

மிரட்டல்: பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது என்பதால், அப்புகாரை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது. விஜய லட்சுமி, சீமான் மீது தெரிவித்த புகார்கள், அவர் அளித்த வாக்குமூலத்தின் மூலம் உறுதியாகிறது எனக் கூறிய நீதிபதி, சீமானுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுத்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

பின்னணி: தமிழில் ஃபிரண்ட்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள விஜயலட்சுமி நடிகரும், இயக்குனருமான சீமானை தொடர்ந்து விமர்சித்து வீடியோ வெளியிட்டு வருகிறார். முன்னதாக தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். மேலும் சீமானுடன் தான் இருக்கும் சில வீடியோக்களையும் விஜயலட்சுமி வெளியிட்டு இருந்தார்.

வாபஸ்: இந்த நிலையில் 2011ஆம் ஆண்டு புகார் அளித்த விஜயலட்சுமி 2012 ஆம் ஆண்டு அந்த வழக்கை திரும்ப பெற்றுக் கொள்வதாக கடிதம் எழுதிக் கொடுத்ததாகவும், அதன் அடிப்படையில் போலீசார் இந்த வழக்கை முடித்து வைத்தனர். தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே வழக்கு ரத்து செய்ய வேண்டும் என சீமான் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

தீவிர விசாரணை: அந்த மனு பதினேழாம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் விசாரணையை 12 வாரத்திற்குள் முடித்து இறுதியாக தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வளசரவாக்கம் போலீசார் துரிதப்படுத்தி உள்ளனர். மூன்று மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் அடுத்தடுத்து பல விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.

நேரில் விசாரணை: இன்று பெங்களூருவில் வைத்து நடிகை விஜயலட்சுமி இடம் வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் தனது புகார் குறித்து விஜயலட்சுமி விரிவாக எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் கடந்த 2022 ஆம் ஆண்டு விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாளை சீமான் நேரில் ஆஜராக வேண்டுமென வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இதை அடுத்து சீமான் அங்கு ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது.

சீமான் ஆஜராகவில்லை: இந்த நிலையில் நாளை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் விசாரணைக்கு ஆஜராக மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. சீமான் தற்போது கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருப்பதால் நேரில் ஆஜராக முடியாது எனவும் காவல்துறையினரின் கேள்விகளை பெற்று அதற்கு பிறகு பதில் அளிக்கப்படும் என கூறுகின்றனர் நாம் தமிழர் வழக்கறிஞர்கள். மேலும் சீமான் சார்பாக அவரது வழக்கறிஞர் ஒருவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் எனவும், வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால் சீமானிடம் பெற்று தகவல் தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+