‛‛தயங்கிய பெரிய கட்சிகள்’’.. 2 பொது தொகுதியில் பட்டியலினத்தவரை வேட்பாளராக்கிய நாம் தமிழர் சீமான்
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி 2 பொதுத்தொகுதிகளில் பட்டியலினத்தை சேர்ந்தவர்களை வேட்பாளர்களாக அறிவித்துள்ளது. பட்டியலினத்தவர்களுக்கு பொதுத்தொகுதி வழங்க திமுக, அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகள் தயங்கும் நிலையில் சீமான் அதனை செய்து காட்டியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல்களில் அனைத்து சாதியினருக்கும் போட்டியிட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக தனி தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்த தனித்தொகுதிகளில் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் தான் போட்டியிட முடியும். மற்றவர்கள் போட்டியிட முடியாது. தனி தொகுதியை பொறுத்தமட்டில் எஸ்சி, எஸ்டி என 2 வகைகளாக உள்ளன.
அந்த வகையில் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 7 தொகுதிகள் தனி தொகுதிகளாக உள்ளன. அதாவது திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நீலகிரி, சிதம்பரம், நாகப்பட்டினம், தென்காசி ஆகியவை தனித் தொகுதிகளாகும். இந்த தொகுதிகளில் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் தான் போட்டியிட முடியும். மற்றவர்களால் களம் காண முடியாது.
இதனால் பல சமயங்களில் பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு பொதுத்தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. வரும் தேர்தலில் கூட திமுக, அதிமுக, பாஜகவும், அதன் கூட்டணி கட்சிகளும் தனித்தொகுதிகளில் மட்டும் பட்டியலினத்தை சேர்ந்தவர்களை களமிறக்கி உள்ளது. ஆனால் பொதுத்தொகுதியில் பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை.
ஆனால் சீமானின் நாம் தமிழர் கட்சி 7 தனித்தொகுதிகளில் பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கி உள்ளது. அதுமட்டுமின்றி 2 பொதுத்தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களாக பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் போட்டிடுகின்றனர். அதன்படி பொதுத்தொகுதியான ஆரணி தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளராக பாக்கியலட்சுமி போட்டியிடுகிறார். இவர் பறையர் சமுதாயத்தை சேர்ந்தவர். டாக்டரான பாக்கியலட்சுமியை எதிர்த்து திமுகவில் தரணிவேந்தன், அதிமுகவில் கஜேந்திரன், பாஜக கூட்டணியான பாமகவில் கணேஷ்குமார் போட்டியிடுகின்றனர்.
அதேபோல் பொதுத்தொகுதியான திண்டுக்கல்லில் நாம் தமிழர் வேட்பாளராக தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த கைலைராஜன் போட்டியிடுகிறார். டாக்டரான இவரை எதிர்த்து திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சச்சிதானந்தம், அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ வேட்பாளராக முகமது முபாரக், பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் பல இடங்களில் பொதுத்தொகுதிகளில் கட்சி வேட்பாளர்களாக பட்டியலினத்தை சேர்ந்தவர்களை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது. ஆனால் பல கட்சிகளும் அதனை செய்ய மறுக்கின்றனர். ஏனென்றால் பட்டியலினத்தவரை வேட்பாளராக்கினால் பிற சமுதாயத்தினரின் வாக்கு கிடைக்காதே என்ற அச்சம் தான் இதற்கு காரணம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் சீமானை பொறுத்தமட்டில் எனக்கு சாதி பார்த்து ஓட்டுப்போட்டால் அத்தகைய ஓட்டு எனக்கு வேண்டாம். அது எனக்கான ஓட்டு அல்ல. தீட்டு என மேடைகளில் முழங்கி உள்ளார். அதன்படியே தேர்தலிலும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகத்தில் 2 பொதுத்தொகுதிகளில் பட்டியலினத்தை சேர்ந்தவர்களை வேட்பாளராக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications