நான் கர்நாடகா போயி.. அண்ணே! OBC விரிவாக்கம் அது இல்ல - மேடையில் தவறான விளக்கம் கொடுத்தாரா சீமான்?
சென்னை: ஓபிசி என்பது மத்திய அரசால் வகைப்படுப்பட்டு இருக்கும் இடஒதுக்கீடு பிரிவாக உள்ள நிலையில், உசிலம்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அதற்கு பிழையான விரிவாக்கத்தை கொடுத்து இருப்பதுடன், அதில் தமிழர்களை இணைக்க கர்நாடக அரசிடம் வலியுறுத்துவேன் என்று தெரிவித்து இருக்கிறார்.
அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவர் மூக்கையாதேவரின் நூற்றாண்டு விழா மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்றது. இதில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், "70 வயது தன்னுடைய சொத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக திருமணம் செய்துகொண்ட பெரியார் புரட்சியாளராம். அதே நேரம் தனது சொத்துக்களை வாழ்வின் இறுதியில் ஏழைகளுக்கு பகிர்ந்து வழங்கிய முத்துராமலிங்க தேவர் சாதியாளரா? முத்துராமலிங்க தேவர்தான் புரட்சியாளர்.

பெரியார் என்ன பீகாரில் பிறந்தாரா? அங்கி சாதிவாரி கணக்கெடுப்பை நிதீஷ் குமார் நடத்துகிறாரே? அந்த கணக்கெடுப்பை நடத்தினால் இத்தனை ஆண்டுகள் நீங்கள் ஆக்கிரமித்தது எல்லாம் அம்பலமாகிவிடுமே. நான் ஆட்சிக்கு வந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவேன். மத்திய அரசு எங்கு இருக்கிறது என்று கேட்பேன். ஏய்.. போப்பா.. அங்கிட்டு.. என்பேன். நான் எண்ணுவேன்.
நான் இங்கு இருக்கிற ரெட்டியாருக்கு கொடுப்பேன். தெலுங்கு செட்டியாருக்கு கொடுப்பேன். கன்னட செட்டியாருக்கு கொடுப்பேன். நாயுடுவுக்கு கொடுப்பேன். எல்லோருக்கும் கொடுப்பேன். ஆனால், இங்கே பாரு.. நான் என்ன சொல்வேன் என்றால்.. ஆந்திராவுக்கு போவேன். கர்நாடகாவுக்கு போவேன். இங்கு இருக்கிற கன்னடர்களுக்கு நான் கொடுத்து இருக்கிறேன்.
இங்கே ஒன்றே கால் தமிழன் இருக்கிறான். அவனை நீங்கள் ஓபிசியில் வைத்து உள்ளீர்கள். Out of Backward என்று வைத்து உள்ளார்கள். அது இல்லாமல் அது இல்லாமல் என்னையும் சேர்த்துக்கொண்டு நான் அங்கு இடஒதுக்கீடு வழங்கியதைபோல் நீயும் கொடு என்று சொல்வேன்." என்றார். இடஒதுக்கீட்டிற்காக மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட பிரிவுகளில் ஒன்றுதான் ஓபிசி.
ஓபிசி என்றால் Out of Backward என்று சீமான் உசிலம்பட்டி கூட்டத்தில் பேசி உள்ளார். ஆனால், அதன் சரியான விரிவாக்கம் என்பது Other Backward class என்பதே. அதாவது இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் என்று தமிழில் பொருள். ஆனால், இதனை பிற்படுத்தப்பட்டோர் பிரிவிற்கு வெளியில் உள்ளவர்கள் என்று தவறுதலாக புரிந்துகொண்ட சீமான், கர்நாடகாவில் தமிழர்களை பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்துகொள்ளுமாறு கேட்பேன் என்று பேசி உள்ளார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications