10 வருஷத்துல இப்போதான் மகளிர் தினம் வருதா? சிலிண்டர் விலை குறைப்பு குறித்து.. மோடிக்கு சீமான் கேள்வி
சென்னை: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.100 குறைக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். இந்நிலையில், இந்த அறிவிப்புக்கு சீமான் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
"இன்று மகளிர் தினத்தையொட்டி வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைக்க அரசு முடிவு செய்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள பல லட்சம் குடும்பங்களின் நிதிச் சுமையை குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைக்கும். குறிப்பாக பெண் சக்திக்கு வலிமை தரும் சமையல் எரிவாயு சிலிண்டரை மேலும் எளிதாக வாங்கும் நிலையை உருவாக்குவதன் மூலம் குடும்பங்களின் நலனை உறுதி செய்வதோடு, ஆரோக்கியமான சுற்றுச்சூழலையும் உருவாக்கலாம்.

பெண்களுக்கு வலிமை சேர்ப்போம் என்ற எங்களின் வாக்குறுதிக்கு இணங்கவும், அவர்களின் வாழ்தலை எளிதாக்குவதை உறுதிப்படுத்தும் வகையிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது" என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார்.
லோக்சபா தேர்தல் நெருங்குவதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த அறிவிப்பு குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "இந்திய பிரதமர் மோடி அவர்கள் மகளிர் நாளினை முன்னிட்டு எரிகாற்று உருளையின் விலையை ரூ.100 அளவிற்கு குறைத்திருப்பது வேடிக்கையாக உள்ளது.
எரிகாற்று உருளை என்பது மகளிருக்கு மட்டுமானதா? வீட்டுக்கானதில்லையா? குடும்பத்திற்கானதில்லையா? பாஜக ஆட்சிக்கு வந்த பத்தாண்டுகளில் இப்போதுதான் முதல்முறையாக மகளிர் தினம் வருகிறதா? கடந்த 5 ஆண்டுகளில் 58 முறை எரிகாற்று உருளையின் விலையை 45% உயர்த்திவிட்டு, இந்த ஆண்டு மட்டும் குறைப்பதற்கு காரணம் மகளிர் நாள் வருவதனாலா? இந்த ஆண்டு தேர்தல் நாள் வருவதனாலா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு, வங்கி ஊழியர்களுக்கான ஊதியம் 17% உயர்வு, உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் ரூ.300 மானியம் மேலும் ஓராண்டுக்கு நீடிப்பு என கடந்த 2 நாட்களில் ஏராளமான அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக சிலிண்டரின் விலையும் குறைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications