விஜயலட்சுமி vs வீரலட்சுமி இடையே "பயங்கர" சண்டை-மிதிச்சுடுவேன் என மிரட்டல்! சீமான் ரொம்ப "மகிழ்ச்சி"!
சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் கூறிய நடிகை விஜயலட்சுமி, அவருக்கு ஆதரவாக இருந்த தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி இருவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. நடிகை விஜயலட்சுமி இது தொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
தம்மை திருமணம் செய்துவிட்டு ஏமாற்றிவிட்டார் சீமான் என்பது நடிகை விஜயலட்சுமியின் 13 ஆண்டுகால புகார். 2011-ல் இது தொடர்பாக சென்னை போலீசில் நடிகை விஜயலட்சுமி புகார் கொடுத்திருந்தார். ஆனால் அப்போது சீமான் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனையடுத்து பெங்களூர் சென்ற நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது தொடர்ச்சியான புகார்களை கூறி வந்தார்.

பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை வந்த விஜயலட்சுமி, வீரலட்சுமி உதவியுடன் மீண்டும் போலீசில் புகார் கொடுத்தார். இப்புகார் தொடர்பாக விஜயலட்சுமியிடம் போலீசார் சுமார் 8 மணிநேரம் விசாரணை நடத்தினர். இதையடுத்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் விஜயலட்சுமி ஆஜர்படுத்தப்பட்டு அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
அதேநேரத்தில் சீமான் தம் மீதான குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்து வருகிறார். தமது லோக்சபா தேர்தல் பணிகளை திசை திருப்புவதற்காகவே இத்தகைய புகார்கள் மீண்டும் மீண்டும் கொடுக்கப்படுகிறது என்றார் சீமான்.
இந்நிலையில் உதகையில் இருந்த சீமானை கைது செய்ய தனிப்படை போலீசார் விரைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் உதகையில் இருந்து கோவை வந்த சீமான், அப்படி எந்த ஒரு போலீசும் தம்மை தேடி வரவில்லை. தாம் சென்னைக்குதான் போக இருக்கிறேன். அதனால் சென்னையில் போலீசார் என்னிடம் விசாரணை நடத்தலாம் என்றார்.
இதனிடையே நடிகை விஜயலட்சுமிக்கும் அவருக்கு ஆதரவாக இருந்த விஜயலட்சுமிக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. பத்திரிகையாளர் ஒருவரை முன்வைத்து இருவருக்கும் இடையே இம்மோதல் நிகழ்ந்துள்ளது. இதனை விஜயலட்சுமி வீடியோ பதிவு மூலம் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். அந்த வீடியோவிலும் விஜயலட்சுமி போலீசுக்கு போவேன்.. மிதிச்சுடுவேன் என்றெல்லாம் மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும் விஜயலட்சுமிக்கு உதவியவர்கள், அவரை வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என மிரட்டுகிற வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. முன்னதாக தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பொய் புகார் சொல்கிறார்; அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போலீசில் மனு கொடுத்திருந்தனர்.












Click it and Unblock the Notifications