"மொதல்ல மோடி ஐயாவுக்கு ஊசி போடுங்க... அப்பறம் அமித்ஷா.. அப்படியே அம்மா நிர்மலா".. சீமான் பொளேர்!
தடுப்பூசி குறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார்
சென்னை: "முதல்ல மோடி ஐயா ஊசியை போட்டுக்குங்க... அப்பறம் ஐயா அமித்ஷா ஐயா ஊசியை போட்டுக்குங்க. உங்க 2 பேர் உயிரும் எங்களுக்கு முக்கியம்.. அதனால நீங்கதான் முதல்ல இந்த ஊசியை போட்டுக்கணும்.. அப்படியே அம்மா நிர்மலா சீதாராமன் ஊசி போட்டுக்கிறதை எங்களுக்கு எடுத்து ஒருமுறை காட்டுங்க.. அல்லது மருத்துவ துறை அமைச்சராவது ஒருமுறை போட்டுக்காட்டுங்க" என்று சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழ்ப்பேரினத்தின் பண்பாட்டுப் பெருவிழாவான பொங்கல் திருநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி - தலைமை அலுவலகத்தில் மகளிர் பாசறை சார்பாக பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த விழா முடிவில் அக்கட்சியின் தலைவர் சீமான் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பல கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பும்போது கொரோனா தடுப்பூசி குறித்தும் கேள்வி எழுப்பினர். அதற்கு சீமான் சொன்ன பதில் இதுதான்:
"கொரோனா என்பது ஒரே மாதிரி நோய்த் தொற்று இல்லை.. அது பல்வேறு விதமா வேலை செய்யுது.. அப்படி இருக்கும்போது இந்த கொரோனா தடுப்பூசியை போட்டுக்கிட்டு, அதன்பிறகு விளைவுகள் வந்தால்? அதுக்கு என்ன சொல்றீங்க? அரசியலுக்காக இதை செய்யறாங்க.. எச்சரிக்கையா இருங்க, பிள்ளைகளுக்கு போட விட்டுறாதீங்க.
எனக்கு உலகம் முழுதும் உறவுகள் இருக்காங்க.. அதேபோல அமெரிக்கா, பிரிட்டனில் டாக்டர்கள் இருக்காங்க.. தயவுசெய்து நம்ம பிள்ளைங்களுக்கு இந்த ஊசியை போட்டுடாதீங்கன்னு சொல்றான். முதல்ல மோடி ஐயா ஊசியை போட்டுக்குங்க... அப்பறம் ஐயா அமித்ஷா ஐயா ஊசியை போட்டுக்குங்க. உங்க 2 பேர் உயிரும் எங்களுக்கு முக்கியம்.. அதனால நீங்கதான் முதல்ல இந்த ஊசியை போட்டுக்கணும்.. அப்படியே அம்மா நிர்மலா சீதாராமன் ஊசி போட்டுக்கிறதை எங்களுக்கு எடுத்து ஒருமுறை காட்டுங்க.. அல்லது மருத்துவ துறை அமைச்சராவது ஒருமுறை போட்டுக்காட்டுங்க..
ஐஏஎஸ், ஐபிஎஸ் ஒரு டெஸ்ட் எழுதணும்.. டாக்டர் ஆகணும்னா டெஸ்ட் எழுதணும்.. வக்கீல் ஆகணும்னா டெஸ்ட் எழுதணும்.. ஆனால் நாட்டை ஆளும் தலைவர்கள் மட்டும் ஏன் ஒரு டெஸ்ட்டும் எழுதறது இல்லை.. மக்களால தேர்ந்தெடுக்கப்பட்டுட்டீங்களா, பாராளுமன்ற உறுப்பினரா, நாடாளுமன்ற உறுப்பினரா இருங்க.. அமைச்சர் ஆகி ஆட்சியை செலுத்தணும்னா ஒரு தேர்வு வைப்போம்.
சமூகம், பொருளியல், அறிவியல், வரலாறு, வேளாண்மை, இதெல்லாம் வெச்சு ஒரு தேர்வு எழுதுங்க.. ஆனால், இவங்க எல்லாம் பார்த்து எழுதுனால்கூட அந்த தேர்வில் பாஸ் பண்ண மாட்டீங்க.. நாட்டை மட்டும் உங்க கிட்ட தந்துடணும்? இவங்களுக்கு என்னத்த பேசறதுன்னு தெரியல? ஒன்னையும் சிந்திக்க தெரியல.. பொருளாதாரம் என்றால் என்னனு தெரியல.. என்ன பண்றது?" என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications