சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதானி 5 வருஷம் ஆளட்டும்.. அப்பறம் அம்பானி ஆளட்டும்.. எதற்கு தேர்தல் நடத்தறீங்க.. சீமான் ஆவேசம்

Google Oneindia Tamil News

Recommended Video

    எல்லாத்தையும் தனியார் மயமாக்கினால் எப்படி?சீமான் ஆவேசம்-வீடியோ

    சென்னை: "எல்லாத்தையும் தனியார் மயமாக்கினால் எப்படி? கல்வி, மருத்துவம் இப்படி எல்லாமே தனியார் மயம். தேர்தல் எதற்கு? இந்தியாவையே ஏலத்துக்கு விட்ற வேண்டியதுதானே? அதானி ஒரு 5 வருஷம் ஆளட்டும்" என்று சீமான் காட்டமாக தெரிவித்துள்ளார்.

    வாக்கு எந்திரத்தில் தங்களது கரும்பு விவசாயி சின்னம் சின்னதாகவும், மங்கலாகவும் இருப்பதாக சீமான் குற்றஞ்சாட்டினார். பின்னர் இதை எதிர்த்து ஹைகோர்ட்டில் நாம் தமிழர் கட்சி வழக்கு தொடர்ந்தது.

    ஆனால் சின்னங்கள் அடங்கிய பட்டியல் அச்சடிக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்து விட்டதாக கூறி, கோர்ட் அக்கட்சியின் மனுவை தள்ளுபடி செய்து விட்டது. தேர்தல் ஆணையம், கோர்ட் இரண்டுமே தங்களை கைவிட்ட நிலையில் செய்தியாளர்களை இன்று சந்தித்து இது சம்பந்தமாக பேசினார் சீமான். அப்போது அவர் கூறியதாவது:

     வரலாறு காணாத மிடில் கிளாஸ் தேர்தல்.. அதிக ஏழை வேட்பாளர்கள்.. திமுக, அதிமுகவுக்கு இதில் இடமில்லை! வரலாறு காணாத மிடில் கிளாஸ் தேர்தல்.. அதிக ஏழை வேட்பாளர்கள்.. திமுக, அதிமுகவுக்கு இதில் இடமில்லை!

    மேலே வருகிறோம்

    மேலே வருகிறோம்

    ''அடக்குமுறையையும் எதிர்கொண்டு நாங்கள் வளர்கிறோம் என்று அனுபவிக்கிற எங்களுக்குத்தான் தெரியும். கொடியை ஏற்ற விடமாட்டார்கள், நாங்கள் கூட்டம் நடத்த இடம் கேட்டால், எந்த சந்தில் ஆளுங்க வர மாட்டோங்களோ அங்கே நடத்திக்கொள்ளுங்கள் என்று சொல்லுகிறார்கள். ஆனால் அதையும் மீறிதான் நாங்கள் மேலெழுந்து வருகிறோம்.

    துரைமுருகன்

    துரைமுருகன்

    வாக்கு இயந்திரத்தில் சின்னத்தை மங்கலாக்குகின்றனர். இது திட்டமிட்ட மறைப்பு. தேர்தல் ஆணையமே ஒரு நாடகக் கம்பெனிதான். துரைமுருகன் வீட்டில் மட்டுமே சோதனை நடத்தியது ஏன்? மற்ற தலைவர்கள் வீடுகளில் பணம் இல்லையா? ஏன் அங்கெல்லாம் நடவடிக்கை எடுக்கவில்லை? சரி.. வாக்குக்குப் பணம் தந்தால் குற்றம், ஒரு வருஷம் ஜெயில்னு சொல்றீங்க. அப்படின்னா இதுவரைக்கும் எத்தனை பேர் ஜெயிலுக்கு போயிருக்காங்க.

    ரஜினி - ரூ. 1 கோடி

    ரஜினி - ரூ. 1 கோடி

    நதிநீர் இணைப்பு என்பது சாத்தியமில்லை. நதியை இணைத்தால் ஒரு கோடி தருவேன் என ரஜினி சொன்னார். அவருக்கு தெரியும் இவங்க நதிகளை இணைக்க மாட்டாங்கன்னு. அதனாலதான் ஒருகோடி தருவேன்னு சொன்னார். சுப்பிரமணியசாமி ஒரு நவீன கால நாரதர். எதாவது ஒரு பிரச்சனையை கிளப்பி விடுவார்.

    அம்பானி

    அம்பானி

    கல்வி, மருத்துவம் இப்படி எல்லாமே தனியார் மயம். இவை எல்லாத்தையும் தனியார்தான் சிறப்பாக நடத்துவார்கள் என்று அரசு நம்பினால், தேர்தல் எதற்கு? இந்தியாவையே ஏலத்துக்கு வித்துட வேண்டியதுதானே? அதானி ஒரு 5 வருஷம் ஆளட்டும். அப்பறம் அம்பானி ஆளட்டும், அப்பறம் ஏன் வரிசையில் நின்று ஓட்டு அளிக்க வேண்டும்?

    சாராயம் ஊத்தி தருவது

    சாராயம் ஊத்தி தருவது

    இந்த மத்திய அரசுகளின் செயல்பாடுகளை கண்டால், ஒரு இளம்தலைமுறை எப்படி நம்பிக்கையோடு எழுந்துவரும். ஒரு ஜனநாயகத்தின் மேல எவ்வளவு வெறுப்பு வரும். எதுவுமே சரியில்லை என்ற உணர்வு வராதா? சாதி, மத உணர்வை தூண்டுவது, சாராயத்தை ஊற்றி கொடுப்பது, திரைக் கவர்ச்சியில் மயக்கி போடுவது என இளைஞர்களை சிந்திக்கவே விடாமல் செய்வதுதான் இந்த அதிகாரமும், ஆட்சியாளர்களும் செய்யும் வேலை.'' என்றார் சீமான்.

    English summary
    Seeman says Karumbu Vivasayi logo deliberately hidden in the Voter Machine
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X