பெண்கள் போனுக்கு செல்லும் "மெசேஜ்".. தமிழ்நாடு அரசின் அதிரடி முடிவு.. உங்க போனுக்கும் வருதா? பாருங்க
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் முதல்கட்ட முகாம்களில் விண்ணப்பங்களை கொடுத்தவர்களின் விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு வருகின்றன. இந்த விண்ணப்பங்கள் சோதனை செய்யப்பட்டு அதில் தேர்வாகும் நபர்களுக்கு உடனடியாக மெசேஜ் ஒன்று அனுப்பப்படுகிறது.
பெண்களுக்கு மாதம் ரூ1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் நடைமுறைக்கு வராமல் இருந்தது. கடந்த பட்ஜெட்டில் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை. பொருளாதார ரீதியாக அரசுக்கு இருக்கும் சில சிக்கலால் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வராமல் இருந்தது.

திட்டம் அறிவிப்பு: இதையடுத்து கடந்த மாதம் இந்த திட்டத்திற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டன. அதில் யாருக்கெல்லாம் இந்த திட்டத்தின் கீழ் பணம் கிடைக்கும்? என்று அறிவிக்கப்பட்டது.
குடும்பத்தில் 21 வயது நிரம்பிய பெண்
ரூ.2.5 லட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள்
5 ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் (அ) 10 ஏக்கருக்குக் குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள்.
- ஆண்டிற்கு வீட்டு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள்
- குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராக இருந்தால் அவரது மனைவி குடும்பத் தலைவியாக கருதப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும்
- திருமணமாகாத பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால், அவர்களும் குடும்பத் தலைவிகளாக கருதப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும்
- ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே பயன் பெற முடியும்
- ஒரு குடும்பத்தில் தகுதியுடையவர்கள், ஒருவருக்கு மேல் இருந்தால், ஒரே ஒரு பயனாளியை குடும்ப உறுப்பினர்கள் முடிவு செய்து கொள்ளலாம்.
யாருக்கெல்லாம் இந்த திட்டத்தின் கீழ் பணம் கிடைக்காது?:
- குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 இலட்சம் மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள்.
- மாநில, மத்திய அரசு ஊழியர்கள்/ பொதுத்துறை நிறுவனங்கள்/ வங்கிகளின் ஊழியர்கள்/ வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள்
- ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் தவிர்த்த உள்ளாட்சி பிரதிநிதிகள்
- சொந்த பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள்
- ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை (Annual Turnover) செய்து ஜிஎஸ்டி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்
- ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம் (OAP), விதவை ஓய்வூதியம், அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள்
தொடங்கிய பணிகள்: இதையடுத்து தமிழ்நாட்டில் கலைஞர் உரிமை தொகை ரூ. 1000 வழங்கும் திட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சாதாரணமாக எல்லோருக்கும் வழங்கிடாமல் முறையாக பயனாளிகளை கண்டுபிடித்து தேவையான நபர்களுக்கு மட்டும் நிதியை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக கடந்த 6 மாதங்களாக பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டன.
அதன் முடிவில் யாருக்கெல்லாம் இந்த திட்டம் பொருந்தும் என்ற லிஸ்ட் வெளியிடப்பட்டது. இதையடுத்து கடந்த இரண்டு வாரம் முன்பு இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் தரப்பட்டன. இந்த விண்ணப்பங்களுடன் சேர்த்து கூடுதலாக டோக்கன் ஒன்றும் வழங்கப்பட்டது.
இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அதன்பின் டோக்கனில் உள்ள தேதியில், முகாம் எங்கே உள்ளது என்று குறிப்பிடப்பட்டு இருக்கும் இடத்தில் சென்று டோக்கனை காட்டி பின்னர் விண்ணப்பத்தை கொடுக்க வேண்டும். இதற்காக ஆதார் கார்ட், ஆதார் கார்ட் இணைக்கப்பட்ட போன் எடுத்து செல்லப்பட வேண்டும்.
முதல் கட்டமாக வழங்கப்பட்ட டோக்கன் மற்றும் விண்ணப்பத்தில் சிலருக்கு விண்ணப்பங்கள் கொடுக்கப்படாமல் விடுபட்டுள்ளது. இதையடுத்து முதல் கட்டமாக வீடு வீடாக சென்று விண்ணப்பம் வழங்கப்பட்ட போது விடுபட்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாக மீண்டும் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, கடந்த 1-4ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
1000 ரூபாய் உரிமை தொகை திட்டத்தின் முதல் கட்ட முகாம்கள் 4ம் தேதியோடு முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட முகாம்கள் நேற்று தொடங்கின. மீதம் உள்ள 14,825 நியாய விலைக்கடைகளில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு இரண்டாம் கட்ட முகாம்கள் 05.08.2023 முதல் 16.08.2023 வரை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் விநியோகம் இன்னொரு பக்கம் நடைபெற்று வருகிறது.
மெசேஜ்கள்: முதல்கட்ட முகாம்களில் விண்ணப்பங்களை கொடுத்தவர்களின் விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு வருகின்றன. இந்த விண்ணப்பங்கள் சோதனை செய்யப்பட்டு அதில் தேர்வாகும் நபர்களுக்கு உடனடியாக மெசேஜ் ஒன்று அனுப்பப்படுகிறது. அதாவது நீங்கள் திட்டத்தில் சேர்க்கப்பட்டதாக மெசேஜ் வரும்.
இந்த கலைஞர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் 1000 ரூபாய் பெறுவதற்காக நீங்கள் விண்ணப்பம் அளித்து அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அதற்கான மெசேஜும் வரும். இல்லையென்றால் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று மெசேஜ் வரும். நிராகரிக்கப்படும் பட்சத்தில் அதை மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது.
அதாவது நீங்கள் விண்ணப்பம் கொடுக்கிறீர்கள், அது நிராகரிக்கப்படுகிறது என்றால் அதை மறுபரிசீலனை செய்ய மேல்முறையீடு செய்ய முடியும். உங்களிடம் ஆவணங்கள் எல்லாம் முறையாக இருந்து நீங்கள் தகுதியானவராக இருந்தால் நீங்கள் எளிதாக பரிசீலனை செய்ய முடியும்.












Click it and Unblock the Notifications