விஜய் அழிச்சாட்டியம் பண்ணுறார்.. கமல்ஹாசனே பரவாயில்லை.. கரூர் விவகாரத்தில் விமர்சித்த செல்லூர் ராஜூ
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சென்னைக்கு அழைத்து விஜய் ஆறுதல் கூறியதை அதிமுக செல்லூர் ராஜூவும் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த கட்சி எல்லாம் இருக்குமா என்றும், இதற்கு கமல்ஹாசனே பரவாயில்லை.. விஜய் அழிச்சாட்டியத்தை தாங்க முடியவில்லை. இதனால் அரசியலை விட்டே போய்விடலாம் என தோன்றுவதாக செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களமும் அனல் பறக்க தொடங்கியுள்ளது. இதுவரை பெரிதாக அதிமுகவை பற்றி விமர்சிக்காமல் இருந்த விஜய், தனித்துவிடப்பட்டதும் அதிமுகவை சீண்ட தொடங்கியுள்ளார். ஊழல் கட்சி, அடிமை கட்சி என விஜய் அதிமுகவை விமர்சிக்க தொடங்கியதும், பதிலுக்கு அதிமுகவும் விஜய்யை பண்ணையார் கட்சி என்று விமர்சிக்க தொடங்கியுள்ளது.

விஜய்யை கடுமையாக விமர்சித்த செல்லூர் ராஜூ
கரூர் விவகாரம் குறித்தும் விஜய்யை அதிமுகவினர் விமர்சிக்க தொடங்கியுள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவும் கரூர் விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சென்னைக்கு அழைத்து விஜய் ஆறுதல் கூறியதை விமர்சித்துள்ளார். இந்த கட்சி எல்லாம் இருக்குமா என்றும், இதற்கு கமல்ஹாசனே பரவாயில்லை என்றும் செல்லூர் ராஜூ பேசியுள்ளார். இது தொடர்பாக கூறியதாவது:-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களை பண்ணை வீட்டுக்கு கூப்பிட்டு இரங்கல் தெரிவிக்கிறார். இது என்னப்பா புதுசா இருக்கு.. விஜய்யின் அழிச்சாட்டியத்தை பார்த்தால் அரசியலே விட்டே போயிடலாம் என தோன்றுகிறது. ஒருத்தர் இரங்கல் தெரிவிக்க இப்படியா செய்வாங்க.. இறந்தவர்கள் வீட்டுக்கு தான் போயி எல்லாரும் இரங்கல் தெரிவிப்பாங்க.. ஆனா இவர்..
ஆதவ் அர்ஜுனாவை பக்கத்தில் வைத்துக்கொண்டு
அவரை பார்க்க தான் அந்த மக்கள் அங்கே வந்து இருந்தாங்க.. இப்பவே இப்படி செய்தால், பின்னால் எப்படி இருக்குமோ.. இந்த கட்சி எல்லாம் இருக்கும் என்று நினைக்கிறீங்களா.. எனக்கு என்னவோ சான்ஸ் இல்லைன்னு தோனுது.. இதற்கு கமல்ஹாசன் கூட பரவாயில்லையே.. இது பில்டப்பிலேயே ஓடிப்போயிரும்.
ஊழலை ஒழிப்பேன் என சொல்லும் விஜய் பக்கத்திலேயே ஆதவ் அர்ஜுனா இருக்கிறார். அவர் என்ன யோக்கியரா.. லாட்டரி விற்று ஏழை, எளிய மக்களின் சொத்து, பணங்களை பிடுங்கிய குடும்பம் தான்.. எவ்வளவு ஊழல் செய்தவர். எங்களுக்கு எதிரி யார் என்றால் திமுக தான். வேறு யாரும் கிடையாது. சினிமா தியேட்டரில் ஸ்பெஷல் ஷோ போடுவது மாதிரி தான்..
பயந்து நடுங்குகிறார்
எடப்பாடிக்கு இருக்கின்ற செல்வாக்கு அதிகமாகி இருக்கிறது. தொண்டர்கள் நிர்வாகிகள் எல்லாரும் இப்போ மீண்டும் அதிமுகவில் சேர்ந்து இருப்பதை பார்த்து திமுக தலைவர் ஸ்டாலின் பயந்து நடுங்குகிறார். எதிர்க்கட்சியாக கூட வராத கட்சி தான் திமுக. மத்திய அரசு தான் போதைப்பொருளை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் மாநில அரசின் உளவுத்துறை எதற்கு இருக்கிறது. எதற்கு எடுத்தாலும் மத்திய அரசு என்று சொல்லக்கூடாது. என்று பேசினார்.
முன்னதாக நேற்று நடந்த தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய விஜய்,
ஊழல் செய்யவே மாட்டேன்.. ஒரு பைசா கூட தொட மாட்டேன்.. எனக்கு அதைத் தொட வேண்டிய அவசியமும் இல்லை.. ஒரு துளி ஊழல் கூட படிய விட மாட்டேன்.. நீங்க என்ன அழுத்தம் கொடுத்தாலும் அடங்கிப் போறதுக்கோ.. அண்டி பிழைக்கவோ.. அடிமையாய் இருக்கவோ நான் அரசியலுக்கு வரவில்லை. ஒருத்தர் பாஜகவிடம் நேரடியாக சரண் அடைந்துவிட்டார்கள். அவர்கள் கூட பரவாயில்லை.. இன்னொருத்தங்க, அதான் தீய சக்தி நேரடியாக கூட்டணி வைத்துள்ளனர். என்று திமுக, அதிமுகவை விமர்சித்து பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications