Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுகவிற்கு அழைப்பு விடுத்த செல்லூர் ராஜூ..திமுக கூட்டணியில் இணக்கமாக இருப்பதாக சொன்ன திருமாவளவன்

அகில இந்திய அளவில் திமுக கூட்டணியை கொண்டு செல்ல இருப்பதே அடுத்தகட்ட பணி என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணியில் வலிமையாக, நல்ல இணக்கத்துடன் இருக்கிறோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணிக்கு வருமாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விடுத்த அழைப்புக்கு பதில் கொடுத்திருக்கிறார் திருமாவளவன்.

லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்களே இருக்கிறது என்பதால் இப்போதிருந்தே அரசியல் வானில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் மறைமுக பேரங்கள் ஆரம்பித்து விட்டன. தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராகலாம் என்று புது யோசனை தெரிவித்தார் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா. தனது பிறந்தநாள் மேடையிலேயே அதற்கு பதில் கொடுத்த ஸ்டாலின், காங்கிரஸ் அல்லாத கூட்டணியால் பயன் இல்லை என்று கூறியதோடு, பாஜகவை எதிர்க்க அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். திருமாவளவனும் அதை பின்தொடர்ந்தே பேட்டிகளை கொடுத்து வருகிறார்.

தமிழ்நாட்டில் எப்போதுமே திராவிட கட்சிகளின் கூட்டணி தான் பிரதானமாக இருக்கும். இப்போதும் கூட திமுக மற்றும் அதிமுக தலைமையிலேயே கூட்டணி உள்ளன. கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, அதன் பிறகு கூட்டணியில் இருந்து விலகியது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் கூட தனித்தே களமிறங்கியது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலை

அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், திமுக கூட்டணிக்குள் பாமகவைக் கொண்டு வர முயற்சிகள் நடப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கான வேலைகள் திரைமறைவில் நடப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் பாமக இருக்கும் கூட்டணியிலோ,பாஜக இருக்கும் கூட்டணியிலோ தான் பயணிக்க மாட்டேன் என்று பகிரங்கமாகவே கூறி வருகிறார் தொல். திருமாவளவன். இந்த சூழ்நிலையில்தான் திமுக கூட்டணியை விட்டு விசிக வெளியே வர வேண்டும் என்று கூறியுள்ளார் அண்ணாமலை.

 திருமாவளவன் முடிவு

திருமாவளவன் முடிவு

அதற்கு பதில் தரும் வகையில் பேசிய திருமாவளவன், தமிழ்நாட்டில் அதிமுகவின் தோளில் ஏறி பாஜக பயணம் செய்கிறது. பாஜக கூட்டணியின்றி அதிமுக தனித்து போட்டியிட வேண்டும் என்று சமீக கால பேட்டிகளில் கூறி வருகிறார் திருமாவளவன். ஆக தமிழக அரசியல் வானிலை மாற்றங்கள் நிகழ்வது போல தோன்றினாலும் இது எந்த அளவிற்கு கூட்டணி வரை கொண்டு செல்லும் என்பதை போக போகத்தான் பார்க்க முடியும்.

விசிகவின் பயணம்

விசிகவின் பயணம்

1991ல் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆரம்பித்த நாள் முதல் கவனிக்கப்படாமல் இருந்த திருமாவளவன்,
2006 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 9 தொகுதிகளில் தனிச் சின்னத்தில் விசிக போட்டியிட்டது. காட்டுமன்னார்குடியில் டி.ரவிக்குமாரும், மங்களூரில் கு.செல்வப்பெருந்தகையும் வெற்றி பெற்றனர். ஆனால், 2006 உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட சிக்கலால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி திமுகவுடன் கூட்டணி அமைத்தது. 2009 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் வென்றார்.

மாறி மாறி கூட்டணி

மாறி மாறி கூட்டணி

1999 மக்களவைத் தேர்தலில் ஜி.கே.மூப்பனார் அழைப்பை ஏற்று முதல் முதலாக தமாகாவுடன் கூட்டணி அமைத்து விசிக தேர்தல் அரசியலில் அடியெடுத்து வைத்தது. முதல் தேர்தலிலேயே பெரம்பலூரில் 1 லட்சம், சிதம்பரத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று பலரின் கவனம் பெற்றார். 2001ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் கடலூர் மாவட்டம் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு திருமாவளவன் சட்டசபைக்குள் நுழைந்தார். திமுக உறுப்பினராக சட்டசபையில் சுயேச்சையாக செயல்பட முடியவில்லை எனக் கூறி 2004ஆம் ஆண்டு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

 எம்.பியான திருமாவளவன்

எம்.பியான திருமாவளவன்

2004ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், புதிய தமிழகம் கட்சியுடன் இணைந்து மக்கள் கூட்டணியை உருவாக்கினார். சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் இரண்டரை லட்சம் வாக்குகளைப் பெற்றார். ஆனால், 2006 உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட சிக்கலால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி திமுகவுடன் கூட்டணி அமைத்தது. 2009 ஆம் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் வென்றார்.

திமுக உடன் இணக்கம்

திமுக உடன் இணக்கம்

திமுக கூட்டணியில் 2011 சட்டசபைத் தேர்தலில் 10 தொகுதிகளிலும், 2014 லோக்சபா தேர்தலில் 2 தொகுதிகளிலும் போட்டியிட்டு அனைத்திலும் விசிக தோல்வி அடைந்தது. இதனையடுத்து கடந்த 2016ல் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் விசிக 25 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது. கடந்த 2019ல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் சிதம்பரத்தில் தனிச் சின்னத்தில் திருமாவளவனும், விழுப்புரத்தில் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டு வென்றனர். இதன் மூலம் இரண்டு எம்.பிக்கள் லோக்சபாவில் உள்ளனர். 2021 சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து 6 தொகுதியில் போட்டியிட்டு 4 எம்எல்ஏக்களை அனுப்பி வைத்தது.

 திருமாவளவன் வாழ்த்து

திருமாவளவன் வாழ்த்து

இந்த சூழ்நிலையில்தான் கூட்டணியில் மாற்றங்கள் வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி வென்றதற்கு திருமாவளவன் வாழ்த்து தெரிவித்தார். அதிமுக கூட்டணி தலைவர்களே, இந்த விவகாரத்தில் எடப்பாடிக்கு எதுவும் சொல்லாத நிலையில், திருமாவளவனின் வாழ்த்து செய்தியும் பேசுபொருளானது. திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுவதற்கான ஆரம்ப அறிகுறிகள் என்றும் சிலர் தெரிவித்தனர்.

செல்லூர் ராஜூ அழைப்பு

செல்லூர் ராஜூ அழைப்பு

திருமாவளவனை கூட்டணிக்கு வரவேற்பது போல முன்னாள் அமைச்சர்கள் பலரும் பேசி வருகின்றனர். திருமாவளவன் எங்கள் சகோதரர்..எங்க அம்மா அதிக அன்பும் பாசமும் வைத்திருந்தார். கூட்டணி எப்போது வேண்டும் என்றாலும் மாறலாம். அரசியலில் யாரும் நிரந்தர எதிரியும் இல்லை நண்பர்களும் இல்லை என்று கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. திருமாவளவனை கூட்டணியில் இணைப்பது குறித்து எங்கள் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்வார் என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் மறுப்பு

திருமாவளவன் மறுப்பு

இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன், தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இணக்கமாகவும் வலிமையாகவும் இருப்பதாக கூறியுள்ளார். அகில இந்திய அளவில் திமுக கூட்டணியை கொண்டு செல்ல இருப்பதே அடுத்தகட்ட பணி என்று தெரிவித்து அதிமுக கூட்டணிக்கு வருமாறு விடுத்த அழைப்பை நாசூக்காக மறுத்துள்ளார். ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு மனிதாபிமானம் என்பது கேள்விக்குறியாக உள்ளது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். சட்டத்தின் அடிப்படையில் முடிவெடுக்காவிட்டாலும் மனிதாபிமான அடிப்படையில்கூட முடிவெடுத்திருக்கலாம் எனவும் திருமாவளவன் கூறியுள்ளார். எது எப்படியோ இப்போதைக்கு கூட்டணியை விட்டு விலகமாட்டேன் என்று திருமாவளவன் கூறினாலும் பாமகவின் நகர்வு விசிகவை வேறு கூட்டணிக்கு மாற்ற வைக்குமா என காலம்தான் பதில் சொல்லும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+