கூட்டணியில் குண்டு வைத்த கார்த்தி? குமுறும் காங்., கொந்தளிக்கும் திமுக! செல்வ பெருந்தகை சொல்வதென்ன?
சென்னை : கூவம் நதியை சீரமைத்தது தொடர்பாக சென்னை மேயர் பிரியாவிடம் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பொதுவெளியில் வெள்ளை அறிக்கை கேட்டதை தவிர்த்து இருக்கலாம் எனவும் திமுக காங்கிரஸ் கூட்டணியில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் தமிழகத்தில் அமைக்கப்பட்ட தேர்தல் கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. ஒரு இடத்தில் கூட அந்த கட்சி வெற்றி பெற முடியாமல் போனது.

அதே நேரத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி தமிழகத்தில் 40க்கு 40 இடங்களை கைப்பற்றியது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. குறிப்பாக நான்காம் இடத்துக்கும் 5ஆம் இடத்துக்கும் அக்கட்சியின் வேட்பாளர்கள் தள்ளப்பட்டனர். அது மட்டும் அல்லாமல் பல இடங்களில் டெபாசிட் பறிபோனது. இதையடுத்து 2019ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இணைந்து மக்களவைத் தேர்தலை சந்தித்த பிறகு ஓரளவு எம்பிக்களை பெற முடிந்தது. இந்த நிலையில் தற்போதைய தேர்தலிலும் திமுக ஆதரவு காரணமாகவே காங்கிரஸ் எம்பிக்கள் வெற்றி பெற்றதாக கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் காங்கிரஸுக்குள்ளேயே கூட்டணி தொடர்பாக பல உரசல்கள் இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. குறிப்பாக கேஎஸ் அழகிரிக்கு பிறகு தலைவராக நியமிக்கப்பட்ட செல்வப் பெருந்தகை கட்சியை வளர்ப்பதாகக் கூறிய பேச்சு, கட்சிக்குள்ளேயே கலவரம் வெடித்தது. தமிழகத்தில் எத்தனை நாள் நாம் பிறரை சார்ந்து இருக்க போகிறோம்? சுயமாக வளர வேண்டாமா? மற்ற கட்சிகளை சாராத நிலை இருக்க வேண்டும் என்றால் காங்கிரஸ் தொண்டர்கள் தான் பதில் சொல்ல வேண்டும் அவர் பேச, செல்வப் பெருந்தகை, கார்த்தி சிதம்பரத்தின் பேச்சு கூட்டணிக்கு ஊறு விளைவிக்கும் பேச்சாக இருக்கிறது என ஈவிகேஎஸ் இளங்கோவன் பதிலடி கொடுத்தார்.
இதற்குப் பிறகாக திமுக கூட்டணிக்கு வேட்டு வைக்கும் வகையில் பேசி வருகிறார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தில் மகனும் தற்போதைய சிவகங்கை தொகுதி எம்பியுமான கார்த்தி சிதம்பரம். கடந்த தேர்தலில் சிவகங்கையில் கார்த்தி சிதம்பரத்திற்கு மீண்டும் சீட் கொடுக்கக் கூடாது என அந்த கட்சிக்காரர்களே தீர்மானம் போட்ட நிலையில் ப.சிதம்பரத்திற்காக எதிர்ப்பை மீறி அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அங்கு திமுகவினரின் உழைப்பால் தான் கார்த்திக் சிதம்பரம் வென்றார் இல்லையென்றால் அவர் டெபாசிட் கூட பெற்றிருக்க முடியாது என காங்கிரஸ்காரர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி இருக்கிறார் கார்த்தி சிதம்பரம். சென்னை கூவம் நதியை சீரமைக்க எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது? எவ்வளவு செலவு செய்யப்பட்டது? என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அவர் ட்வீட்ர் செய்ததோடு சென்னை மேயர் பிரியாவுக்கும் கடிதம் அனுப்பினார். இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கப்படும் என பிரியா கூறிய நிலையில் இந்த விவகாரம் அத்தோடு முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திமுகவினர் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் கொந்தளிக்க ஆரம்பித்திருக்கின்றனர். திமுக இல்லை என்றால் கார்த்தி சிதம்பரம் வந்திருக்க முடியாது.. நன்றி கெட்ட தனமாக பேசுகிறார்.. என பலரும் சமூக வலைதளங்களை கொந்தளித்து வரும் நிலையில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் பிரச்சனை இருந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசி இருக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை. இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிடம் பேசிய அவர்,"திமுக, காங்கிரஸ் கூட்டணியில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. பல பிரச்சினைகளை குறிப்பாக சனாதனம் உள்ளிட்டவற்றை தடுக்க திமுகவும் காங்கிரசும் கைகோர்த்து நிற்கிறது. கூவம் விவகாரம் தொடர்பாக சென்னை மேயரிடம் பொதுவெளியில் வெள்ளை அறிக்கை கேட்டதை காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் இருக்கலாம்.
அதே நேரத்தில் காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்த சில விஷயங்களை பேச வேண்டி இருக்கிறது. கூட்டணியில் பிரச்சனை என்றாலும் தேசிய தலைமை முடிவு எடுக்கும். அதே நேரத்தில் தற்போதைக்கு கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. ஒருவேளை பிரச்சினை வந்தாலும் பேசி தீர்ப்போம். அதற்காக கருத்துச் சொல்லக்கூடாது என்று இல்லை.. கூட்டணி கட்சிகள் கருத்து சொல்வதில் என்ன தவறு இருக்கிறது" என பேசினார். இதனால் இப்போதைக்கு இந்த விவகாரம் சற்றே இருந்திருக்கிறது.
-
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க!












Click it and Unblock the Notifications