Selvaperunthagai: காங்கிரஸை அவமதிக்கும் தளபதி மீது நடவடிக்கை எடுங்க! ஸ்டாலினுக்கு கோரிக்கை
சென்னை: மொழி போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை அவமதிக்க வேண்டிய அவசியம் என்ன என்று திமுக நிர்வாகி தளபதிக்கு, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதியில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் பேரியக்கத்தை அவமதிக்கும் வகையில் திமுக மாநகர செயலாளர் கோ.தளபதி அவர்கள் பேசியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

மொழி, சமூக நீதி, ஜனநாயக உரிமைகளுக்காக உயிர்நீத்த தியாகிகளின் நினைவை போற்ற வேண்டிய மேடையில், கூட்டணி கட்சியை இழிவுபடுத்தும் வகையில் பேசிய கோ.தளபதி அவர்களின் பேச்சு தேவையற்றதும், கண்டிக்கத்தக்கதுமானதும் ஆகும்.
காங்கிரஸ் பேரியக்கம் இன்று தமிழ்நாடு முழுவதும் வலுவான அமைப்புடன் செயல்பட்டு வருகிறது. 100% பூத் கமிட்டி அமைக்கும் பணி நிறைவு பெறும் தருவாயில் உள்ளது; 85% கிராம கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அமைப்பு சீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் கிராம சபை தொடர்பான பணிகள் மூலம், மக்களின் உரிமை, மரியாதை, வாழ்வாதாரம் குறித்த போராட்டத்தை காங்கிரஸ் பேரியக்கம் நேரடியாக மக்களிடையே கொண்டு சென்று வருகிறது.
கூட்டணி அரசியலின் மாண்பை மிதித்து, பொது மேடையில் காங்கிரஸ் பேரியக்கத்தையும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இழிவுபடுத்திப் பேசிய திமுக மாநகர செயலாளர் கோ.தளபதி அவர்களின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடந்த மொழி போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தில் திமுக மாநகர செயலாளர் கோ.தளபதி பேசுகையில், காங்கிரஸ் கட்சிக்கு 3000, 4000 வாக்குகள் மட்டுமே இருக்கிறது, ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோருக்கு சீட் கொடுக்கக் கூடாது.
இருவரும் எப்படியோ எம்பியாகிவிட்டனர். ஆனால் மற்றவர்கள் எம்எல்ஏக்கள் ஆக வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் யார் எப்படி போனால் என்ன என்று தற்போது அதுல பங்கு வேணும், இதுல பங்கு வேண்டும் என கேட்கிறார்கள்.
திமுக இல்லையென்றால் இந்தியா கூட்டணியே கிடையாது. முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர்தான் இந்த இந்தியா கூட்டணியை காப்பாற்றி வருகிறார்கள். காங்கிரஸ் கமிட்டிக்கு பூத் கமிட்டி வைக்கக் கூட ஆள் கிடையாது. இப்படிப்பட்ட சூழலில் அவர்கள் பேசுவது வேதனையாக இருக்கிறது என தெரிவித்திருந்தார்.
தளபதியின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆகியோர் விமர்சித்துள்ள நிலையில் தற்போது காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகையும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதற்கு மாணிக்கம் தாகூர் நன்றி தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது: 22 ஆண்டுகளாக நண்பர்கள் ஆன வெற்றிக்கு பிறகு பங்கு என கூறினால் எப்படி இப்படி தரம்தாழ்ந்து தளபதி அவர்கள் பேசுகிறார்? .
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அவர்களுக்கு நன்றிகள்.
நாட்டை காக்க சங்கிகளை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கம் கொண்ட நாம் என்று வெல்வோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications