ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும்! செல்வப்பெருந்தகை போர்க்குரல்!
சென்னை: கோரமண்டல் ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் என செல்வப்பெருந்தகை போர்க்குரல் உயர்த்தியுள்ளார்.
மேலும், விபத்துக்கு காரணமாக அதிகாரிகள், பணியாளர்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;

கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒடிசா மாநிலம், பாலோசோர் மாவட்டம், பகனகா பஜார் ரயில் நிலையம் அருகே பயங்கர விபத்திற்குள்ளாகி 230-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், உடனடியாக ஒரிசா மாநில முதலமைச்சரை தொடர்பு கொண்டு மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்திருக்கிறார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட ஒரிசாவிற்கு அமைச்சர் பெருமக்கள் அடங்கிய ஒரு குழுவையும் சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளார். நிவாரண உதவித் தொகையும் அறிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களை தமிழ்நாடு அழைத்து வர சிறப்பு ரயில் இயக்கப்படுமென கூறியுள்ளார். இவ்வளவு விரிவான ஏற்பாடு செய்துள்ளது மிகுந்த ஆறுதல் அளிக்கிறது.
விபத்தில் இறந்தவர்களையும் மற்றும் காயம் அடைந்தவர்களையும் மீட்டு உடனடியாக அவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து சிறப்புச் சிகிச்சை அளிக்கவேண்டும். மேலும், அவர்களுக்கு நிவாரண உதவி விரைந்து கிடைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
விபத்துக்கான காரணத்தை உடனடியாக ஆய்வு செய்து எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நடைபெறாமல் தடுக்க ஒன்றிய ரயில்வே துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். விண்வெளியில் சாதனை செய்யும் அளவிற்கு அறிவியல் துறையில் முன்னேறிய நம் நாட்டில் இதுபோன்று உயிர்பலி ஆகும் கோரவிபத்துக்கள் அதிகாரிகளின் கவனக்குறைவாலும், அலட்சியத்தினாலுமே ஏற்படுகிறது.
விபத்துக்கு காரணமாக அதிகாரிகள், பணியாளர்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் விபத்திற்கு பொறுப்பேற்று ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டுக் கேட்டுக் கொள்கிறேன்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications