செங்கோட்டையன் சொல்ல சொல்ல கேட்காத விஜய்.. ஆளுநரிடம் வசமாக சிக்கியது எப்படி? இனி முதல்வராவதில் சிக்கல்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு மெஜாரிட்டி இல்லை. இந்நிலையில் தான் மெஜாரிட்டியை நிரூபித்தால் ஆட்சியை பிடிக்க முடியும் என்று தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்துள்ளனர். இதனால் விஜய் முதல்வராவதில் சிக்கல் ஏற்படடுள்ளது. இந்நிலையில் தான் செங்கோட்டையன் சொல்வதை கேட்காமல் இளம் நிர்வாகிகளின் பேச்சை கேட்டு விஜய் எடுத்த முடிவு தான் இதற்கு முக்கிய காரணம் என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் தொங்கு சட்டசபை அமைந்துள்ளது. யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. தமிழகத்தில் மெஜாரிட்டிக்கு 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்ல. விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றள்ளது. காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்களின் ஆதரவு தெரிவித்துள்ளனர். இருப்பினும் மெஜாரிட்டிக்கு 5 எம்எல்ஏக்கள் குறைவாக உள்ளனர்.

இந்த எம்எல்ஏக்களின் ஆதரவில் விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் உரிமை கோரினார். ஆனால் அவர் அழைப்பு விடுக்கவில்லை. மெஜாரிட்டி இல்லை என்று கூறிவிட்டார். இதனால் விஜய் மற்றும் தவெகவினர் தவித்து வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிகவிடம் உள்ள 6 எம்எல்ஏக்களிடம் ஆதரவு கோரி வருகின்றனர்.
செங்கோட்டையன் சொல்லி கேட்காத விஜய்
இந்நிலையில் தான் விஜய் இப்படி சிக்கலில் சிக்க தவெக மூத்த தலைவர் செங்கோட்டையன் சொல்வதை கேட்காமல் செய்த தவறு தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோர தவெக முடிவு எடுத்தது. அப்போது செங்கோட்டையன் 108 தொகுதிகளில் நாம் வெற்றி பெற்றுள்ளோம்.
இந்த அளவுக்கு வேறு கட்சிகள் வெல்லவில்லை. இதனால் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் நம்முடைய எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கி ஆட்சியமைக்க உரிமை கோர வேண்டும். அதன்பிறகு சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கலாம் என்று கூறியுள்ளார்.
அனுபவம் இல்லாதவர்களின் பேச்சுக்கு ஓகே
ஆனால் அதேவேளையில் அரசியல் அனுபவம் இல்லாத முதல் முறையாக எம்எல்ஏவான தவெகவை சேர்ந்த சில நிர்வாகிகள் அதனை ஏற்கவில்லை. விஜய்யிடம் காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதங்களையும் பெற்று மொத்தமாக வழங்குவோம் என்று கூறியுள்ளார். இதுதான் தற்போது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. தவெக தனிப்பெரும் கட்சி என்று கூறி ஆட்சியமைக்க கோரினால் ஆளுநர் அனுமதி வழங்கியிருப்பார்.
ஆளுநர் வைத்த 'செக்'
ஆனால் தவெக, காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்களின் பெயர்களையும் சேர்த்து வழங்கியதால் தனி பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை. கூட்டணி ஆட்சிக்கு உரிமை கோருகிறார் என்று ஆளுநர் எடுத்து கொண்டார். இதனால் மெஜாரிட்டிக்கு தேவையான மீதமுள்ள 5 எம்எல்ஏக்கள் எங்கே? என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கேட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி விரைவில் 5 எம்எல்ஏக்களின் ஆதரவுகளை பெற்று வந்து மெஜாரிட்டியை நிரூபித்தால் ஆட்சியமைக்க அழைப்பதாக உறுதியாக கூறிவிட்டார். ஆனால் பிற 5 எம்எல்ஏக்களின் ஆதரவு தவெகவிற்கு இன்னும் கிடைக்கவில்லை. இதனால் விஜய் முதல்வராவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அனுபவசாலி செங்கோட்டையன்
தவெகவில் செயல்பட்டு வரும் செங்கோட்டையன் தமிழகத்தில் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவராக உள்ளார். இவர் சத்தியமங்கலம் தொகுதியில் ஒருமுறையும், கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் 8 முறை அதிமுக சார்பிலும், இப்போது தவெக சார்பிலும் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் 10வது முறையாக அவர் எம்எல்ஏவாக இருக்கிறார். சமீபத்தில், எடப்பாடி பழனிச்சாமி உடனான கருத்து வேறுபாடால் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்ற இவர் அரசியலில் பல்வேறு நுணுக்கங்களை அறிந்த அனுபவசாலி. ஆனால் அவரது பேச்சை கேட்காமல் விஜய் தற்போது சிக்கலில் சிக்கி முதல்வராக பதவியேற்க முடியாமல் சிக்கலில் தவித்து வருகிறது.
-
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்!












Click it and Unblock the Notifications