செங்கோட்டையன் லீடிங்.. கோபிசெட்டிபாளையம் தேர்தல் களத்தில் நிலவும் உச்சகட்ட பரபரப்பு
சென்னை: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே மிகுந்த பரபரப்பு நிலவி வருகிறது.. குறிப்பாக, காலை 8.30 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் இருந்தே அதிமுக வேட்பாளர் செங்கோட்டையன் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்.. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மற்ற வேட்பாளர்களை விட தபால் வாக்குகளில் செங்கோட்டையன் கணிசமான வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருந்து வருகிறார். இது ஈரோடு மாவட்ட தவெகவினருக்கு நம்பிக்கையை தந்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற நிலையில், இன்று காலை 8.30 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக துவங்கியது..

இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மெகா கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட பல கட்சிகளும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளும் களம் கண்டன..
இதுதவிர விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்துப் போட்டியிட்டன.. மொத்தம் 4023 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்த தேர்தலில், சுமார் 5 கோடியே 73 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் தகுதி பெற்றிருந்தனர்..
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு சுற்று முடிவுகளையும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பொது ஒலிபெருக்கி மூலம் உடனுக்குடன் அறிவித்து வருகின்றனர்..
தபால் வாக்கு துவங்கிய சிறிது நேரத்தில் ஆளும் திமுக கூட்டணி 46 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று முன்னணியில் உள்ளது.. அதேசமயம் எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணி 9 இடங்களிலும், முதல் தேர்தலை சந்திக்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 7 இடங்களிலும் முன்னிலை வகித்து தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தின.
குறிப்பாக பெரம்பூர் தொகுதியில் விஜய் முன்னிலை பெற்று வரும் சூழலில், திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் பின்னடைவை சந்தித்துள்ளார்.. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் திமுகவின் வெற்றியை கணித்திருந்தாலும், ஒரு சில கணிப்புகள் விஜய்யின் கட்சி கிங் மேக்கராக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளதால் இறுதி முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளன..
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே மிகுந்த பரபரப்பு நிலவி வருகிறது.. குறிப்பாக, காலை 8.30 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் இருந்தே அதிமுக வேட்பாளர் செங்கோட்டையன் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்.. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மற்ற வேட்பாளர்களை விட தபால் வாக்குகளில் செங்கோட்டையன் கணிசமான வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருந்தார்.
தற்போது தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.. ஒவ்வொரு சுற்று முடிவுகளும் வெளியாகி வரும் நிலையில், கோபி தொகுதியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால் அந்தப் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.. அவரது ஆதரவாளர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தின் வெளியே உற்சாகத்துடன் திரண்டு முடிவுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்..!!












Click it and Unblock the Notifications