அதிமுகவினரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய செங்கோட்டையன்! விஜய் கூட்டத்தில் பங்கேற்காமல் சொந்த ஊரில் முகாம்
சென்னை: தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரப் பயணம் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ள நிலையில், மறுபுறம் செங்கோட்டையன் மாற்றுக் கட்சியினரை தவெகவில் இணைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார். இன்று விஜய்யின் புதுச்சேரி பிரச்சாரத்தில் கூட பங்கேற்காத செங்கோட்டையன், கோபியில் தங்கி, கட்சிப் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்.
அதிமுக சத்தியமங்கலம் ஒன்றிய செயலாளர் என்.என். சிவராஜ் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலகி செங்கோட்டையன் முன்னிலையில் இன்று தவெகவில் இணைந்து உள்ளனர். மேலும், செங்கோட்டையன் கை நீட்டும் நபருக்குத்தான் எங்கள் ஓட்டு என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் இன்று தவெக பொதுக்கூட்டம் நடைபெற்றது. தவெக தலைவர் விஜய் 72 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் பிரச்சார வாகனத்தில் ஏறி, மக்கள் மத்தியில் பேசினார். கரூர் துயரச் சம்பவத்துக்குப் பிறகு பொதுவெளியில் பிரச்சாரம் மேற்கொள்ளாமல் இருந்து வந்த விஜய் இன்று மீண்டும் மக்கள் மத்தியில் பேசியுள்ளார்.
விஜய் பங்கேற்ற இந்த கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. விஜய்க்கு முன்னதாக கட்சி முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி, ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோரும் பேசினர். ஆனால், செங்கோட்டையன் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. சமீபத்தில் தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர், கொங்கு மண்டல அமைப்புச் செயலாளர் பொறுப்புகள் வழங்கப்பட்டன. செங்கோட்டையன் தவெகவில் இணைந்தபிறகு நடந்த முக்கியமான பொதுக்கூட்டம் என்றாலும் இதில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தற்போது தமது சொந்த ஊரில் உள்ளார். விரைவில் ஈரோடு மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் செங்கோட்டையன். அதன் காரணமாகவே இன்று புதுச்சேரிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.
வரும் 16ஆம் தேதி ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளார் தவெக தலைவர் விஜய். மக்கள் சந்திப்பிற்காக பவளம்பாளையம் பகுதியில் இடம் தேர்வு செய்தது தவெக. ஆனால், அங்கு பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுத்தது காவல்துறை. இந்நிலையில், விஜயமங்கலம் பகுதியில் தவெக தேர்வு செய்த இடத்திற்கு நேரில் சென்று செங்கோட்டையன் ஆய்வு செய்துள்ளார்.
இந்நிலையில், சத்தியமங்கலம் அதிமுக ஒன்றிய செயலாளர் என்.என். சிவராஜ் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலகி செங்கோட்டையன் முன்னிலையில் இன்று தவெகவில் இணைந்து உள்ளனர். மேலும், செங்கோட்டையன் கை நீட்டும் நபருக்குத்தான் எங்கள் ஓட்டு என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணன் கே.ஏ.காளியப்பனின் மகன் கே.கே.செல்வன் திமுகவில் இருந்து விலகி, இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். இவர் திமுகவில் சுற்றுச்சூழல் அணி ஈரோடு வடக்கு மாவட்ட அமைப்பாளராக இருந்தவர். கே.கே.செல்வனுடன் அவரது ஆதரவாளர்களும் இன்று அதிமுகவில் இணைந்தனர்.












Click it and Unblock the Notifications