மதிமுவை அட்டாக் செய்த ஆ ராசா! துரை வைகோ கொந்தளிப்பு.. ஒரு வரியில் சொல்ல முடியாது என கோபம்
சென்னை: பொதுக்குழுவை இன்னொருத்தர் கூட்ட போகிறாராம். கூட்டணியில் இருக்கிறோமா.. இல்லையா என்று.. அப்படியே ஜனத்திரள் சமுதாயம்.. இவர் போனால் அப்படியே ஒரு லட்சம் பேர் கூடுறாங்களாம். மொத்த கட்சியே கலைஞர் கோட்டம் கொள்ளாது என மதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து ஆ ராசா பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு துரை வைகோ பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக 2 தொகுதிகளில் வென்றது. தேர்தல் முடிவுக்கு பிறகு திமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற கட்சிகளான காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளித்தன. இதனை திமுக நிர்வாகிகள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

மதிமுகவை கடுமையாக விமர்சித்த ஆ ராசா
மற்றொரு பக்கம் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுகவும் அக்கூட்டணியில் இருந்து எஸ்கேப் ஆக உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த சில நாட்களாகவே விஜய் அரசை பாராட்டி வருகிறார். அதேநேரத்தில் திமுகவையும் மறைமுகமாக விமர்சித்து வருகிறார். திமுக கூட்டணியில் நீடிப்பதா இல்லையா என்பது குறித்து வரும் 27 ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று மதிமுக கூறியுள்ள நிலையில், இதனை திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா கடுமையாக விமர்சித்தார்.
திருவாரூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பேசிய ஆ.ராசா, பொதுக்குழுவை இன்னொருத்தர் கூட்ட போகிறாராம். கூடணியில் இருக்கிறோமா.. இல்லையா என்று.. அப்படியே ஜனத்திரள் சமுதாயம்.. இவர் போனால் அப்படியே ஒரு லட்சம் பேர் கூடுறாங்களாம். மொத்த கட்சியே கலைஞர் கோட்டம் கொள்ளாது. அவ்வளவுதான் இருக்கும் கட்சி. அவர் வந்து சொல்கிறார்.. முடிவு செய்ய போகிறோம்.. தயவு செய்து அறிவியுங்கள், கூட்டணி இனிமேல் யாரிடமும் இல்லை. திமுக தனித்து வெற்றி பெறும். 234 தொகுதியிலும் நிற்போம் தலைவரே" என்று ஆவேசமாக பேசினார்.
சூட்டோடு சூடாக துரை வைகோ பதிலடி
ஆ. ராசாவின் இந்த பேச்சுக்கு துரை வைகோ சூட்டோடு சூடாக பதிலடி கொடுத்துள்ளார். துரைவைகோ கூறுகையில், "ஒரு வரியில் பேச முடியாது. இது பற்றி விரிவாக பேசுகிறோம். யாரையும் இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது. நாகரீகம் இல்லாத கருத்து இது. அரசியல் எல்லைகளை கடந்து நான் இதனை கண்டிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ கூறியதாவது: விஜய்யை பொறுத்தவரை இவர் வெல்வார். சாதி மத, அரசியலுக்கு அப்பாற்பட்டு நல்ல மாற்றத்தை உருவாக்குவார் என்று தமிழ்நாடு மக்களுக்கு ஒரு நம்பிக்கை உள்ளது. தேர்தல் முடிவை பார்த்த பிறகு கூடுதல் நம்பிக்கை உருவாகியிருக்கிறது. ஏறத்தாழ 36 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். இப்படிப்பட்ட ஒரு கட்சி, இயக்கம், சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு, ஆட்சிக்கு வந்த பிறகும் விஜய் என்ன சொல்கிறார். நேர்மையான ஒரு வெளிப்படையான லஞ்சம் லாவண்யம் இல்லாமல் எல்லாருக்குமான ஆட்சியை கொடுப்போம் என்று இப்பவும் சொல்கிறார்.
கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு
எனக்கு என்னவென்றால், இனியும் வலு சேர்க்கும் வகையில்தான் அரசியல் சூழல் அமையும் என்பது எனது நம்பிக்கை. திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறா என்பதை பொதுக்குழுவில்தான் முடிவு எடுப்போம். தனி நபர் விமர்சனம் வைக்க கூடாது. பெண்களை பற்றி தரக்குறைவாக இழிவு செய்யும் வகையில் பேசக்கூடாது. தனிப்பட்ட வாழ்க்கையை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுபவர்க்ளுக்கு என்ன தண்டனை வேண்டுமென்றலும் கொடுக்கலாம். கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" இவ்வாறு அவர் கூறினார்.















Click it and Unblock the Notifications