"Park the Bus" ஒரேயொரு திட்டத்தை மட்டும் நம்பினால் இப்படிதான்.. இங்கிலாந்து தோல்விக்கு காரணம் என்ன?

Subscribe to Oneindia Tamil

அட்லாண்டா: ஃபிஃபா உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா அணியிடம் 2-1- என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது. கடைசி 7 நிமிடங்களில் அர்ஜென்டினா அணி 2 கோல்களை அடித்து சாதித்த நிலையில், இங்கிலாந்து அணி ஒரேயொரு திட்டத்தை நம்பி தோல்வியை சந்தித்துள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதி ஆட்டம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக இங்கிலாந்து அணி ரசிகர்கள் பலரும், Its Coming Home என்று மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இருந்தனர். அதற்கேற்ப இங்கிலாந்து அணி 55வது நிமிடத்திலேயே முதல் கோலை அடித்து முன்னிலை பெற்றிருந்தது.

Lionel messi

இந்த முன்னிலை 85 நிமிடங்கள் வரை தொடர்ந்தது. ஆனால் அடுத்த 7 நிமிடங்களில் அர்ஜென்டினா அணி 2 கோல்களை அடித்த பின், ஆட்டம் ஒட்டுமொத்தமாக மாறியது. இங்கிலாந்து அணி வெற்றியின் விளம்பிற்கு சென்றுவிட்டு தோல்வி அடைய ஒரேயொரு திட்டத்தை நம்பியதே காரணமாகும். இங்கிலாந்து அணி முதல் கோலை அடித்த பின் Park the Bus என்ற ஸ்ட்ராட்டிஜியை பின்பற்றியது.

அதாவது ஒரேயொரு அட்டாக்கிங் வீரரை வைத்துக் கொண்டு மீதமுள்ள 9 வீரர்களை டிஃபென்ஸில் இறக்கிவிடுவார்கள். இதே வியூகம் மூலமாக 2018ல் பிரான்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. அர்ஜென்டினா அணியின் அட்டாக்கை சமாளிக்கவும், முன்னிலையை தக்க வைக்கவும் இங்கிலாந்து இந்த திட்டத்தை செயல்படுத்தியது. இந்த திட்டம் மூலமாக 9 பேரும் பாக்ஸ்-க்கு முன் நின்று டிஃபென்ஸில் பந்தை வெளியேற்றுவார்கள்.

இங்கிலாந்து அணி 60வது நிமிடத்திற்கு பின் இப்படியான திட்டத்தில் ஈடுபட்டது. இதனால் மெஸ்ஸியையும் எளிதாக கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடிந்தது. மெஸ்ஸி கால்களுக்கு பந்து சென்றாலே, 2 முதல் 3 வீரர்கள் எளிதாக அவரை சுற்றிவிட்டனர். இதனால் மெஸ்ஸியால் ட்ரிபிளிங் செய்து பாக்ஸிற்குள் கூட செல்ல முடியவில்லை.

இது நல்ல பலனை இங்கிலாந்து அணிக்கு கொடுத்தாலும், அர்ஜென்டினா அணி மாற்று திட்டத்தை உருவாக்க இதுவே காரணமாக அமைந்தது. இங்கிலாந்து அணியின் வியூகத்தை உணர்ந்து கொண்ட மெஸ்ஸி, உடனடியாக தாம் கோல் அடிக்க நேரடியாக முயற்சிக்காமல், சரியாக அசிஸ்ட் செய்ய வேண்டும் என்ற திட்டத்திற்கு மாறினார். இது அர்ஜென்டினா அணிக்கு கை கொடுத்துள்ளது. இதனால் இங்கிலாந்து ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+