கார், பைக்குகளுக்கான பியூசி சான்றிதழ் விதிகளில் அதிரடி மாற்றம்.. வாகன ஓட்டிகளே நோட் பண்ணுங்க
டெல்லி: கார்கள் மற்றும் லாரி, பேருந்துகள், இருசக்கர வாகனங்களுக்கான புகை கட்டுப்பாட்டு தர சான்றிதழ் (PUC) விதிகளில் முக்கிய மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. புகை கட்டுப்பாட்டு பரிசோதனையை எத்தனை மாதத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்து சான்றிதழ் பெற வேண்டும் என்பதில் முக்கியமான திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட உத்தரவின் விவரங்களை பார்க்கலாம்.
இந்தியாவில் ஓடக்கூடிய வாகனங்களுக்கு புகை கட்டுப்பாட்டு தர சான்றிதழ் வைத்து இருப்பது அவசியம். புதிய மோட்டார் வாகன சட்டங்களின் படி பியூசி சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க முடியும். இந்த சான்று அளிப்பதற்கென போக்குவரத்துத் துறையால் அங்கீகரிக்கபட்ட வாகனப் புகை பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை
இந்த நிலையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிய விதிகளின்படி, பி.எஸ்.-6 வாகனங்களுக்கு நீண்ட காலத்திற்கு சான்றிதழ் பெறமுடியும். பிஎஸ் 1, பிஎஸ் 2, பிஎஸ் 3 ரக வாகனங்களுக்கு பியூசி சான்றிதழ்களின் செல்லுபடி காலம் 3 மாதங்கள். அதாவது மூன்று மாதத்திற்கு ஒருமுறை புகை மாசுவை பரிசோதித்து சான்றிதழ் பெற வேண்டும்.
டிரான்ஸ்போர்ட் வாகனங்கள்
* பிஎஸ் 4 வாகனங்கள்- 6 மாதங்கள் (செல்லுபடியாகும் காலம்),
* பிஎஸ் 6 தனிநபர் பயன்பாட்டு வாகனங்கள் - வாங்கி 6 ஆண்டுகள் வரையில் 3 வருடங்களுக்கு ஒருமுறை பெற வேண்டும். 6 முதல் 10 ஆண்டுகள் ஆன வாகனங்கள் என்றால் ஆண்டுக்கு ஒரு முறை. 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள வாகனங்கள்: 6 மாதங்கள் மட்டுமே சான்றிதழ் செல்லுபடியாகும்.
* பிஎஸ் 6 - டிரான்ஸ்போர்ட் வாகனங்கள்: 6 ஆண்டுகள் வரையில் 2 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். 6 முதல் 10 ஆண்டுகள் ஆன வாகனங்கல் என்றால் ஒராண்டு மட்டுமே செல்லுபடியாகும். 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள வாகனங்கள்: 6 மாதங்கள் மட்டுமே செல்லுபடியாகும்.
புதிய விதிகளை பின்பற்ற வேண்டும்
பிஎஸ் 6 வாகனங்களுக்கு பதிவு செய்யப்பட்டதில் இருந்து வாகனங்களின் வயது கணக்கிடப்படும். இதற்கு முன்பாக பாரத் ஸ்டேஜ் 6 வாகனங்களுக்கு ஓராண்டு சன்றிதழ் வழங்கப்பட்டது. வாகனங்கள் எத்தனை ஆண்டுகள் ஆகியிருந்தாலும் ஓராண்டு மட்டுமே சான்றிதழ் செல்லுபடியாகும். தற்பொது திருத்தப்பட்ட விதிகளின் படி புதிய மற்றும் பழைய வாகனங்கள் வேறுபடுத்தி காட்டப்பட்டுள்ளன.
புதிய விதிகள் மாற்றப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே சான்றிதழ் பெற்ற வாகனங்களுக்கு என்ன நடக்கும் என்ற கேள்வி எழலாம். புகை கட்டுப்பாட்டு தரச் சான்றிதழ் ஏற்கனவே உள்ள வேலிடிட்டி வரை செல்லுபடியாகும். காலாவதி ஆன பிறகு புதிய விதிகளை பின்பற்ற வேண்டும்.



Click it and Unblock the Notifications
