"பரந்தாமன் ஏராளமான ஆதாரங்கள் வைத்துள்ளார்.. சாட்சியாக விசாரிங்க”- வக்கீல் கோரிக்கை.. பரபரத்த ஐகோர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் தொடர்பான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில், ஏராளமான ஆதாரங்களை வைத்துள்ள பரந்தாமனை, சாட்சியாக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கோரிக்கை வைத்துள்ளார்.

கோவை பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகார் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி திமுக சட்டப்பிரிவு இணைச் செயலாளர் இ. பரந்தாமன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

Senior Advocate NR Elango Seeks to Examine Paranthaman as Witness in Library Book Scam Case

கோவையில் அமைந்துள்ள பெரியார் அறிவுலகத்துக்காகப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக திமுக சட்டப்பிரிவு இணைச் செயலாளர் இ. பரந்தாமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், அகல் விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகங்களிலிருந்து அதிக எண்ணிக்கையிலான புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட தரமற்ற புத்தகங்கள் பலவும் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் புத்தகங்களின் கொள்முதல் நடைமுறையில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகச் சந்தேகம் எழுப்பியுள்ள பரந்தாமன், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

புத்தகக் கொள்முதல் தொடர்பான முறைகேடுகள் குறித்து கடந்த 7 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்ததாக மனுவில் பரந்தாமன் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தனது புகாரின் அடிப்படையில் உரிய குற்ற வழக்கு பதிவு செய்யப்படவில்லை எனக் கூறிய அவர், நீதிமன்றம் தலையிட்டு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதே புத்தகக் கொள்முதல் விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், அந்த வழக்கு அடுத்த நாளே மதுரை அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளதாகவும், அங்கு நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பாகப் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதற்கிடையே, புத்தகக் கொள்முதல் விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக அகல் விளக்கு பதிப்பகத்தின் பதிப்பாளர் மோகன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், புத்தகக் கொள்முதல் தொடர்பாகப் பொது நூலகத்துறை இயக்குநரிடம் தேவையான விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த ஆவணங்கள் மற்றும் தகவல்கள் அனைத்தும் மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் தாக்கல் செய்யப்படும் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து மனுதாரர் பரந்தாமன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ , புத்தகக் கொள்முதல் முறைகேடு தொடர்பாகப் பல்வேறு ஆதாரங்களை வைத்துள்ள பரந்தாமனை விசாரணையில் சாட்சியாக அழைத்து விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்தார்.

இந்த விவகாரத்தில் மனுதாரர் பரந்தாமன் உள்ள தகவல்களும் ஆதாரங்களும் விசாரணைக்கு உதவக்கூடும் என அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, புத்தகக் கொள்முதல் தொடர்பான மற்றொரு வழக்கு ஏற்கெனவே உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணையில் இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையை மதுரை அமர்வு கண்காணிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், சென்னையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவையும் மதுரை அமர்வுக்கு மாற்றுவது குறித்து தலைமை நீதிபதிக்குப் பரிந்துரைக்க வாய்ப்புள்ளதாக நீதிபதி குறிப்பிட்டார்.

மேலும், மதுரை அமர்வில் அடுத்த நாள் நடைபெறவுள்ள விசாரணையின்போது, பரந்தாமன் தாக்கல் செய்துள்ள மனு குறித்த விவரத்தையும் தெரிவிக்குமாறு காவல்துறை தரப்புக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து, பரந்தாமன் தாக்கல் செய்த மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+