தவெக எம்எல்ஏ விஎஸ் பாபு மரணத்தில் சந்தேகம்.. காவல் நிலையத்தில் தேவராஜன் புகார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ விஎஸ் பாபு மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தேவராஜன் என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் விஎஸ் பாபுவின் மருத்துவ அறிக்கைகளை பாதுகாத்திட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். ஏற்கனவே விஎஸ் பாபு உடல்நிலை குறித்து முறையாக தமிழக அரசு வெளியிடவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேவராஜன் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ விஎஸ் பாபு 72 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

VS Babu death is Suspicion way Kolathur constituency voter Devarajan files complaint

மாரடைப்பால் மரணம்

தவெக சார்பில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் விஎஸ் பாபு (வயது 75). முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலினை வீழ்த்தி வெற்றி பெற்றதால் தமிழகம் முழுக்க பேசப்பட்டார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதற்கடுத்த நாளில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. தொடர்ந்து 72 நாட்களாக மருத்துவமனையில் இருந்து வந்த விஎஸ் பாபு இன்று பிற்பகல் 2.24 மணிக்கு மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

சந்தேகம் இருப்பதாக புகார்

விஎஸ் பாபு காலமானார் என தகவல் வெளியானதும் தமிழக அரசியல் தலைவர்கள் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்து வருகின்றனர். சென்னை பெரம்பூரில் உள்ள இல்லத்தில் விஎஸ் பாபு உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அரசியல் தலைவர்கள், தவெக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் விஎஸ் பாபு உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விஎஸ் பாபு மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தேவராஜன் என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார். விஎஸ் பாபுவின் மருத்துவ அறிக்கைகளை பாதுகாத்திட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது விஎஸ் பாபுவின் மரணத்தின் பின்னணியில் ஏதேனும் சதி இருக்கிறதா? என விசாரிக்க வேண்டும் என அவர் புகார் தெரிவித்து இருக்கிறார் என்றும், விஎஸ் பாபுவுக்கு என்னென்ன சிகிச்சைகள் அளிக்கப்பட்டன என்பது தொடர்பான அனைத்து மருத்துவ ஆவணங்களையும் பாதுகாத்து வைக்கவும் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

மேலும், விஎஸ் பாபுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பில் இருந்து கடந்த நவம்பர் 5, 12 ஆம் தேதிகளில் மட்டுமே அறிக்கை வெளியானது என்றும், அது குறித்த மனுக்களைப் பரிசீலிக்க சுகாதாரத்துறைச் செயலாளர், சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநருக்கு உத்தரவிட கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஎஸ் பாபு உடல்நிலை குறித்து முறையாக தமிழக அரசு அறிக்கை வெளியிடவில்லை எனவும், இது குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேவராஜன் நேற்று பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர இருந்த நிலையில், இன்று பிற்பகல் விஎஸ் பாபு உயிரிழந்ததாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. விஎஸ் பாபு 70 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆரம்ப காலத்தில் மட்டுமே அவரது உடல்நிலை சீராக உள்ளது, விரைவில் வீடு திரும்புவார் என அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால் அதன் பிறகு சுமார் இரு மாதங்களாக விஎஸ் பாபு உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பிலோ, தமிழக அரசு தரப்பிலோ, தவெக தரப்பில் இருந்தோ எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியாகவில்லை.

அரசு தெளிவுபடுத்த வேண்டும்

வி எஸ் பாபுவுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது, அவர் நலமுடன் இருக்கிறாரா? அவருக்கு என்ன ஆனது? என பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையிலும் அரசு மவுனம் காத்து வந்தது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோதும் எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் தான் தேவராஜன் என்பவர் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், எம்எல்ஏவின் தனிப்பட்ட மருத்துவ ரகசியங்களை நாங்கள் கேட்கவில்லை. மக்கள் பிரதிநிதியின் உடல்நிலை குறித்து சட்டப்படி வெளியிடக்கூடிய அதிகாரப்பூர்வத் தகவலை மட்டும் மருத்துவமனையிடம் இருந்து பெற்று தமிழக அரசு வெளியிட வேண்டும். தொகுதி மக்களின் குறைகளைத் தீர்க்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் எனக் கூறியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+