முதல்வர் விஜய் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டம்.. அமைச்சர்களுக்கு பறந்த ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில், தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று நடைபெற்றது. விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள தவெக அரசின் முதல் பட்ஜெட் தொடர்பாக விவாதித்து ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. தவெகவுக்கு ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காத நிலையில் திமுக கூட்டணியில் வென்ற கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி அமைத்தது தவெக.

tvk cabinet vijay

தமிழகத்தில் தவெக அரசு ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், இம்மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் 2026-2027 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறது. தவெக அரசின் முதல் பட்ஜெட் என்பதால், பொதுமக்களை கவரும் வகையிலான திட்டங்கள், அறிவிப்புகள் இதில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வருகிற 22 ஆம் தேதி வரை துறை வாரியாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். பட்ஜெட்டில் தவெக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் இடம்பெறும் என்று தெரிகிறது.

இந்நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தவெக அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் தொடங்கி நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஆலோசித்து தவெக அரசின் பட்ஜெட் தாக்கல் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் குறித்தும், புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

மேலும், புதிய திட்டங்கள் தொடங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது. இதில் பல்வேறு முக்கிய தொழில் திட்டங்களுக்கும், தொழில் தொடங்கும் புதிய நிறுவனங்களுக்கும் அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளிகளில் உள்ளே சென்று ரிலீஸ் எடுக்கிறேன் என்று அலப்பறை செய்யக்கூடாது. துறைகளில் ஊழல் முறைகேடுகள் இருக்கக் கூடாது. தவறு செய்தால் அமைச்சர்களின் பதவி பறிக்கப்படும். யார் மீதாவது ஊழல் என்று என் காதுக்கு வந்தால் உடனடியாக அவர்கள் பதவி பறிக்கப்படும் என அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+