சிபிஐ மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு தீவிர சிகிச்சை... வதந்திகளை நம்ப வேண்டாம் - முத்தரசன் கோரிக்கை
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும் தேசியக்குழு உறுப்பினருமான தா.பாண்டியன் வயது முதிர்ச்சி காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரைப்பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
சிபிஐ மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு 89 வயதாகிறது. வயது முதிர்வு காரணமாக உடல்நிலையில் அவ்வப்போது பாதிப்பு ஏற்படும். நேற்று காலை அவர் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

தா.பாண்டியனுக்கு சிறுநீரக பிரச்சினை, நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் உள்ளன. உயர் ரத்த அழுத்தமும் உள்ளது. இதனால் அவருக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியானது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் உடன் இருந்து அவரது உடல்நிலையை கவனித்து வருகிறார்கள்.
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று தா.பாண்டியனுக்கு தேவையான சிகிச்சைகளை அளிக்குமாறு டாக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தா.பாண்டியனின் உடல்நிலை 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், தா. பாண்டியன் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் காலமாகி விட்டதாக வருவதாக செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் முத்தரசன் கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications