ஆளுநர் வழக்கில்.. உச்ச நீதிமன்றத்தின் கருத்துகளால் இனி என்னாகும்.. தமிழக அரசின் அடுத்த மூவ் என்ன?
சென்னை: மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் அண்மையில் காலக்கெடு விதித்தது. இந்த தீர்ப்பில் விளக்கம் கேட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 143-ன் அடிப்படையில் 14 கேள்விகள் எழுப்பி இருந்தார். இதில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள அதிகாரபூர்வ கருத்துகளால் என்ன நடக்கும்.. ஏற்கனவே அளித்த தீர்ப்பை பாதிக்குமா என்பது குறித்து உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். அதனை பார்ப்போம்.
கடந்த ஏப்ரல் 8-ந்தேதி, உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், கவர்னரும், குடியரசுத் தலைவரும் மசோதாக்கள் மீது முடிவெடுப்பதற்கு காலக்கெடுகள் விதித்து தீர்ப்பு வழங்கியிருந்தது. மேலும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்திய மசோதாக்கள் நிறைவேறியதாக அர்த்தம் என்றும் கூறியது. ஆனால் தற்போதைய அரசியலமைப்பு அமர்வு அளித்த கருத்துக்களின் படி பார்த்தால், நீதிமன்றங்களுக்கு அத்தகைய காலக்கெடுகளை நிர்ணயிக்க அதிகாரமே இல்லை என்பதை தெளிவுபடுத்தி உள்ளது. மேலும், முந்தைய தீர்ப்பின் அடிப்படையை மாற்றி உள்ளது.

காலக்கெடு விதிக்க முடியாது
உச்சநீதிமன்றம் நேற்றைய கருத்துக்களில், மூன்று முக்கியமான அரசியலமைப்பு கோட்பாடுகள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது. அதாவது ஆளுநர், குடியரசுத் தலைவரின் சுயவிருப்ப அதிகாரத்தில் நீதிமன்றம் தலையீடு செய்ய முடியாது. அரசியலமைப்பின் பிரிவு 200 மற்றும் 201 அடிப்படையில் கவர்னர் மற்றும் குடியரசுத் தலைவர் செயல்படுவது அவர்களுக்கான அரசியலமைப்புச் சுயவிருப்ப அதிகாரம். இதில் நீதிமன்றம் காலக்கெடு விதிக்க இயலாது என்று தெளிவுப்படுத்தியது.
142 சிறப்பு அதிகாரம்
இரண்டாவது, அரசியலமைப்பின் பிரிவு 142 மூலம் நீதிமன்றம் அரசியலமைப்புச் செயல்பாடுகளை மாற்ற முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது. இன்னும் தெளிவாக சொல்வதென்றால், அரசியல் அமைப்பின் 142-ன் கீழ் உச்ச நீதிமன்றத்திற்கு தேவையான உத்தரவையும் பிறப்பிக்கும் சிறப்பு அதிகாரம் இருந்தாலும், கவர்னர்-ஜனாதிபதியின் அரசியலமைப்பு உரிமைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இல்லை என்பதனை தெளிவுப்படுத்தியிருக்கிறது.
ஆளுநர் உச்ச நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் தான் வருவார்
மூன்றாவது, அரசியலமைப்பின் பிரிவு 361-ன் கீழ் கவர்னருக்கு தனிப்பட்ட சட்ட பாதுகாப்பு அளித்தாலும், கவர்னர் அலுவலகம் நீதிமன்றக் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது என்றும் எனவே ஆளுநர் மசோதாக்கள் மீது நீண்டகாலம் செயலற்ற நிலையில் இருந்தால், நீதிமன்றம் உகந்த காலத்தில் முடிவெடுக்கச் சொல்லும் குறுகிய உத்தரவு பிறப்பிக்க முடியும் என்பதையும் தெளிவுப்படுத்தி உள்ளது.
இது தீர்ப்பு கிடையாது
அதேநேரம் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் வழங்கியது தீர்ப்பு கிடையாது. அது கருத்து தான். இருந்தாலும் இது மிக உயர்ந்த சட்ட வழிகாட்டுதல் என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் உச்ச நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் காலக்கெடு அளித்து வழங்கிய தீர்ப்பு மறைமுகமாக செயலிழக்கச் செய்யப்பட்டிருக்கிறதாக மூத்த வழக்கறிஞர்களால் கருதப்படுகிறது. தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நேரடியாக ரத்து செய்யவில்லை. ஆனால் அந்தப் தீர்ப்புக்கு இனி சட்ட பலனுடன் தொடர முடியாது என்று சொல்லப்படுகிறது. அதேபோல் தமிழக ஆளுநர் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு செல்லுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.
வில்சன் எம்பி விளக்கம்
இதுபற்றி திமுக எம்பியும், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருமான வில்சன் கூறுகையில், உச்ச நீதிமன்றம் தற்போது வழங்கியிருப்பது வெறும் சட்டரீதியான ஆலோசனை தான். இது கடந்த 2023 ஏப்ரல் மாதத்தில் தமிழக அரசு ஆளுநருக்கு எதிராகப் போராடி பெற்ற தீர்ப்பை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது.
பாதிப்பு இல்லை
உச்சநீதிமன்றத்தின் ஆலோசனைகள் தற்போது குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அதை ஏற்பதும் ஏற்காததும் குடியரசு தலைவரின் விருப்பம். இந்த ஆலோசனை உச்ச நீதிமன்றத்தையே கட்டுப்படுத்தாதபோது, உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின்படி நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களின் செல்லுபடித்தன்மையை ஒருபோதும் பாதிக்காது.
தமிழக அரசு நீதிமன்றத்தை மீண்டும் நாடும்
மேலும், ஆளுநர் மசோதாக்களை கிடப்பில் போடாமல் நியாயமான காலத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது. இதில் காலதாமதம் ஏற்பட்டால், நீதிமன்றத்தை நாட மாநில அரசுக்கு உரிமை உண்டு. மணிப்பூர் வழக்குத் தீர்ப்பின்படி, இந்த காலஅவகாசம் 3 மாதங்களாகக் கருதப்படலாம். ஆளுநர், மக்களின் எண்ணங்களுக்கு மாறாக மீண்டும் மசோதாக்களைத் தாமதப்படுத்தினால், முந்தைய தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு மீண்டும் நீதிமன்றத்தை நாடும் என்று வில்சன் கூறினார்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications