"வேள்வி" ரெடி.. அக்கவுண்ட்டே ஓபன் பண்ண முடியல.. அசிங்கமா திட்டலாம்.. யாரை சொல்கிறார் நாஞ்சில் சம்பத்
நாஞ்சில் சம்பத் பாஜகவின் அண்ணாமலையை சரமாரியாக விமர்சித்து பேட்டி தந்துள்ளார்
சென்னை: அண்ணாமலையெல்லாம் திமுகவுக்கு ஒரு பொருட்டே கிடையாது.. அரசியல் கோமாளி என்பதைவிடவும் அசிங்கமாக அவரை திட்டலாம்.. பாஜகவுக்கு எதிரான வேள்வி தொடங்கிவிட்டது என்று மூத்த தலைவர் நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.
கோவையில் நடந்தது தற்கொலைப்படைத் தாக்குதல் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து கடுமையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
மேலும், கோவையில் கார் வெடி விபத்தில் இறந்த நபரின் வீடுகளில் சோதனை நடத்தியபோது கிட்டத்தட்ட 55 கிலோ அம்மோனியம் நைட்ரேட், பொட்டாசியம், சோடியம், ப்ஃயூஸ் வயர்ஸ், 7 ஓல்ட் பேட்டரி இவை அனைத்தையும் கைபற்றியுள்ளதாகவும், இந்த தகவலை காவல்துறை இன்னும் தெரிவிக்கவில்லை, தமிழக அரசு ஏன் இந்த தகவலை வெளியிட மறுக்கிறது என்று தெரியவில்லை என்றெல்லாம் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

நாஞ்சில் சம்பத்
இந்நிலையில், மூத்த தலைவரும், தமிழகத்தின் மிகச்சிறந்த பேச்சாளருமான நாஞ்சில் சம்பத், நம் ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில் அவர் வெளிப்படுத்தியுள்ள கருத்துக்கள் இவைதான்: "இந்த அரசாங்கத்தை குத்தி கிழிக்க வேண்டும் என்ற பாஜகவின் குரூர மனப்பான்மையை காட்டுகிறது.. இதைவிட அவர கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டும்.. ஒரு அரசியல் கட்சியின் தலைவர் பொறுப்புடன் பேச வேண்டும்.. இதைவிட அண்ணாமலையை கடுமையாக பேச தமிழகம் தயாராக வேண்டும்.. ஏனென்றால் தமிழகம் பாதுகாக்கப்பட வேண்டும்.. கோவை வளர்ந்து வரும் நகரம்.. தொழில் நகரமும் கூட.. இன்னைக்கு நம் கண் முன்னாடியே கர்நாடகம் குட்டிச்சுவராகி கொண்டிருக்கிறது..

அக்கவுண்ட்
தொழில் முனைவோர்களை ஈர்த்து, குஜராத்தை தமிழகம் முந்திக்காண்டு இருக்கும் வேளையில், முதலீடுகள் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே, தமிழக அரசுக்கு அவப்பெயர் வரவேண்டும் என்பதற்காகவே, இந்த நாடகத்தை அண்ணாமலை நடத்தியிருக்கிறார்.. பாஜகவுக்கு இங்கே ஆதரவு என்பதே கிடையாது.. உள்ளாட்சி மன்ற தேர்தலில் அது வெளிப்பட்டுவிட்டதே.. 10 மாவட்டங்களில் அக்கவுண்ட்டை ஓபன் பண்ண முடியாத அனாதை கட்சி அது.. தெற்கு தொகுதியில் வெற்றி பெற்றதே, ஆனால், அதே தெற்கு தொகுதியில் ஒரு மாநகராட்சி மன்ற உறுப்பினரை கொண்டு வர முடியவில்லையே.. இந்த கட்சிக்கெல்லாம் ஆதரவு என்பதுபோல மாயத்தோற்றம் உள்ளது..

நயினார் நாகேந்திரன்
வானதி பெற்ற வெற்றியாகட்டும், மொடக்குறிச்சியில் சரஸ்வதி பெற்ற வெற்றியாகட்டும், நெல்லையில் நயினார் பெற்ற வெற்றியாகட்டும், நாகர்கோவில் அண்ணன் காந்தி பெற்ற வெற்றி, இது எதுவுமே பாஜகவின் செல்வாக்கினால் பெற்ற வெற்றி கிடையாது.. அதிமுகவின் ஆதரவும், மனிதநேயமக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி, ஓவைசி போன்று நடுவில் ஊடுருவி பாஜகவின் வெற்றிக்கு உதவியிருக்கிறார்களே தவிர, பாஜகவுக்கு நிஜமான செல்வாக்கு கிடையாது.. இன்னைக்கு அண்ணாமலை பேச்சு எதிரொலிக்கிறது என்றால், அதிமுக அமைதியாக இருப்பதால் எதிரொலிக்கிறது.. ஊடகங்கள் திட்டமிட்டு அண்ணாமலைக்கு முக்கியத்துவம் தருகின்றன.. திமுகவுக்கு எதிராக செய்திகளை வெளியிடுவதில் ஊடகங்கள் முனைப்பு காட்டுகின்றன..

சென்சிடிவ்
முதலில், கோவை வெடிப்பு போன்ற சென்சிடிவ் பிரச்சனைகளில் கருத்தே யாரும் சொல்லக்கூடாது.. என்ன நடக்கிறது என்பதைதான் கண்காணிக்க வேண்டும்.. படாதபாடுபட்டு பதற்றத்தை பற்றவைக்க போய், இன்று தோற்று தொலைந்து கொண்டிருக்கிறார்.. வெடித்திருந்தால் என்ன ஆகும் என்று ஏன் கற்பனை செய்கிறார்கள்? அப்படியானால், குண்டு வெடிக்க வேண்டும், 4 பேர் சாக வேண்டும் என்பதுதான் பாஜகவின் ஆசை.. அந்த ஆசை இப்போ நிறைவேறாமல் போய்விட்டது.. பாஜகவுக்கு எதிரான வேள்வி தொடங்கிவிட்டது.. மக்கள் முடிவுரை எழுத தொடங்கிவிட்டார்கள்" என்றார்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications