பத்தினி என்றால் நிரூபி.. மண்ணெண்ணெய், தீப்பெட்டியை மனைவியிடம் தந்த கணவன்.. மறு நொடியே பெரிய ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கணவன்-மனைவிக்குள் புரிதலுடன் கூடிய வாழ்க்கை அமைவது தற்போதெல்லாம் அபூர்வமாகிவிட்டது.. இருவருக்கும் நம்பிக்கை இருக்கும் உள்ள குடும்பம் மட்டுமே நிலைத்து நிற்கிறது... நம்பிக்கை இல்லாத இடத்தில் சந்தேகம் பிறந்து, அது அவர்களின் வாழ்க்கையையே சிதைத்து விடுகிறது.. இதோ சாதாரணமாக கணவன்-மனைவி ஆரம்பித்த சண்டை ஒன்று, 2 உயிர்களுக்கு ஆபத்தாக இன்று மாறி உள்ளது.. என்ன நடந்தது? யாரிந்த தம்பதி?

இலங்கை மட்டக்களப்பு மாவட்டம், கொக்கட்டிச்சோலை காவல் நிலைய பிரிவுக்குட்பட்டது முனைக்காடு என்ற பகுதி.. இங்கு அனுஷ்வரன் என்ற 36 வயது நபர் வசித்து வருகிறார்.. இவர் ஒரு கூலித் தொழிலாளி... அவரது மனைவி பெர் பிரகலாதேவி.. இவருக்கு 31 வயதாகிறது..

Husband Wife Purity Test

திருமணமானதில் இருந்தே தம்பதியின் உறவு மகிழ்ச்சியாகவே சென்றது.. ஆனால் நாளடைவில் குடும்ப பிரச்சனை தலைதூக்கியது.. வீட்டு செலவு, பணம் பற்றிய பிரச்சனை காரணமாக இவர்களுக்கிடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது.. ஒவ்வொரு முறை தகராறு வரும்போதும், அக்கம் பக்கத்தினர் தலையிட்டு இவர்களை சமாதானம் செய்வார்களாம்..

பத்தினி - நீ குற்றமற்றவள் என்றால் நிரூபி

இந்நிலையில் நேற்று காலையும் வழக்கம்போல் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சாதாரண பேச்சு வாக்குவாதமாக மாறி உள்ளது.. பிறகு சிறிது நேரத்தில் கடும் சச்சரவாக வெடித்தது.. அப்போது கணவர், மனைவியின் நடத்தை குறித்து தேவையற்ற சந்தேகங்களை எழுப்பியதாக தெரிகிறது.

வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிய கணவர் கோபம் தலைக்கேறிய நிலையில், "நீ குற்றமற்றவள் என்றால் நிரூபித்து காட்டு" என்று சொன்னாராம்.. அத்துடன், கிச்சனுக்கு ஓடிச்சென்று மண்ணெண்ணெய் எடுத்து வந்து மனைவியின் உடலில் ஊற்றி விட்டாராம்.. பிறகு தீப்பெட்டியையும் மனைவியின் கையில் கொடுத்து, குற்றமற்றவள் என்பதை இப்போதே தீ வைத்து நிரூபித்து காட்டு என்று கட்டாயப்படுத்தி உள்ளார்..

உடம்பெல்லாம் காயங்கள்

பிறகு யாரும் எதிர்பார்க்காத நிலையில், அந்த பெண் தீப்பற்றி எரிந்துள்ளார்... அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயை அணைத்தனர்...

பலத்த காயமடைந்த நிலையில் பிரகலாதேவியை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.. உடல் எரிந்த நிலையில் ஐசியூவில் தீவிரமான சிகிச்சை பெற்று வருகிறார் மனைவி.. உடலில் பல இடங்களில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் கூறுகிறார்கள்.. தற்போது அவர் சீரியஸாக உள்ளதால், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்..

தம்பதி இருவருமே சீரியஸ்

இதனிடையே, மனைவி தீ வைத்து கொண்டதை கணவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. தற்கொலைக்கு தூண்டிவிட்டோமே என்று கலக்கத்திற்கு ஆளானார்.. உடனே கத்தியை எடுத்து தன்னை தானே உடலில் குத்தி காயப்படுத்தி கொண்டுள்ளார்.. இதனால் அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்...

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் கொக்கட்டிச்சோலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.. விசாரணையின் முடிவில், மனைவியை தீ வைத்து கொலை செய்ய முயன்றது மற்றும் தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அனுஷ்வரனை போலீசார் கைது செய்துள்ளனர்..

தொடர்ந்து மருத்துவமனையில் போலீசாரின் கண்காணிப்பில் சிகிச்சை நடக்கிறது.. தற்போது கணவன் - மனைவி இருவருமே சீரியஸ் கண்டிஷனில் உள்ளார்களாம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+