30 நிமிடத்துக்கு மேல் நிற்கவே முடியாது! செந்தில் பாலாஜி எப்படி தப்பி செல்வார்? கபில் சிபல் வாதம்
சென்னை: ‛‛தற்போதைய சூழலில் அமைச்சர் செந்தில் பாலாஜியால் 30 நிமடத்துக்கு மேல் நிற்கவே முடியாது. நிலைமை இப்படி இருக்கும்போது அவர் எப்படி தப்பித்து செல்வார்?'' என அவரது ஜாமீன் கோரும் வழக்கில் அவரின் வழக்கறிஞர் கபில் சிபல் நீதிமன்றத்தில் வாதாடினார்
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை என்பது இன்று நீதிபதி அல்லி முன்பு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் என்ஆர் இளங்கோ வாதாடினார். அமலாக்கத்துறை சார்பிலும் வழக்கறிஞர் வாதாடினர். கபில் சிபல் ஜாமீன் வழங்க கோரிய நிலையில் அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி அல்லி அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மீதான தீர்ப்பை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். முன்னதாக செந்தில் பாலாஜி தரப்பு வழக்கில் கபில் சிபல் பல்வேறு முக்கிய அம்சங்களை பரபரப்பாக எடுத்து வைத்தார். அமலாக்கத்துறை விசாரணையின்போது அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ‛நீங்கள் ஏன் பாஜகவில் சேரக்கூடாது' என கேட்கப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை காரணம் காட்டியும், அவர் எங்கும் தப்பித்து செல்லமாட்டார் எனவும் கபில் சிபல் வாதிட்டார். இதுதொடர்பாக கபில் சிபல் நீதிமன்றத்தில், ‛‛செந்தில் பாலாஜியால் தற்போது 30 நிமிடத்துக்கு மேல் தொடர்ந்து நிற்கவே முடியாது. பிறகு எப்படி அவர் தப்பித்து செல்வார்'' என வாதிட்டார்.
அதோடு, ‛‛தற்போது செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்கிறார். இதனால் அவரால் தப்பித்து செல்ல முடியாது. அதோடு அவர் விசாரணையை எதிர்கொள்வார். மேலும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் தான் உள்ளது என்பதால் ஆதாரங்களையும் அவரால் அழிக்க முடியாது'' என்றார்.
இதுதவிர ‛‛இந்த வழக்கு தொடர்பான குற்றச்சாட்டு 9 ஆண்டுக்கு முன்பானது. இந்த 9 ஆண்டுகளில் வருமான வரி தாக்கல் செய்துள்ளார். சட்டவிரோத பண பரிமாற்றம் செய்திருந்தால் வருமான வரி செலுத்தியது எப்படி ஏற்கப்பட்டிருக்கும்? மேலும் தற்போது வரை செந்தில் பாலாஜியின் வருமான வரி தாக்கல் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதோடு சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் நடந்ததாக எந்த சாட்சிகளும் கூறவில்லை. அதோடு செந்தில் பாலாஜியிடம் பணம் கொடுத்ததாக எங்கும் கூறப்படவில்லை. கார்த்திகேயன், சண்முகம் தான் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் புகார் கூறியவர்கள் யாரும் சாட்சிகளாக சேர்க்கப்படவில்லை. இதனால் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை'' என பரபரப்பாக வாதிட்டார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications