அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல்.. நீதிபதி அல்லி அதிரடி உத்தரவு!
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் 13ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜுன் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். பிறகு காவேரி மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.
புழல் சிறை: பிறகு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்தும் விசாரித்தனர். பிறகு மறுபடியும் சிறையிலேயே அடைக்கப்பட்டார்.

செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு 2 மாதங்களாகும் நிலையில், அவரது நீதிமன்ற காவல் தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. முதலில், ஜுன் 14-ந்தேதி கைது செய்யப்பட்டவுடன் அடுத்த 14 நாட்கள் அவரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி முதல் நீதிமன்ற காவல் ஜுன் 28-ந்தேதி வரை என்று உத்தரவிட்டது..
அடுத்தடுத்து காவல்: 2-வது முறையாக ஜூலை 12 வரை காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டது.. பிறகு, ஜூலை 26-ந்தேதி வரையில் 3-வது முறையாக செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.
பிறகு ஆகஸ்ட் 11-ந்தேதி வரையில் நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவலை பிறகு ஆகஸ்ட் 25-ந்தேதி வரை நீட்டிக்க உத்தரவிடப்பட்டது. பின்னர் செந்தில்பாலாஜி மீதான வழக்கு விசாரணை எம்பி, எம்எல்ஏக்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு, வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.
சிறப்பு நீதிமன்றம்: பின்னர் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் அடுத்தடுத்து ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற காவலை செப்டம்பர் 29-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார்.. அந்தவகையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 6-வது முறையாக நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றுடன் அந்த காவலும் முடிவடைகிறது. எனவே, மீண்டும் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளார் செந்தில் பாலாஜி.
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் இழுபறியாகி வருகிறது.. "நீங்கள் ஏன் பாஜகவில் இணையக் கூடாது என்று செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை கேட்டுள்ளது என்று ஜாமீன் கோரிய வழக்கில், அவரது தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதங்களை முன்வைத்திருந்ததும், இதற்கு நீதிமன்றத்திலேயே அமலாக்கத்துறை உடனடியாக மறுப்பு தெரிவித்ததும் மிகுந்த பரபரப்பை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக, புழல் சிறையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார் செந்தில் பாலாஜி. இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications