முடிவு தெரியுமா? செந்தில் பாலாஜி வழக்கை இன்று விசாரிக்கிறார் 3 வது நீதிபதி சிவி கார்த்திகேயன்
சென்னை: செந்தில் பாலாஜி வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி இருவேறு தீர்ப்புகளை அளித்த நிலையில் இன்று மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திகேயன் அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வருகிறது.
கடந்த ஜூன் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வீடு, உறவினர்கள் வீடு உள்ளிட்ட அவர் தொடர்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதை தொடர்ந்து அன்று இரவே அவர் கைது செய்யப்பட்டார். ஆனால், அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்ட விரோதமாக கைது செய்து உள்ளதாகவும் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும், அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் நிஷா பானு, பாரத சக்கரவர்த்தி அமர்வு முன் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த வழக்கில் நீதிபதிகள் இருவருமே மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். அமலாக்கத் துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம் என்றும் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று நீதிபதி நிஷா பானு தீர்ப்பு அளித்தார். அதே நேரம் நீதிபதி பரத சக்கரவர்த்தி அதற்கு முற்றிலும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.
அமலாக்கத் துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்ததில் எந்த சட்ட விரோதமும் இல்லை என்று கூறிய அவர் அவர் 10 நாட்களுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறலாம் என்றும், அதன் பின்னர் சிகிச்சை வேண்டுமென்றால் சிறையில் இருக்கும் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற வேண்டும் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
இதனால் செந்தில் பாலாஜி வழக்கில் முடிவு கிடைக்காததை தொடர்ந்து வழக்கு மூன்றாவது நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது. மூன்றாவது நீதிபதியாக சிவி கார்த்திகேயனை தலைமை நீதிபதி நியமித்து உள்ளார். இந்த நிலையில் செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு மனு இன்று பிற்பகல் 2.15 மணியளவில் சிவி கார்த்திகேயன் அமர்வு முன் விசாரணைக்கு வர உள்ளது.
-
செந்தில் பாலாஜி மீண்டும் கைதா? ஆளுநரிடம் ‘கிரீன் சிக்னல்’ கேட்டு ஃபைல்களை அனுப்பிய தமிழக அரசு! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications