ஜவ்வ்வ்வா இழுக்குதே.. செந்தில் பாலாஜிக்கு பெரிய சோதனை.. அப்படின்னா ஜாமீன் கிடைக்காதா? மீண்டும் காவல்
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின், நீதிமன்ற காவலை 26வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி, பணம் வாங்கிய குற்றச்சாட்டில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக கூறி அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளனர். தற்போது அவர் புழல் சிறையில் உள்ளார்.

நேரில் ஆஜர்: செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆகஸ்ட்டில் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்திருந்தனர்... மொத்தம் 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.
அதேபோல, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல்கள் ஒவ்வொரு முறையும் முடிவடையும் தருவாயில், புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டு வருகிறார்.
எதிர்பார்ப்பு: நேற்று முன்தினம், சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு மீண்டும் காணொளிக் காட்சி மூலமாக ஆஜர்படுத்தப்பட்டார்.. அப்போது செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 13ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.. செந்தில் பாலாஜிக்கு 25-வது முறையாக இந்த நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் அவரது நீதிமன்ற காவல் முடிவடைந்தது.
இதனால் புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.. அப்போது, நீதிமன்ற காவலை வருகிற மார்ச் 18ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.. இதன்மூலம் 26வது முறையாக அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
செந்தில் பாலாஜி தரப்பில், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற உத்தரவில், அமலாக்கத் துறையின் வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது..
கோரிக்கை: செந்தில் பாலாஜி தரப்பில், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற உத்தரவில், அமலாக்கத் துறையின் வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது..
இதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டிலும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும், இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகி வாதிட இருப்பதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்றைய தினம் மீண்டும் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பெருகும் ஆர்வம்: செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் எப்போது கிடைக்கும் என்ற ஆர்வம் அவரது ஆதரவாளர்களிடம் தொடர்ந்து எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால், ஒருபக்கம் ஜாமீன் மனு தள்ளுபடி செய்தும், மற்றொருபக்கம், நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டும் வருவதால், நிறைய மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளாராம் செந்தில் பாலாஜி.
தேர்தலும் நெருங்கி கொண்டிருப்பதால், தேர்தலுக்கு முன்பாகவே செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? என்ற ஆர்வம் அவரது ஆதரவாளர்களிடம் தினம் தினம் பெருகி கொண்டிருக்கிறது!!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications