ஆமாங்க!... என் தலைமையில்தான் செந்தில் பாலாஜி நாளை திமுகவில் இணைகிறார்- கரூர் சின்னசாமி
Recommended Video

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சரும், தினகரனின் நம்பிக்கைக்குரியவருமான செந்தில் பாலாஜி நாளை திமுகவில் என்னுடைய தலைமையில் இணையவுள்ளதாக திமுகவின் கரூர் சின்னசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளின் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் அரவக்குறிச்சி தேர்தலில் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு, நடந்த அரசியல் மாற்றங்கள் அனைவரும் அறிந்ததே. தினகரன் ஆதரவாளராகிவிட்டார் செந்தில் பாலாஜி. இவர் மாத்திரம் இல்லாமல் 18 பேரும் தினகரனுக்கு ஆதரவாக இருந்தனர்.

தகுதிநீக்கம்
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லை என தினகரன் தரப்பு 18 எம்எல்ஏக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து அந்த 18 பேரையும் சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்துவிட்டார்.

தாவுகிறார் பாலாஜி
இதனிடையே தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கினார். இந்த 18 பேரும் அந்த கட்சியில் பல்வேறு பணிகளை கவனித்து வந்தனர். இந்நிலையில் தினகரன் அணியிலிருந்த செந்தில் பாலாஜி திமுகவுக்கு தாவுகிறார் என செய்திகள் வந்தன.

மறுப்பு
இதுகுறித்து செந்தில் பாலாஜியிடம் கேட்டபோது இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என அமமுக தொண்டர்களுடன் முழுவீச்சில் பணிகளில் ஈடுபட்டுள்ளேன். அதை திசை திருப்புவதற்காக அதிமுகவினர் சொல்லும் வதந்தி. நான் அமமுகவைவிட்டு எங்கும் செல்ல மாட்டேன் என்றார்.

செந்தில் பாலாஜி
இந்நிலையில் செந்தில் பாலாஜி விமான நிலையத்தில் திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. எனவே செந்தில் பாலாஜி நாளை ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணையலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உறுதி
இந்த தகவலை கரூர் சின்னசாமியும் உறுதிப்படுத்தியுள்ளார். அதிமுகவில் கரூர் மாவட்டச் செயலாளராக செந்தில் பாலாஜிக்கு ஜெயலலிதா பதவி வழங்கிய போது அதிருப்தி ஏற்பட்டதால் கரூர் சின்னசாமி திமுகவில் இணைந்தார். இந்நிலையில் செந்தில் பாலாஜி திமுகவுக்கு வருவதால் கரூர் சின்னசாமி அதிமுகவுக்கு திரும்புகிறார் என்ற தகவல் வெளியானது.

என் தலைமையில்..
இதுகுறித்து சின்னசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவரோ அதிமுகவுக்கு செல்வது சுடுகாட்டுக்கு செல்வதற்கு சமம். எனக்கும் செந்தில் பாலாஜிக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. இன்னும் கேட்டால் என்னுடைய தலைமையில்தான் செந்தில் பாலாஜி நாளை அண்ணா அறிவாலயத்தில் திமுகவில் இணைகிறார் என அடித்து கூறி அத்தனை யூகங்களை உறுதிப்படுத்தினார்.

ஊடகங்களில்...
செந்தில் பாலாஜி, அமமுகவை விட்டு எங்கும் செல்லமாட்டார் என தங்கதமிழ்செல்வன் ஊடகங்களில் தெரிவித்து வந்த நிலையில் இதுபோன்ற புகைப்படத்தாலும் தகவல்களாலும் அமமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தினகரனின் நம்பிக்கைக்குரியவர்களுள் செந்தில் பாலாஜியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்!












Click it and Unblock the Notifications