வழக்கு இருப்பதாலேயே அமைச்சரை பதவி நீக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது- சொன்னது சென்னை ஹைகோர்ட்!
சென்னை: குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதாலேயே ஒரு அமைச்சரவை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் எதுவும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்னர்தான் திட்டவட்டமாக கூறியிருந்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி. அறிக்கை வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சையாகி உள்ளது.

செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுனர் ஏற்க மறுத்த நிலையில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என கடந்த 16-ந் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதேபோல, அமைச்சர் செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் அமைச்சரவையில் நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு பெஞ்சில் 2 நாட்களுக்கு முன்னர் விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் அமைச்சர் பதவியில் நீடிக்கிறார் என விளக்கமளிக்க கோரி கோ - வாரண்டோ வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், அந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இவ்வழக்கில்தான்
வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதற்காக அவரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளதா?
சட்டப்பிரிவு 164இன் கீழ் ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்ய சட்டபூர்வ அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறதா?
ஒரு வழக்கில் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்துக்கு சிறைத் தண்டனையை ஒருவர் பெற்றால் மட்டுமே அமைச்சரை ஆளுநரால் பதவி நீக்கம் செய்ய முடியும்; குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாலேயே அமைச்சரை ஆளுநர் ப்தவி நீக்கம் செய்வதற்கு அதிகாரம் இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில்தான் தற்போது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications