செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பை நிறுத்தி வைத்த சென்னை முதன்மை நீதிமன்றம்
சென்னை: செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் அவருக்கு 15 மாத சிறை வாசத்திற்கு பின்னர் ஜாமீன் கிடைத்த நிலையில் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் செந்தில் பாலாஜி கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் விசாரணையில் இருந்த போதே இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனுவை சென்னை முதன்மை நீதிமன்றமும் சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஓகா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவருக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. அதாவது நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. அந்த நிபந்தனையில் இருவர் அவருக்கு ரூ 25 லட்சம் பிணை செலுத்த வேண்டும்.
திங்கள், வெள்ளி ஆகிய இரு நாட்களும் அமலாக்கத் துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும். சாட்சியங்களை மிரட்டக் கூடாது, சந்தித்து பேசக் கூடாது. அமலாக்கத் துறை வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். வாய்தா மேல் வாய்தா வாங்கக் கூடாது உள்ளிட்ட விவகாரங்கள் நிபந்தனைகளாக கொடுக்கப்பட்டன.
இதன் மூலம் அவர் மீண்டும் அமைச்சராக பதவி வகிக்க எந்த தடையையும் உச்சநீதிமன்றம் வகிக்கவில்லை. இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
வழக்கின் விசாரணை பிற்பகலுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் கிடைத்தவுடன் உடனடியாக பிணையில் விடுவிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. இதனால் அவரது நீதிமன்றக் காவல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இந்த வழக்கில் 58 முறை செந்தில் பாலாஜிக்கு காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தொடர்ந்த மற்றொரு வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் ஒரு சாட்சி வரவில்லை. எனவே இந்த வழக்கின் விசாரணையை வரும் 30-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
-
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
ஹார்டு டிஸ்க் மாயமா? மின்வெட்டு பிரச்சனையை திசை திருப்ப முயற்சி.. விளாசிய செந்தில் பாலாஜி -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
வங்கி கடன் செட்டில்மென்ட்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் கடன் வாங்கியவர்கள் மகிழ்ச்சி -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications