சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குட்பை.. இந்த பரிசை மறக்க மாட்டீங்க.. இரவே சொன்ன எம்பி செந்தில் குமார்.. கல்யாணராமன் கைதானது எப்படி?

Google Oneindia Tamil News

சென்னை: பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் இன்று கைது செய்யப்பட்ட நிலையில் திமுக எம்பி செந்தில்குமார் இந்த கைது பற்றி நேற்று இரவே ட்வீட் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

    BJP Kalyanaraman நள்ளிரவில் கைதானது எப்படி? | Oneindia Tamil

    கோவையில் நடந்த பாஜக பொதுக்கூட்டம் ஒன்றில் நபிகள் நாயகம் குறித்து தவறாக பேசியதாக பாஜகவின் கல்யாணராமன் மீது புகார் வைக்கப்பட்டு இருந்தது. இதற்காக கடந்த பிப்ரவரியில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தவர், கிட்டதட்ட 10 மாதங்கள் கழித்து பெயிலில் சில நாட்களுக்கு முன் வெளியே வந்தார்.

    கேரளாவில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.. நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலி.. இன்று மிக அதிக கனமழை! கேரளாவில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.. நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலி.. இன்று மிக அதிக கனமழை!

    இந்த நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த பின்பும் தொடர்ந்து கல்யாணராமன் சர்ச்சைக்குரிய வகையில் சில ட்வீட்களை செய்து வந்தார். தமிழ்நாடு அரசு குறித்தும், சில பெண் தலைவர்கள் குறித்தும் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் சில ட்வீட்களை செய்து வந்தார்.

     செந்தில் குமார் எம்பி

    செந்தில் குமார் எம்பி

    இணையத்தில் எதிர்கட்சியினரை தவறாக பேசுபவர்கள் மீதும், அவதூறாக கருத்து சொல்பவர்கள் மீதும் திமுக எம்பி செந்தில் குமார் போலீசில் புகார் தருவது வழக்கம். சைபர் கிரைம் போலீசாருக்கு ட்வீட்டர் ஸ்கிரீன் ஷாட்களை பகிர்ந்து எம்பி செந்தில் குமார் புகார் தருவது வழக்கம். அதேபோல்தான் பாஜக கல்யாணராமனுக்கு எதிராகவும் எம்பி செந்தில் குமார் புகார் அளித்து இருந்தார்.

    கல்யாணராமன்

    கல்யாணராமன்

    சில நாட்களுக்கு முன்பு விசிக எம்எல்ஏ எஸ்எஸ் பாலாஜியின் மனைவியும் நடிகையுமான டாக்டர் ஷர்மிளா குறித்து அவதூறாக கருத்துக்களை வெளியிட்டு கல்யாணராமன் ட்வீட் செய்து இருந்தார். அப்போதே கல்யாணராமனுக்கு எதிராக எம்பி செந்தில் குமார் போலீசில் புகார் அளித்தார். இணையத்தில் இன்னும் பலர் போலீசில் கல்யாணராமனுக்கு எதிராக புகார் அளித்து இருந்தனர்.

    கைது

    கைது

    இதையடுத்துதான் தமிழ்நாடு முதல்வருக்கு எதிராகவும் கல்யாண்ராமன் அவதூறாக ட்வீட் செய்து இருந்தார். முதல்வரை மட்டுமின்றி, முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தும் அவதூறாக ட்வீட் செய்து இருந்தார். இதுதான் இணையத்தில் பெரிய அளவில் சர்ச்சையானது. இந்த ட்வீட்களை ஸ்கிரீன் ஷாட் எடுத்து எம்பி செந்தில்குமார் சென்னை சைபர் கிரைம் போலீசுக்கு நேற்று இரவே புகார் அளித்தார்.

    பதில்

    பதில்

    இந்த புகார்களை தொடர்ந்து எம்பி செந்தில் குமாருக்கு பதில் அளித்த கல்யாண்ராமன், இன்று முதல் நம்ம தம்பி செந்திலை என்னோட PROவாக நியமிக்கிறேன். மாசம் ரெண்டு புகார் கொடுத்து என்னோட பெயரை மக்களிடம் கொண்டு செல்லுமாறு பணிக்கிறேன். இப்படியாவது மக்கள் சேவை செய்யட்டும், என்று குறிப்பிட்டு இருந்தார்.

    புகார்

    புகார்

    இதற்கு பதில் அளித்த எம்பி செந்தில் குமார், இந்த மாசம் இரண்டு இதோ. அடுத்த மாசத்துக்கு வெளிய இருந்த அப்போ பார்த்துக்கலாம். என்று குறிப்பிட்டு கல்யாண் ராமனின் ட்வீட்களை பகிர்ந்து அதில் சென்னை போலீசையும் டேக் செய்து இருந்தார்.

    இரவே சொன்னார்

    இரவே சொன்னார்

    இதையடுத்து நேற்று இரவே எம்பி செந்தில் குமார், கல்யாண்ராமனின் கைது குறித்து சூசகமாக குறிப்பிட்டு இருந்தார். அதில் நான் உங்களுக்கு அளி(ழி)க்கும் பரிசு நீங்கள் வாழ் நாளில் மறக்க மாட்டீர்கள். நன்றாக மகிழ்ந்து அனுபவிக்கவும். இறுதி குட் பை, என்று குறிப்பிட்டார்.

    கைது

    கைது


    அதாவது கல்யாண்ராமனின் கைது குறித்து நேற்று இரவே செந்தில்குமார் எம்பி குறிப்பிட்டார். அதன்படியே இன்று காலை கல்யாண்ராமன் கைது செய்யப்பட்டார். முதல்வர் குறித்தும் பெண்கள் குறித்தும் அவதூறாக பேசியதற்காக கல்யாண்ராமன் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டு உள்ளார்.

    English summary
    DMK Senthil Kumar MP tweet: How Kalayanaraman BJP arrested by Tamilnadu Police?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X