திமுக இளைஞரணி மாநாடு! முரசொலியில் முழு பக்க விளம்பரம் தந்த செந்தில்பாலாஜி!
சென்னை: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாக அமைச்சர் செந்தில்பாலாஜி சிறையில் இருக்கும் நிலையில், சேலத்தில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாடுக்கு தனது பெயரில் முழு பக்க விளம்பரம் கொடுத்துள்ளார்.
இதன் மூலம் ஒரு பக்கம் தாம் சிறையில் இருந்தாலும் மற்றொரு பக்கம் கரூர் மாவட்டத்தில் நடக்க வேண்டிய கட்சிப் பணிகள் சுணக்கமின்றி நடைபெற்று வருவதை உணர்த்தியுள்ளார். தனது பெயருக்கு கீழ் தமிழ்நாடு அமைச்சர், கரூர் மாவட்ட திமுக செயலாளர் என்ற பொறுப்புகளையும் குறிப்பிட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணி மாநாடு நாளை நடைபெறுவதால் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் திடல் உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல 10 லட்சம் பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, பிரட் அல்வா, தயிர் சாதம், ஸ்வீட், காலி பிளவர் சில்லி என ஏராளமான உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இதனால் சேலம் புறநகர் பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்நிலையில் திமுக இளைஞரணி மாநாட்டை வாழ்த்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் நாளிதழ்களில் முழு பக்கம் விளமபரங்கள் கொடுத்துள்ளனர். அந்த வகையில் அமைச்சர் செந்தில்பாலாஜியும் முரசொலி நாளிதழில் தனது பெயரில் முழு பக்க விளம்பரம் கொடுத்துள்ளார்.
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 10 முறைக்கு மேல் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 14ஆம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி 6 மாதங்களுக்கு மேலாக விசாரணைக் கைதியாக இருந்து வருகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications