குலுங்கிடுச்சு தமிழ்நாடு.. செந்தில் பாலாஜி டிஸ்மிஸ்.. நள்ளிரவில் உத்தரவை நிறுத்திய ஆளுநர்..என்னாச்சு
சென்னை: செந்தில் பாலாஜி பதவி நீக்க விவகாரம், பரபரப்பை கிளப்பிய நிலையில், நள்ளிரவில் ஆளுநரின் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின், சட்டவல்லுநர்களை சந்தித்து பேசுகிறார்.
போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித்தருவதாக நடந்த மோசடி தொடர்பாக பதிவான வழக்கில், பல்வேறு கட்ட சோதனைகளை அமலாக்கத்துறையினர் நடத்தி வந்தனர்.
இதன் ஒரு கட்டமாக, சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் 18 மணி நேரத்துக்கும் மேல் விசாரித்த அமலாக்கத்துறை, அவரை அதிரடியாக கைதும் செய்திருந்தது..
சிகிச்சை: ஆனால், அவருக்கு இதயத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவை சரிசெய்யப்பட்டு, தற்போது அவருக்கு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது... இதனிடையே செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர அரசு விரும்பியது.. இதற்கு ஆளுநர் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், "இலாகா இல்லாத அமைச்சராக" செந்தில் பாலாஜி தொடர்வார் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த நிலையில், நேற்று மாலை சுமார் 7 மணியளவில் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ரவி அறிவிப்பை ஒன்றை வெளியிட்டார்.. இது மிகுந்த பரபரப்பை அரசியல் களத்தில் ஏற்படுத்தியிருந்தது.. முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சியினர் தரப்பில் இருந்து கடும் கண்டனம் எழுந்தது... குறிப்பாக சட்டரீதியான விமர்சனங்கள் இதற்கு குவிந்தன..
நள்ளிரவில் நிறுத்தம்: இரவு 7 மணி முதல் விவாதங்களும், விமர்சனங்களும், நாலாபக்கமும் எழுந்தநிலையில், செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை நள்ளிரவில் ஆளுநர் ரவி நிறுத்தி வைத்துள்ளார்.
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்திருப்பதாகவும், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருடன் கருத்து கேட்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டதை நிறுத்தி வைத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலினிடம், ஆளுநர் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.
சட்ட அணுகுமுறை: எனினும், செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி ஆளுநர் உத்தரவிட்டுள்ளது, சரியான சட்ட அணுகுமுறை இல்லை என்ற வாதத்தையும் நிபுணர்கள் முன்வைத்து வருகிறார்கள்.
"செந்தில் பாலாஜி விவகாரத்தில் இப்படி தன்னிச்சையாக செயல்பட ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை..
அமைச்சரவையில் ஏதாவது புதிதாக மாற்றம் செய்ய வேண்டும் என்றாலோ, அல்லது ஒரு அமைச்சரை நீக்க வேண்டும் என்றாலோ, அல்லது புதிதாக ஒருவரை அமைச்சராக்க வேண்டும் என்றாலோ, இதற்கெல்லாம் அமைச்சரவையின் தலைவராக உள்ள முதல்வருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது..
இதுதொடர்பாக முதல்வர் எடுக்கும் முடிவுகளுக்குதான், ஆளுநர் கட்டுப்பட்டு நடக்க வேண்டுமே தவிர, அவரது இஷ்டம்போல யாரையும் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கவோ, அமைச்சரவையில் இருந்து நீக்கவோ அரசியலமைப்பு சட்ட ரீதியாக ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை...
நீக்கம் சரியா?: செந்தில் பாலாஜி நீக்கத்தில் அவர் சட்டத்துக்கு புறம்பாக, வரம்பு மீறி செயல்பட்டுள்ளார். ஆளுநரின் இந்த உத்தரவு முதல்வரையோ, தமிழக அரசையோ எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்று திமுகவின் மூத்த வழக்கறிஞர் விஜயன் உள்ளிட்டோரின் வாதமாக எழுந்தது.
ஆனால், மூத்த வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயன் உள்ளிட்டோர் இதற்கு எதிர்மாறான கருத்துக்களை முன்வைக்கிறார்கள்.. "முதல்வர் பரிந்துரைக்கும் அனைத்து விஷயங்களுக்கும் ஆளுநர் செவிசாய்க்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை... ஆளுநர் கையெழுத்திட்டால் மட்டுமே ஒருவர் அமைச்சராக முடியும்... ஒருவரை அமைச்சராக்க அதிகாரம் படைத்த ஆளுநரால், குறிப்பிட்ட காரணங்களுக்காக அமைச்சர் பதவியில் இருந்து ஒருவரை நீக்கவும் தனிப்பட்ட அதிகாரம் உண்டு. இதை அரசியலமைப்பு சட்டரீதியாக மறுக்க முடியாது.
அமைச்சரவை: அதுவும் இல்லாமல், குற்ற வழக்குகளில் சிக்கி கைதாகியுள்ள செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பதை ஏற்க முடியாது என்று ஆளுநர் மறுப்பு தெரிவித்த அடுத்த நிமிஷமே, அவரை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் நீக்கியிருக்க வேண்டும். ஆனால், ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக முதல்வர் அரசாணை பிறப்பித்தார்... அமைச்சர் என்ற பதவியில் நீடித்துக்கொண்டு அவர் எப்படி தனக்கு எதிரான குற்ற வழக்கை நேர்மையாக எதிர்கொள்வார்?
அரசியலமைப்பு சட்டரீதியாக ஒரு அமைச்சர் எடுத்துக் கொள்ளும் ரகசிய காப்பு பிரமாணம் என்பது ரொம்ப முக்கியமானது... அதை நிலைநாட்ட ஆளுநர் எந்த முடிவையும் சட்டரீதியாக எடுக்க முடியும்... ஒரு மாநிலத்தில் ஆட்சி சட்டத்துக்கு புறம்பாக எல்லை மீறி செல்கிறது என்றால், அந்த ஆட்சியை கவிழ்க்கவும் ஆளுநருக்கு பிரத்யேக அதிகாரம் உண்டு" என்று மாற்றுக்கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் சொல்லும்போது, "மாநிலங்களை பொறுத்தவரை அரசியல் சாசனத்தின் காவலர் ஆளுநர்தான். அந்தவகையில் ஆளுநர் செய்தது சரிதான்.. குடியரசுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் அந்த அதிகாரம் இருக்கிறது. ஆனால், ஆளுநர்கள் செயல்படுத்துவதில்லை.
சரியான நடவடிக்கை: கேரளாவில் இதேபோன்று அமைச்சர் கே.என்.பாலகோபல் தனது பதவியில் தொடரக்கூடாது என்று ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தன்னுடைய இசைவின்மையை தெரிவித்திருந்தார். ஆனாலும், ஆரிப் முகமது கான் பதவி நீக்கம் என்ற நிலைக்கு செல்லவில்லை. ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சரை நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார்..
செந்தில்பாலாஜியே தனது பதவியை ராஜினாமா செய்திருக்கலாம்.. அவர் மீதான வழக்கு எத்தனை ஆண்டுகள் நடைபெறும் என்று தெரியாது. அப்படி இருக்கும்போது எத்தனை ஆண்டுகளுக்கு அவர் துறை இல்லாத அமைச்சராக தொடருவார். இது அரசுக்கு செலவுதானே. மக்களின் வரிப்பணம் தானே அது? என்று கேள்வி எழுப்புகிறார் தராசு ஷ்யாம்.
விஜயபாஸ்கர்: "முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெற்றபோது, சில ஆவணங்களைத் தூக்கி வெளியே எறிந்தார்கள்... அன்றைக்கு ஆளுநர் என்ன செய்து கொண்டு இருந்தார்? ஆவணத்தை வெளியே வீசுவதும், அப்படி வீசும் போது ஒருவர் எடுத்துக் கொண்டு ஓடும் வீடியோயும் வைரலானதே? அதையே சாட்சியமாக வைத்து அப்போது விஜயபாஸ்கரை கைது செய்ய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்தானே?

ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. நாட்டில் ஜனநாயகம் இருக்கிறதா இல்லையா என்பதை 2024ல் மக்கள் முடிவு செய்வார்கள் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சீறியுள்ளார்.
சட்ட அணுகுமுறை: "அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. ஆளுநரின் நடவடிக்கையை சட்டரீதியாக எதிர்கொள்வோம்" என்று முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்த நிலையில், ஆளுநரின் நடவடிக்கையை எதிர்த்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தை நாட முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆளுநரின் ஒரு அறிவிப்பால், நேற்று முதல் இந்த பரபரப்பு நீங்காமல் உள்ளது.. இது தொடர்பான சட்டரீதியாக திமுக என்ன செய்ய போகிறது? அதற்கு ஆளுநர் தரப்பின் பதில் என்னவாக இருக்க போகிறது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
முதல்வர் ஆலோசனை: இதனிடையே, சென்னை தலைமை செயலகத்தில் அலுவல் பணிகள் முடிந்தவுடன், சட்ட வல்லுநகர்கள் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த போவதாக தகவல் வெளியாகி உள்ளது.. கவர்னரின் முடிவு தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்காக முதலமைச்சர் இந்த ஆலோசனையை மேற்கொள்கிறார்.. சென்னை அண்ணா அறிவாலயத்தில் சட்ட வல்லுநர்கள், மூத்த அமைச்சர்கள் உள்ளிட்டோருடனும் அவர் ஆலோசிக்க உள்ளார்.
ஆளுநரின் ஒரு அறிவிப்பால், நேற்று முதல் இந்த பரபரப்பு நீங்காமல் உள்ளது.. இது தொடர்பான சட்டரீதியாக திமுக என்ன செய்ய போகிறது? அதற்கு ஆளுநர் தரப்பின் பதில் என்னவாக இருக்க போகிறது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications