நிலக்கரி மாயம்! அடுத்த மாஜிக்கு சிக்கல்! விஜிலன்ஸுக்கு பறந்த ரிப்போர்ட்! செந்தில்பாலாஜி ஸ்கெட்ச்
சென்னை: அதிமுக ஆட்சியின் நிலக்கரி மாயமானதாகப் புகார்கள் எழுந்த நிலையில், இந்த விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் அனல் மின் நிலையங்களில் நிலக்கரி மாயமானதாகப் புகார்கள் எழுந்தன. இதை அப்போதைய எதிர்க்கட்சிகளும் சமூக செயற்பாட்டாளர்களும் குறிப்பிட்டு விமர்சித்தனர்.
அப்போது மின்துறை அமைச்சராக இருந்த தங்கமணி மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், இது தொடர்பாக சில முக்கிய தகவல்களை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விரிவாகத் தெரிவித்து உள்ளார்.

செந்தில் பாலாஜி
தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கினாலே மின்வெட்டு பிரச்சினை ஒரு பக்கம் ஆரம்பித்துவிடும். இதனால் மாணவர்கள், தொழிற்துறையினர் என அனைவரும் பாதிக்கப்படுவார்கள். இந்நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து துறை அதிகாரிகளுடன் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனையில் ஈடுபட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பருவமழை சமயத்தில் மின் விநியோகத்தில் பாதிப்பு இல்லாமல் இருப்பது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.

மின் விநியோகம்
மழைக்காலத்தை எதிர்கொள்ளவும் தேவையான நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு பல்வேறு வழிகாட்டுதல்கள் கொடுத்துள்ளோம். மழைக்காலம் என்பதால் பாதுகாப்பு கருதி மாநிலத்தில் பல அவ்வப்போது மின் நிறுத்தம் செய்யப்படும். அப்படி நேற்று மாநிலத்தில் 144 இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. இருப்பினும் சீரமைப்பு பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு மின்சார விநியோகம் சீரமைக்கப்பட்டது.

தயார் நிலை
பருவமழை காலத்தைச் சீராக எதிர்கொள்ள 1 லட்சத்து 40 ஆயிரம் மின்கம்பங்களும், 9000 கிமீ மின்கம்பிகளும் தயார் நிலையில் உள்ளது. பருவ மழைக் காலத்தில் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அனைத்து விதமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளதால் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் மின் விநியோகம் செய்யப்படும்" என்றார்.

வட சென்னை
நேற்று வடசென்னையில் பெண் ஒருவர் மின்சாரம் தாக்கி.கு குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அவர், "மழை காரணமாக அங்குப் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டு தான் இருந்தது. இருந்த போதிலும், அதிகப்படியான மழை காரணமாகச் சாலையில் நீர் தேங்கி இருந்தது. வீடுகளுக்கு மின் விநியோகம் நிறுத்தப்பட்டாலும், மாநகராட்சியின் சாலை விளக்குகளில் மின் நிறுத்தம் செய்யப்படவில்லை. எனவே அங்கிருந்து ஏற்பட்ட மின் கசிவு காரணமாகவே விபத்து நடந்துள்ளது. வரும் காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுப்போம்..

நிலக்கரி மாயம்
தமிழ்நாட்டில் இப்போது நிலக்கரி பற்றாக்குறை எதுவும் இல்லை.. 10 முதல் 11 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பில் இருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் நிலக்கரி காணாமல் போனதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து இருந்து. அது தொடர்பாக துறை ரீதியான அமைக்கப்பட்ட குழு அதன் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில் நிலக்கரி காணாமல் போனது உண்மைதான் எனக் கூறப்பட்டு உள்ளது.

விஜிலன்ஸ் துறை
மேலும், எந்த காலத்தில் எவ்வளவு நீலகிரி காணாமல் போனது என்பது குறித்த தரவுகளும் உள்ளது. இந்த அறிக்கையை ஆய்வு செய்து, அடுத்த கட்டமாக இதை விஜிலன்ஸ் துறையிடம் கொடுக்க உள்ளோம். அவர்கள் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பார்கள். மேலும், இப்போதைய சூழலில் மத்திய அரசு மின் நிறுவனங்களுக்குத் தமிழ்நாடு அரசு எந்தவொரு நிலுவைத் தொகையும் செலுத்தத் தேவையில்லை.

மின் கட்டணம்
தமிழ்நாட்டில் மின்வாரிய காலிப் பணியிடங்களில் ஏற்கனவே குறிப்பிட்ட பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமும் மற்ற பணியிடங்கள் மின்வாரியத்தின் மூலம் நேரடியாகவே நிரப்பப்படும். மின் கட்டண உயர்வு விவகாரத்தில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நிலை கட்டணத்தைக் குறைக்க வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதை ஏற்று அவர்களுக்கு மட்டும் நிலை கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications