நீங்க சொல்லிதான் உங்க தம்பியை உள்ளே வைச்சாங்க.. சீமான் ஸ்டேட்மென்ட்.. செந்தில்குமார் நறுக் பதிலடி!
சென்னை: திமுக ஆட்சி குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கொடுத்த பேட்டிக்கு திமுக எம்பி செந்தில்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
திமுகவிற்கும், நாம் தமிழர் கட்சிக்கும் சமீப நாட்களாக கருத்து மோதல் தீவிரமாகி வருகிறது. தமிழ்நாடு அரசுக்கு எதிராக சீமான் கடுமையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். தொடர்ந்து பல இடங்களில் அரசின் முடிவுகளையும், நிலைப்பாடுகளை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அதே சமயம் திமுக வெளியிடும் சில முக்கியமான அறிவிப்புகளை பாராட்டியும் வருகிறார். நாங்கள் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த திட்டங்களை திமுக நிறைவேற்றி வருகிறது என்று சீமான் பல இடங்களில் பேட்டியில் குறிப்பிட்டு வருகிறார்.

சீமான் பேட்டி
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், தமிழ்நாட்டில் தொல்லியல் துறையில் முக்கிய ஆய்வுகளை செய்வதாக அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்புகள் எங்களின் அரசுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் தொல்லியல்துறை சார்ந்த அறிவிப்புகள் தமிழ்த்தேசிய அரசியல் சரியான பாதையில் செல்கிறது என்பதை காட்டுகிறது.
Recommended Video

ஆட்சி
நான் பேசுவதற்கு எதையும் மிச்சம் வைத்துவிடக்கூடாது என்று தமிழ்நாடு அரசு மூலம் பார்த்து பார்த்து திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.எங்கள் அறிவிப்புகளை பின்பற்றியே திமுக ஆட்சி செய்து வருகிறது. இதற்கு முன் நாங்கள் பேசிய விஷயங்களை, எங்கள் வாக்குறுதிகளில் கொடுத்த விஷயங்களை இவர்கள் தற்போது திட்டங்களாக வெளியிட்டு வருகிறார்கள். நாம் தமிழர் கட்சி என்ன சொல்லியிருக்கிறதோ, என்ன எழுதி அறிக்கை விடுக்கிறதோ அதையெல்லாம் பார்த்துதான் திமுக அரசு செயல்படுத்துகிறது.

அரசு வழி நடத்துகிறது
ஒருவகையில் பார்த்தால், திமுக ஆட்சியையே நாம் தமிழர் கட்சிதான் வழிநடத்துகிறது. நான் திமுகவில் தொடர்ந்து இருந்திருந்தால் இதைத்தான் செய்திருப்பேன். நான் அமைச்சராக கூட இப்போது ஆகியிருப்பேன். எங்களின் தமிழ் தேசிய கொள்கைக்கு தரப்படும் முக்கியத்துவம் பெருமையும் திமிரையும் எங்களுக்கு கொடுக்கிறது, என்று சீமான் குறிப்பிட்டார்.
|
பதிலடி
இந்த நிலையில் திமுக அரசை நாம் தமிழர் வழி நடத்துவதாக குறிப்பிட்ட சீமானின் பேச்சுக்கு திமுக எம்பி செந்தில்குமார் பதில் அளித்துள்ளார். அதில், ஆமா அண்ணே ஆமா. நீங்க சொல்லி தான் அண்ணே உங்க தம்பியை உள்ளே வைச்சாங்க என்று செந்தில் குமார் எம்பி பதில் அளித்துள்ளார். திருச்சியில் கார் நிறுவன ஊழியரை மிரட்டியதாக வைக்கப்பட்ட புகாரில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த யூ டியூப் பதிவர் துரைமுருகன் உட்பட 4 பேர் கடந்த சில வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர். இதை குறிப்பிட்டு செந்தில்குமார் எம்பி கிண்டல் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications