அதானி துறைமுகத்தில் ஆபத்தான கதிரியக்க பொருட்கள்.. சிக்கிய பாகிஸ்தான்-சீனா கன்டெய்னர்
டெல்லி: குஜராத்தில் அதானிக்கு சொந்தமான முந்த்ரா துறைமுகத்தில், ஆபத்தான கதிரியக்க பொருட்கள் கொண்டு சென்ற கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் (APSEZ) வெளியிட்ட அறிக்கையின்படி, பறிமுதல் செய்யப்பட்ட கொள்கலன்கள் பாகிஸ்தானில் உள்ள கராச்சியிலிருந்து சீனாவின் ஷாங்காய்க்கு அனுப்பப்பட்டன என்றும், அவை முத்ரா துறைமுகத்திற்கு அனுப்பப்படவில்லை. இந்த சரக்குகள் அபாயமற்ற வகையாக பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், சோதனை செய்து பார்த்தபோது இது அபாயகரமான பொருள் என தெரியவந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட கொள்கலன்களில் கதிரியக்கப் பொருட்கள் இருப்பதை சுட்டிக்காட்டும் (அபாயகரமான வகை 7) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சீனாவிற்கு
நவம்பர் 18 அன்று முந்த்ரா துறைமுகத்தில் ஒரு வெளிநாட்டுக் கப்பலில் இருந்து சுங்க மற்றும் DRI இன் கூட்டுக் குழு பல கொள்கலன்களைக் கைப்பற்றியது. இந்த கொள்கலன்கள் ஆபத்தான பொருட்களை கொண்டு சென்றது குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை. சீனாவின் ஷாங்காய்க்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்த கொள்கலன்களை முந்த்ரா துறைமுகத்தில் பரிசோதனைக்காக இறக்கி வைத்தோம்.

கராய்சி
"... கொள்கலன்கள் முந்த்ரா துறைமுகத்திற்கோ அல்லது இந்தியாவின் வேறு எந்த துறைமுகத்திற்கோ அனுப்பப்படவில்லை, ஆனால் பாகிஸ்தானில் உள்ள கராச்சியிலிருந்து சீனாவின் ஷாங்காய்க்கு செல்லும் வழியில் அரசு அதிகாரிகள் அவற்றை மேலும் ஆய்வுக்காக முந்த்ரா துறைமுகத்தில் இறக்கியுள்ளனர்" என்று அதானி போர்ட்ஸ் அறிவித்துள்ளது.

அதானி குழுமம் விளக்கம்
"நாங்கள் அவர்களின் செயல்பாட்டுக்கு வணக்கம் செலுத்துகிறோம், இந்தியாவைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் எந்தவொரு செயலுக்கும் தொடர்ந்து முழுமையாக உதவுவோம். அதானி குழுமம் தேசிய பாதுகாப்பை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது மற்றும் அதை எந்த வகையிலும் சமரசம் செய்ய அனுமதிக்காது," இவ்வாறு அதானி போர்ட் அறிவித்துள்ளது.

சர்ச்சை
சில மாதங்கள் முன்பு ஆப்கானிஸ்தானில் இருந்து விஜயவாடாவுக்கு கடத்தி வரப்பட்ட 3 டன் எடையுள்ள, ரூ.21 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் போதை பொருளை குஜராத்தில் அதானிக்கு சொந்தமான இதே துறைமுகத்தில்தான் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதானி துறைமுகம்தான், தற்போது இந்தியாவின் மிகப் பெரிய துறைமுகம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications