"சபலிஸ்ட்".. ஆக்சிஜன் தரேன்.. ஆனால் எனக்கு நீ வேணும்.. மிருகமாக மாறிய பக்கத்து வீட்டுக்காரர்.. ஷாக்!

இளம்பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர் தந்துள்ளார் ஒருவர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "உன் அப்பாவுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தரேன்.. அதுக்கு பதிலா என்கூட உறவு வெச்சிக்கிறியா" என்று இளம்பெண்ணை, சபலிஸ்ட் ஒருவர் கேட்டுள்ளார்.. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்த கொரோனா பல பாடங்களை மக்களுக்கு கற்று தந்து வருகிறது.. தொற்று யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்ற ரீதியில் நிலைமை சென்று கொண்டிருக்கிறது..

திடீர் திடீரென விழுந்து மடியும் உயிர்களால் பலரும் நிலைகுலைந்து போயுள்ளனர்.. இப்படிப்பட்ட மோசமான மனித நேயமும் மங்கி கொண்டே போகிறது..

 கொரோனா

கொரோனா

அந்த வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. ஒரு இளம்பெண்ணின் அப்பாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. அதனால், ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளார்.. இப்போது நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதால், ஆக்சிஜன் சிலிண்டர் எங்காவது கிடைக்குமா என்று அந்த பெண் தேடி வந்துள்ளார்.. இந்த விஷயம், அந்த பெண்ணின் பக்கத்து வீட்டுக்காரருக்கு தெரியவந்துள்ளது. உடனே பெண்ணை தேடி வந்திருக்கிறார்.

இளம்பெண்

இளம்பெண்

"நான் ஆக்சிஜன் சிலிண்டர் தர்றேன்.. ஆனால், நீ என்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும்" என்று சொன்னாராம். இந்த சம்பவத்தை இளம்பெண்ணின் நண்பரின் தோழியே, தன்னுடைய ட்வீட்டரில் பதிவிட்டிருந்தார்.

சகோதரி

சகோதரி

"என் நண்பரின் சகோதரியிடம், காஸ்ட்லி அபார்ட்மென்ட்டில் வசிக்கும் பக்கத்துக்கு வீட்டுக்காரர், என்னுடன் படுக்க வா, நான் உனக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தருகிறேன் என சொல்லி உள்ளார்.. (அந்த சகோதரி தனது அப்பாவின் உடல்நிலை காரணத்திற்காக ஆக்சிஜன் சிலிண்டர் உதவி நாடி வந்தவர்) ஆனால், அந்த சகோதரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை..

மறுப்பு

மறுப்பு

அந்த காமுகனின் ஆசைக்கு மறுப்பு சொல்லிவிட்டார். இது போன்ற பெருந்தொற்று காலத்தில், மக்கள் உயிருக்காக போராடும் நேரத்தில் கூட இச்சை உணர்வுடன் மக்கள் இருப்பது, நம்முடைய நாட்டின் பெயரையும், பெருமையையும் சீர்குலைய செய்கிறது என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

பரபரப்பு

பரபரப்பு


இந்த ட்வீட்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. அவசரம், உயிர் பிரச்சனை என்று தெரிந்தும், எப்படி இப்படி ஒரு கேள்வியை அந்த நபரால் சொல்லி இருக்க முடியும் என்ற அதிர்ச்சி கேள்வியை எழுப்பி வருகிறது. சம்பந்தப்பட்ட அந்த பெயர், அட்ரஸ், போட்டோவை போட்டு அசிங்கப்படுத்த வேண்டும் என்றும், இதை பற்றி போலீஸில் புகார் தர வேண்டும் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+