அன்று தங்கப்பத்திரத்தை லட்சத்தில் வாங்கியிருந்தால் இன்று மதிப்பே வேறு.. தபால் நிலையங்களில் செம்ம
சென்னை: தங்க நகை வாங்கினால் ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி சேதாரமே 8000 வரை கூடுதலாக செலவு செய்ய வேண்டியது வருகிறது.. ஆனால் தபால் நிலையத்தில் விற்கப்படும் தங்கப்பத்திரத்திற்கு ஜிஎஸ்டி, செய்கூலி சேதாரம் என எதுவும் இல்லை.. அதேநேரம் வட்டி, விலை அதிகரிப்பு போன்றவை பெரிய லாபமாக இருக்கும்.
இன்றைக்கு தங்கம் விற்கும் விலைக்கு அதை வாங்குவது பலருக்கும் எட்டாக்கனியாக உள்ளது. அதேநேரம் முதலீடு செய்து பணத்தை சேமிக்க விரும்புவோர் தங்கத்தை வாங்கலாமா என்று யோசித்து வருகிறார்கள். தங்கத்தின் விலை தொடர்ந்து உயருவதால் அதை வாங்குவது நல்லது என்றே பல பொருளாதார நிபுணர்கள் கூறி வருகிறார்கள்..

அதேநேரம் தங்கத்தை நகையாக வாங்கி சேமிப்பது பல பெண்களுக்கு பிடித்த விஷயமாக உள்ள நிலையில், தபால் நிலையங்களில் தங்கப் பத்திரமாக வாங்கி சேமிக்கலாம் என்றும், அப்படி சேமித்தால், தங்கத்தைவிட தங்க பத்திரம் பயனுள்ளதாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
தங்க நகை யார் போட்டிருந்தாலும், அதேபோன்று ஒரு டிசைனில் தங்க நகை வாங்க வேண்டும் என்ற ஆசை பல பெண்களுக்கு உண்டு. ஏன் ஆண்களுக்குமே தங்கத்தை நகையாக அணிவது இப்போது பிடித்திருக்கிறது. தங்கம் அணிவதை அழகுக்காக மட்டுமல்லாமல் அடையாளமாகவும் அணிகிறார்கள்.. தங்க நகையில் முதலீடு செய்வதை பொறுத்தவரை, லாப நஷ்ட கணக்கு பார்த்தால், ஒரு பவுன் நகையை ரூ.51000ம் கொடுத்து வாங்க முடியாது. அதற்கு ஜிஎஸ்டி, செய்கூலி, சேதாரம் என கிட்டத்தட்ட 8 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டியது வரும்.. அதாவது ஒரு பவுன் நகைக்கு குறைந்தது 55000 முதல் 57000 ரூபாய் வரை ஆகும். தங்கம் விலை ஏறினாலும், தங்கத்தின் மதிப்பாக பார்க்கும் போது பெரிய அளவில் லாபம் ஏற நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். எனினும் தங்கம் வாங்கினால் சுபகாரியங்களுக்கு விரும்பிய போது எல்லாம் அணிய முடியும்.
அதேநேரம் தங்கத்தை முதலீடு நோக்கத்தில் வாங்குவோர், அதற்கு பதில் தங்கப்பத்திரம் வாங்கலாம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். 'சாவரின் கோல்ட் பாண்ட் என்று அழைக்கப்படும் தங்கப்பத்திரம் தபால் நிலையங்களில் மத்திய அரசால் விற்பனை செய்யப்படுகிறது, தங்க நகையோ, நாணயமோ அல்ல. மாறாக, தங்கத்தின் மதிப்பை உறுதிப்படுத்தும் பத்திரமாக விற்பனை செய்கிறது அரசு. இந்த தங்க பத்திரத்தை வருடத்திற்கு 6 முறை மத்திய அரசு தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகள் மூலம் வெளியிடுகிறது ஒரு நிதி ஆண்டில், 1 கிராம் தங்கம் முதல் 4 கிலோ தங்கம் வரை தங்க பத்திரமாக ஒருவர் வாங்க முடியும். அதிகபட்சமாக எட்டு ஆண்டுகள் வரை சாவரின் தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்ய அனுமதி உண்டு.
நீங்கள் தங்க நகை வாங்கினால் அதை மீண்டும் விற்கும் போது தேய்மானம் என்ற பெயரில் கணிசமாக போகும்.. ஜிஎஸ்டி வேறு வாங்கும் போது கொடுத்திருப்பீர்கள், செய்கூலி சேதாரமும் வாங்கும் போது கொடுத்திருப்பீர்கள், ஆனால் தங்கப்பத்திரத்தை வாங்கினால் ஆபரணத் தங்கத்தைப் போல தேய்மானம் கிடையாது. ஆபரணத் தங்க நகைகளைப் போல ஜிஎஸ்டி, செய்கூலி சேதாரம் இல்லை.. இவற்றுடன் கூடுதல் சிறப்பாக, தங்க பத்திரங்களுக்கு ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி கிடைக்கும். அதுவும் உங்கள் வங்கி கணக்கிலேயே நேரடியாக வரவு வைக்கப்படும். அதேநேரம் தங்கம் விலை ஏற ஏற உங்கள் தங்கப்பத்திரத்தின் மதிப்பும் அதிகரிக்கும். உங்களுக்கு உடனே அவசரத்திற்கு பணம் வேண்டும் என்றால் தங்க பத்திரத்தை வங்கியில் அடகு வைத்து கடன் பெற முடியும். அதேபோல் டீமேட் கணக்கு மூலம் வாங்கப்படும் தங்கபத்திரங்களை எப்போது வேண்டுமானாலும் விற்று வெளியேறவும் முடியும்.
இந்த தங்க பத்திரங்களில் முதலீடு செய்து எட்டு ஆண்டுகள் கழித்து விற்றால் கேபிட்டல் கெயின் டேக்ஸ் போட மாட்டார்கள். தங்கப்பத்திரத்தை யார் வேண்டுமானாலும் வாங்க முடியும் . 5 லட்சத்திற்கு தங்கப்பத்திரம் வாங்கியிருந்தால் இன்றைக்கு அதன் மதிப்பு அப்படியே இரண்டு மடங்கு அதிகமாக கிடைத்திருக்கும்..












Click it and Unblock the Notifications